வேலன்:-தமிழுக்கான அருமையான இணையதளம்.

தமிழுக்காக நிறைய இணைய தளங்கள் இருந்தாலும் சில இணைய தளங்கள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுவதாக இருக்கின்றது. அந்த வகையில் Tamil Cube என்கின்ற பெயருடைய இந்த இணையதளம் மிகமிக சிறப்பானதாக உள்ளது.இந்த இணைய தளம் காண இங்கு கிளிக் செய்யவும். தமிழ் நாட்காட்டி.அகராதி.மொழிபெயர்ப்பு.தூய தமிழ் பெயர்கள்.ஜாதகம்.பொது அறிவு,காரண ஆய்வு,கணித அறிவு,யூபிஎஸ்சி.டிஎன்பிசி.தமிழ் நூல்கள் என பல்வேறு டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இனி இதில் வரும் ஒவ்வொரு தலைப்பினையும் விரிவாக காணலாம்.
  முதலில் உள்ளது தமிழ் நாட்காட்டி. அதில் அன்றைய தேதி நாட்காட்டியையும் அந்த மாத்த்திற்கான தமிழ்நாட்காட்டியையும் இணைத்துள்ளார்கள். அந்த மாத்த்திற்குரிய விசேஷங்கள் இதன் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


அடுத்ததாக தமிழ் மற்றும் சான்ஸ்கிரிட் புத்தகங்கள் இணைத்துள்ளார்கள். திருக்குறள் முதல் பாரதியார் பாடல்கள்.நாவல்கள்.கவிதைகள்.அகராதிகள் என முன்னூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை பதிவிறக்கம் செய்திடும் வகையில் அறிமுகப்படுத்திஉள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் அடுத்ததாக அகராதி கொடுத்துள்ளார்கள். இதில் தமிழ்,தெலுங்கு.மலையாளம்.கன்னடம்.குஜராத்தி.ஒரியா.இந்தி.சைனா.பெங்காலி.சிங்களம்.அரபி.ஜப்பானிய மொழிகளுக்கான அகராதி கொடுத்துள்ளார்கள். நீங்கள் இதில் உள்ள் சர்ச் பாக்ஸில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் அதற்கான விளக்கம் நீங்கள் எந்த மொழியில் விரும்பினீர்களோ அந்த மொழியில் உங்களுக்கு விடை கிடைக்கும். நான் Tamil Computer என தட்டச்சு செய்தேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


மொழி பெயர்ப்பு என்கின்ற காலத்தில் உங்களுக்கு தமிழ.தெலுங்கு.மலையாளம்.கன்னடம்.குஜராத்தி.பெங்காலி.மராட்டி.சான்ஸ்கிரிட்.பஞ்சாபி.சிங்கள.நேபாளி.சைனா மற்றும் ஜப்பானிய மொழிகளில் நாம் மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை தட்டச்சு செய்தால் அதற்குரிய தமிழ்வார்த்தை உங்களுக்கு விடையாக கிடைக்கும். நான் இதிலும் Tamil Computer  என ஆங்கிலத்தில தட்டச்சு செய்தேன் எனக்க தமிழ்கம்யூட்டர் என தமிழில வந்தது. தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் இந்த டிரான்ஸ்லேட்டர் மூலம் ஆங்கில்தில் தட்டச்சு செய்து அதனை தமிழாக மாற்றி பின்னர் காப்பி பேஸ்ட் செய்வதன் மூலம் ஜிமெயில் உட்பட இணைய பயன்பாடுகள் அனைத்தையும் எளிதில் தமிழில நிறைவேற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

குழந்தைகளுக்கான அழகான பெயர்கள் வைக்க இந்த டேப் பயன்படுகின்றது. இதில தமிழ்.தெலுங்கு.மலையாளம்.கன்னடம்.முஸ்லீம்.குஜராத்தி.பெங்காலி.நேபாலி.சன்ஸ்கிரீட் போன்ற மொழிகளுக்கான தூய பெயர்கள் ஆண் பெண் குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார்கள். நமது குழந்தைகளுக்கு தூய தமிழ்பெயர் வைக்க இது மிகவும் பயன்படும். இதில் உள்ள தமிழ்மொழியின் ஆரம்ப எழுத்தை கிளிக் செய்திட அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் அனைத்து பெயர்களும் நமக்கு கிடைக்கும்.போனஸாக அநத எழுத்துக்குரிய நியூமராலஜி எண்ணும் நமக்கு கிடைக்கும்.கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.


