.வேலன்:-வித்தியாசமான ப்ரவ்சர் -Baidu Spark Browser

Baidu Spark Browserஎன வித்தியாசமான பெயரில் உள்ள இந்த ப்ரவ்சர் 36 எம்.பி. கொள்ளளவில பலவித வசதிகளை கொண்டுள்ளது. இதன் முகவரி தளம் காண இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இணையத்தில் அடிக்கடி பயன்படுத்தும் இணைய பக்கங்களின் தம்ப்நெயில் வியு நமக்கு கிடைக்கும். தேவையானதை நேரடியாக கிளிக் செய்து பெறலாம். மேலும் இதில கூகுள் சர்ச் பாக்ஸம் இணைத்துள்ளார்கள். அதன் மூலமும் தேவையானதை தேடிப்பெறலாம். 

 இதன் வலது மேல்புறம் விதவிதமான ஸ்கின் டிசைன்கள் கொடுத்துள்ளார்கள். தேவையானதை கிளிக் செய்து நமது ப்ரவ்சரின் இடை முகப்பாக வைத்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் நாம் யூடியூபிலிருந்து வீடியோ பைலினை பார்க்கும் சமயம் நாம் விருப்பப்பட்டால் இதில் உள்ளீடாக உள்ள ப்ளேயரில் பார்க்கலாம். வீடியோவினை பதிவிறக்கம் செய்யவிரும்பினாலும் நேரடியாக டவுண்லோடு செய்துகொள்ளலாம். இதற்கென தனியாக நாம்  வீடியோ டவுண்லோடரை தேடிச்செல்ல வேண்டியதில்லை. அதுபோல டோரண்ட் பைல்கள் இருந்தாலும் இதின் மூலம் நேரடியாக டோரண்ட் பைல்கள் மூலம வேண்டிய பைலினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தனியே யூடோரண்ட்.மற்றும்;; பிட் டோரண்ட் போன்ற சாப்ட்:வேர்கள் தேவையிலலை. கீழே உள்ள விணடோவில் பாருங்கள்.


ஒரு இணையப்பக்கத்தில் நாம் குறிப்பிட்ட புகைப்படத்தினையோ தகவல்களையோ பெறவிரும்பினால் இதில் உள்ள கத்தரி சிம்பலை கிளிக் செய்தால நமக்கான விண்டோ கிடைக்கும் இதில் தேவையான படத்தினையோ - டெக்ஸ்ட் தகவல்களையோ தேர்வு செய்து அதில் மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்து பின்னர் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இணையத்தல் ஒரு பககத்தினை பார்க்கின்றோம். பின்னர் வேறு ஒரு இணைய பக்கம் பார்ப்பதற்கு நியூ டேபினை கிளிக் செய்து வேறு ஒரு விண்டோவில் பார்க்கின்றோம் மீண்டும் பழைய இணைய பக்கம் பார்ப்பதற்கு பின்னோக்கி டேபினை கிளிக் செய்யாமல் கர்சர் ரைட் கிளிக் செய்து வேண்டிய வசதிகளை நாம் சுலபமாக பெறலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

கர்சர் மூலமே Back.Forward.Reload;.Save us.Add Bookmark.View page sorse.Encoding.Print.Find Property Inspect Elements போன்ற வசதிகளை பெறலாம். இதனை இன்ஸ்டால் செய்து பழகிவிட்டால் அப்புறம் வேறு ப்ரவ்சரை நீங்கள் தேட மாட்டீர்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-நீங்கள் 40 வயதை கடந்தபின்பும் இளமையாக இருக்க

நாற்பது வயதை கடந்தபின்பும் சிலர் மனதளவில் இளமையாக இருப்பார்கள். அவர்கள்உடலளவிலும் என்றும இளமையாக இருக்க இநத புத்தகத்தில் எளிய வழிமுறைகள் சொல்லிஉள்ளார்கள். நீங்கள் 40 வயதை கடந்தவரா -அப்படியானால் அவசியம் இந்த புத்தகத்தினை படிக்கவும்.2 எம்.பி.க்கு குறைவான இந்த புத்தகத்தினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் 10 விதமான தலைப்புகளில் விரிவான கட்டுரை கொடுத்துள்ளார்கள்.ட கீழே உள்ள விண்டோவில் பார்க்கவும்.
இரவில் நாம் உணவு உண்டபின் பொரும்பாலும் காலை உணவினை தவிர்த்துவிடுவோம். அவ்வாறு செய்யாமல் காலை உணவினை அவசியம் உட்கொள்ளசொல்லி இதில் விளக்கி உள்ளார்கள்.கீழ்கண்ட அட்டவணைப்படி நாம் உணவு உண்ணவேண்டுமாம்.


எளிய உடற்பயிற்சிகளும் மருத்துவ குறிப்புகளும் எளிமையாக கொடுத்துள்ளார்கள்.அதுபோல 40 க்கு பிறகு வரக்கூடிய நோய்களும் அதற்கான மருத்துவ குறிப்பினையும் குறிப்பிட்டுள்ளார்கள். Mobi வகை பைலாக இதனை வெளியிட்டுள்ளார்கள். ;இதற்கான Mobi reader உங்கள் வசம் இல்லையென்றால் நான் ஏற்கனவே பதிவிட்டுள்ள பதிவிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும். தள முகவரி:- இங்கு கிளிக் செய்யவும்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-சுலபமான வீடியோ கட்டர்

இணையத்தில் விதவிதமான வீடியோ கட்டர்கள் இருந்தாலும் பயன்படுத்த எளிமையான - சுலபமான வீடியோ கட்டராக இந்த BANDICUT வீடியோ கட்டர் உள்ளது. 9 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.

இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ளஒப்பன் பைல் கிளிக் செய்து நம்மிடம் உள்ள வீடியோபைலினை தேர்வு செய்யவும்.எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை தேவையோ அந்த இடத்தினை இதில் கீழே உள்ள ஸ்லைடரை கொண்டு தேர்வு செய்யவும்.வீடியோவில் குறிப்பிட்ட பகுதி ஒளிபரப்பாகும் துல்லியமான நேரம் தெரிந்தாலும் நாம் நேரம் மூலம் இதனை தேர்வு செய்யலாம்.இறுதியாக இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு சில வினாடிகள் காத்திருப்பிக்கு பின் கீழ்கண்ட விண்டோ தோன்றும்.


இதில் உள்ள பிளே பட்டனை கிளிக்செய்தால் நாம் தேர்வு செய்த வீடியோவினை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...