அடுதத டேப்பில் தமிழ் ஜாதகம்.தமிழ் நாட்காட்டி.எலி ஜோதிடம்.கிளி ஜோதிடம். தமிழ் ஜாதகம்.ராசி.நட்சத்திரம்.லக்னம்.பஞ்ஞாங்கம்.சனி பெயர்ச்சி.குரு பெயர்ச்சி.ராசி பலன்.தெலுங்கு ஜாதகம்.மலையாள ஜாதகம். நியூமராலஜி என 13 வகைகள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்து பொது அறிவு டேப் கொடுத்துள்ளார்கள். அதில் ஜெனரல் நாலேட்ஜ். வரலாறு.அறிவியல்.கணிதம். புவியியல். கணிணி அறிவியல்.தமிழ்.ஆங்கிலம்.இந்திய அரசியல் நேர் முகதேர்வுக்கான கேள்வி பதில்கள் என நிறைய தலைப்புகள் கொடுத்தள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒவ்வொரு தலைப்பிலும் எண்ணற்ற கேள்விகளும் அதற்கான விடைகளும் கொடுத்துள்ளார்கள். உங்கள் பொது அறிவினை வளர்த்துக்கொள்ள இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.

அடுத்ததாக உள்ள டேப்பில் அப்டிடியூட் கணக்குகள்கொடுத்துள்ளார்கள். ஒவ்வொரு பிரிவிலும் எண்ணற்ற கண்ககுள் கொடுத்துள்ளாரக்ள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

அடுத்ததாக Reasoning என்கின்ற தலைப்பில காரண ஆய்வு கேள்விகள் கொடுத்துள்ளார்கள். ஒரு விடை வந்தால் அது எவ்வாறு விடை கிடைக்கும் என்பதனை ஆய்வு செய்து யூகித்து நாம் விடைஅ ளிக்கவேண்டும. அப்ஜக்டிவ் டைப் எனப்படும் கேள்விகளுக்கான விடைகள் கொடுத்திருப்பார்கள். நாம் விடையை டிக் செய்திட வேண்டும்.
அடுத்த டேப்பில் யூபிஎஸ்சி தேர்வுக்கான வினாக்களை கொடுத்துள்ளார்கள் 


அநத தேர்வு எழுதுபவர்களுக்கு அது மிகவும் பயன்தர கூடியதாக இருக்கின்றது.அடுத்த டேபில் தமிழ்நாடு தேர்வாணயத்தால் நடத்தப்படுகின்ற டிஎன்பிஎஸ்சி தேர்வு க்கான வினா விடைகள் கொடுத்துள்ளார்கள்.இதில் 
பொது அறிவு வினாவிடை,தமிழ் கேள்வி பதில்கள்.தமிழ் இல்ககண வினாக்கள்.வரலாற்று கேள்வி பதில்கள் என நான்கு வித தலைப்புகளில் கொடுத்துள்ளார்கள்.
இறுதியாக கொடுத:துள்ள தலைப்பில் உஙகளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன. 2015 வருடத்திற்கான தமிழ் டியூஷன் உங்களுக்கு தேவையென்றால் இங்கு பதிவு செய்துகொள்ளலாம். மேலும்
தமிழில் நீங்கள் விரும்பி கேட்கின்ற பக்தி பாடல்கள் கெர்டுத்துள்ளார்கள். ஆன்லைன் எப்.எம். வசதி கொடுத:துள்ளார்கள். தமிழ் புதினங்கள் எனப்படும் தமழ் நாவல்கள் இடம்பெற்றுள்ளன்.மேலும் வெற்றிக்கான தாரக மந்திரம் விளங்கங்களுடன் கொடுத:துள்ளார்கள். தமிழில் உள்ள பிளாக்குகள் பற்றிய விவரம்கொடுத்துள்ளார்கள்.தமிழ் பழமொழிகள்.இணைய இணைப்பின் மூலம் தமிழ் கற்றல்.தமிழ் பாட புத்தகங்கள் மற்றும் தமிழ் மூலம் எளிதாக ஆங்கிலம் பயிலுதல் போன்ற விவரங்களும் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருஙகள்.

ஒரு இணையதளத்தில் இவ்வளவு விவரங்கள் கொடுத்துள்ளது பெரிய விஷயம். நீங்களும் ஒவ்வொன்றாக பயன்படுத்திப்பர்ருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ கட்டர்.

வீடியோ கட்டர்.

நம்மிடம் உள்ள வீடியோவை எந்த அளவுகளில் வெட்ட விரும்புகின்றோமோ அந்த அளவிற்கு அதனை வெட்டி எடுக்கலாம்.இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இனஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்க்ணட விண்டோ ஓபபன் ஆகும்.இதிலும் நீங்கள் டிராக அன்ட் டிராப் முறையில் வீடியோவினை இழுத்துவந்துபோடவும்.
இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தியோ நேரத்தினை தேர்வு செய்தோ தேவையான அளவினை தேர்வு செய்யுங்கள். பின்னர் இதில் உள்ள Save this Scence கிளிக் செய்யவும். உங்களுக்கான வீடியோ கட் செய்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

நீங்கள் கட்செய்த பைலானது உங்களுக்கு கிடைக்கும். பயனப்டுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் 
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் ரீடர்-Sorax Reader.

பிடிஎப் வகை பைல்களை படிக்க மற்றும் ஒரு சாப்ட்வேராக இது உள்ளது. போர்டபிள் வெர்ஷனாக இது உள்ளதால் தேவைப்படும் சமயம் மட்டும் நாம் பயன்படுத்திக்கொள்ளளலாம். 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டர்ல் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் முதலில் உள்ள பைல்கிளிக் செய்து நீங்கள் படிக்க விரும்பும் பிடிஎப்பைலினை தேர்வு செய்யவும். பின்னர் நீங்கள் பிடிஎப் புத்தகத்தினை ஒவ்வொரு பக்கமாக பார்ககவிரும்பினால் இிதில் உள்ள பேஜ் கிளிக் செய்தால் போதுமானது.இதில் வேண்டிய பக்கம் மட்டுமோ அல்லது முழு பக்கங்களையோ பிரிண்ட் செய்துகொள்ளும் வசதி உள்ளது. மேலும் இதில் உள்ள ஸ்கோரல் கிளிக் செய்தால் நமக்கான விண்டோவானது மெதுவாக நகர்ந்து ஒவ்வொரு பக்கமாக நமக்கு டிஸ்பிளே ஆகும். பிடிஎப் பைலினை விரைந்து பார்வையிட இதனை பயன்படுத்தலாம்.மேலும் இதில் உள்ள டூல்ஸ் டேபினை கிளிக் செய்து வரும் விண்டோவில் விரும்பிய பக்கத்தினை நாம் ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம். இதில் உள்ள விண்டோ டேபினை கிளிக் செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை ஒப்பன் செய்து தனிதனியே படிக்கலாம். இதன் மூலம் நாம் ஒன்றுக்கும் மேற்பட்ட பைல்களை சுலபமாக ஒப்பீடு செய்து கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஆல்இன்ஒன் கன்வர்ட்டர்

ஆல் இன் ஒன் கன்வர்ட்டர் பெயருக்கு ஏற்றவாறு வேண்டியவாறு மாற்றுவதற்கு இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 20 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் வலதுபுறம் உள்ள விண்டோவில் பாபுலர் டிவைஸ்களான I Pod.IPhone.IPad.PSP.மொபைல்போன் வகைகள்.ஆப்பிள்போன் வகைகள்.பிஎம்பி டிவைஸ்கள்.டிவிடி,விசிடி கேம்கன்சோல்.பொதுவான வீடியோ பைல்கள்(கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்)எச்டி வீடியோ பைல்கள்.பொதுவான ஆடியோ பைல்கள் ரிங்டோன்கள் என எது தேவையோ அதனை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 நான் வீடியோவினை டிவிடியாக மாற்றும் ஆப்ஷனை தேர்வு செய்துள்ளேன் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 சிலநிமிட காத்திருப்பில் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 நாம் சேமித்துவைத்த இடத்தில் சென்று பார்த்தால் நமக்கான டிவிடி வீடியோ இருப்பதை காணலாம்.


இதுபோல உங்களுக்கு எதுதேவையோ அதனை சுலபமாக மாற்றிக்கொள்ளலாம்.; பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அன்இன்ஸ்டாலர்.

போகவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் சாப்ட்வேர்களை சுலபமாக அன்இன்ஸ்டால் செய்வதுமட்டுமல்லாமல் ரிஜிஸ்டரியிலும் அதனுடைய சப்போட்ரிங் பைல்களை நீக்கிட இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது. 16 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமது கணிணியில் நிறுவியுள்ள அப்ளிகேஷன்கள் வரிசையாக கிடைக்கும். இதில் எந்த எந்த அப்ளிகேஷன்களை நாம் அன்இன்ஸ்டால் செய்திட விரும்புகின்றோமோ அதற்கு எதிரே உள்ள ரேடியோ பட்டன் மூலம் தேர்வு செய்யவும்.பின்னர் நடுவில் உள்ள பச்சை நிற பட்டனை கிளிக் செய்யவும்.உங்களுக்கான எச்ச்ரிக்கை செய்தி வரும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உங்களுக்கான அப்ளிகேஷன்கள் ஸ்கேன் ஆகும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
இதில் ரிஜிஸ்டரில் உள்ள பைல்கள் நமக்கு தெரியவரும்.
அனைத்தையும் தேர்வு செய்து டெலிட் கொடுத்துவிடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அடம்பிடத்த அப்ளிகேஷன்கள் முழுவதுமாக நீங்கிவிட்டதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஜாதகம் பார்க்க

உங்கள் பிறந்த தேதி ,இடம்,நேரம் கொண்டு ஜாதகப்பலன்கள் அறிந்து கொள்ள இந்த இணையதளம் உதவி செய்கின்றது.  ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று பஞ்சாங்கம் வெளியிடுவார்கள். இநத இணையதளத்தில் அன்றைய பஞ்ஞாங்க குறிப்புகளை அறிந்துகொள்ளலாம். இந்த இணைய தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இந்த இணையதளம் ஒப்பன் ஆகியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் அன்றைய மாத்திற்குரிய பஞ்சாங்க விவரங்கள் கொடுத்துள்ளார்கள். நீங்கள் அன்றைய தேதிக்கான திதி.நட்சத்திரம் சூரிய உதயம் சூரிய அஸ்தமனம்.சந்திர உதயம்.சந்திர அஸ்தமனம். அன்றைய தேதிக்கான ராகுகாலம்.எமகண்டம்.குளிகை முதலியவற்றை அறிந்துகொள்ளலாம்.இது தவிர 9 விதமான பஞ்சாங்க குறிப்புகளும் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்த டேப்பில் இநது காலண்டர் முதல் தீபாவளி காலண்டர் வரை 13 வகையான காலண்டர்கள் கொடுத்துள்ளார்கள். இந்து காலண்டரில் இந்துக்களின் பண்டிகைகளும் அந்த பண்டிகைகள் வரும் தேதிகளையும் கொடுத்துள்ளார்கள். தீபாவளி காலண்டரில் தீபாவளிக்கு முன்பின் வரும் ஐந்து விரதங்களையும் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
அடுத்துள்ள டேபில் லக்ன டேபிள் முதல் கொண்டு கௌரி பஞ்சாங்கம் வரை கொடுத்துள்ளார்கள். 
அன்றைய தினத்தில் எந்த லக்கனம் எந்த நேரம் முதல் எந்த நேரம் வ்ரை வருகின்றதோ அதனை நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்துள்ள டேபிள் சங்கடசதுர்த்தி.ஏகாதசி.பௌர்ணமி விரதம்.அமாவசை தினம்.பிரதேச தினம்.சிவராத்திரி.அஸ்டமி.நவமி.கிருத்திகை கந்த சஷ்டி போன்ற விவரங்கள் கொடுத்துள்ளார்கள். விரதம் இருப்பவர்களும் பண்டிகை கொண்டாடுபவர்களும் இதனை எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள் ள விண்டோவில் பாருங்கள்.
அடுத்துள்ள டெபில் இந்து பண்டிகைகளும் தமிழ் பண்டிகைகளும் தசரா.பொங்கல் மலையாள பண்டிகைகளின் விவரங்களும் கொடுத்துள்ளார்கள்.
அடுத்துள்ள டேபில் மெஹந்தி டிசைன்கள் ரங்கோலி கோலங்கள்.பண்டிகை வாழ்த்துஅட்டைகள்.கிருஷணா.அனுமான்.பால கணேஷ் போன்ற விவரங்களும் கொடுத்துள்ளார்கள்.
ரங்கோலி டிசைனில் உள்ள தேர் படங்கள் கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
அடுத்துள்ள டேபில் மெபைல் அப்ளிகேஷன்கள் கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள ராகுகால டேபிளில் சூரிய உதயத்திலிருந்து மறையும் வரை அருமையான படம் கொடுத்துள்ளார்கள்.
பெரும்பாலும் ராகுகாலங்களை நாம் 1.30 மணிநேரம் கணக்கிடுவோம். உதாரணத்திற்கு வியாழக்கிழமை ராகு காலம் 1.30 முதல் 3.00 வரை கணக்கிடுவோம்.ஆனால் துல்லியமான நேரத்தின் படி 13.20 க்கு ஆரம்பித்து 14.45க்கு முடிவடைகின்றது.  
அதுபோல் முன்னோர்கள் இறந்துவிட்டால் அவர்களின் திதி அடுத்தவருடத்தில் எந்த மாதத்தில் வருகின்றது என இதில் உள்ளீடு செய்தால் எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பெண் மாப்பிள்ளை திருமண பொருத்தம் பார்க்க இதில் ;கொடுத்துள்ளார்கள். இதில் பிள்ளையுடைய பிறந்த குறிப்பு.பெண்ணினுடைய பிறந்த குறிப்பு குறிப்பிட வேண்டும. இதில் உள்ள கால்குலேட் கிளிக் செய்திட மணமக்களுக்கு எவ்வளவு சதவீதம்பொருத்தம் வருகின்றது என அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நீங்கள் பிறந்தபோது எந்த நட்சத்திரம் என இதில் உள்ள கால்குலேட்டர் மூலம் அறிநது கொள்ளலாம்.
உங்கள ஜாதகப்பலன்.காலசர்ப தோஷம்.பிறந்த நட்சத்திரம்.உங்கள் நட்சத்திறத்திற்கு ஏற்ப பெயர்கள்.திருமண பொருத்தம்.உங்கள் ராசி.உங்கள் லக்கனம். உட்பட ஓன்பது வகை ஜாதக சம்பந்தமான பலன்கள்அறிந்துகொள்ளலாம்.
ஒவ்வான்றையும் விளக்கமாக பார்த்துக்கொண்டே போனால் அது நீண்டுகொண்டே செல்லும் பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-புகைப்பபடங்களை சுலபமாக டிசைன் செய்திட

போட்டோஷாப் துணையில்லாமல் புகைப்படங்களில மாற்றங்கள் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. படங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப எபெக்ட்டுகள் கொண்டுவருவதற்கும் புகைப்படங்களை சுழற்றுவதற்கும்,வேண்டிய அளவிற்கு கொண்டுவருவதற்கும் பிரைட்நஸ்.கான்ட்ராஸ்ட் கொண்டுவருவதற்கும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.15 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இனஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நமக்கு தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்யவும்.
 இதில் இடதுபுறம் 16 எபெக்ட்டுகள் கொடுத்துள்ளார்கள்.தேவையானதை கிளிக் செய்தால் புகைப்படததில் அந்த மாறுதல் உடனே நடக்கும்.
இதில் இரண்டு பாப்அப் மெனு கொடுத்துள்ளார்கள்.புகைப்படததில் சர்கிள் லைட்.டார்க்.உட்பட 4 க்கு மாறுதல்கள் கொடுத்துள்ளார்கள் தேவைப்பட்டால் புகைப்படத்தி ல்அந்த மாறுதலை நாம் கொண்டுவரலாம்.கீழே உள்ளள விண்டோவில் பாருங்கள்.
 அதனைப்போல புகைப்படங்களுக்கு ப்ரேம் டிசைன்கள் 7 கொடுத்துள்ளார்கள் தேவைப்பட்டால் அதில்ஒன்றினை தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 புகைப்படங்களை கிராப் செய்தல்,திருப்புதல்.இடதுவலது புறமாக மாற்றுதல்.பிரைட்னஸ் கான்ட்ராஸ்ட் கொண்டுவரலாம்.புகைப்படத்தினை வேண்டிய சைஸ் கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 ப்ரேம் டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே
இது முற்றிலும் இலவசமே...பயன்படுத்திப்பர்ருங்கள்கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...