வேலன்:-மின்கட்டண அட்டவணை.

மின்சாரத்தை தொட்டால்தான் நமக்கு ஷாக் அடிக்கும். ஆனால் கடந்த ஒரு வாரமாக மின்கட்டணத்தை பார்ப்பவர்கள் அனைவருக்கும் ஷாக் அடிக்கின்றது. தொடாமலே ஷாக் அடிக்கும் அளவிற்கு என்ன உள்ளது என்கின்றீர்களா? உயர்ந்துள்ள மின்கட்டணங்கள் தான்.கரண்ட் எங்கே ஒழுங்காக வருகின்றது.. இதில் மின்கட்டணம் எவ்வளவு வந்துவிடபோகின்றது என கேட்கின்றீர்களா? 10 மணிநேரம் மின்தடை செய்து 14  மணிநேரம் மின்சாரம் மின்சார பயன்பாட்டிற்கு எவ்வளவு வந்துவிடப்போகின்றது என்கின்றீர்களா ? கீழே உள்ள கட்டண விகிதத்தை பாருங்கள். நெருக்கிய உறவினர் - நண்பர் திடீரென்று மறைந்துவிட்டால் நம்மால் அவரின் இழப்பை தாங்க முடியாது. ஆனால் அவர்களே உடல் நிலை சரியில்லை - தேறுவது கடினம் என தெரியவரும்போது நமது மனது தன்னால் அந்த துயரத்தை தாங்கிகொள்கின்றது. அதுபோல் உங்களுக்கான மின்கட்டணம் திடீரென்று அதிகமாக வந்துஉள்ளது என நீங்கள் அதிர்ச்சி அடைந்துவிட கூடாது என்கின்ற அக்கறையில் இந்த அட்டவணையை பதிவிடுகின்றேன். எவ்வளவோ பார்த்துவிட்டோம் இது எம்மாத்திரம் என்கின்றீர்களா? கவலைப்படாதீர்கள்....இதுவும் கடந்துபோகும்..
சரி கட்டண விவரம் பற்றி கீழே பார்க்கலாம்.
வீட்டு இணைப்புகளுக்கானது:-
முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.)

இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)

மூன்றாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 2.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 3.00.
நிலைக்கட்டணம் ரூபாய் 30.00.
(நீங்கள் 200 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த மூன்றாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 200 யூனிட் வரை 400.00+ 10 யூனிட்டுக்கு 3.00 வீதம் 30.00+ கூடுதல் கட்டணம் ரூ,30.00 ஆகமொத்தம் ரூபாய் 460.00 செலுத்தவேண்டும்.)

நான்காம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 3.00.
201-500 யூனிட் வரை ரூபாய் 4.00.
500 க்கு மேல் ரூபாய் 5.75.
நிலைக்கட்டணம் ரூபாய் 40.00
(நீங்கள் 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த நான்காம் நிலைக்கு வந்துவிடுவீர்கள். நீங்கள் 510 யூனிட் உபயோகித்தால் 
முதல் 200 யூனிட்டுக்கு 600.00+ அடுத்த 300 யூனிட்டுக்கு 4 ரூபாய் வீதம் 1200.00+ 10 யூனிட்டுக்கு 5.75 வீதம் ரூபாய் 57.50+கூடுதல் கட்டணம் ரூபாய் 40.00 ஆகமொத்தம் ரூ.1898.00 நீங்கள் செலுத்தவேண்டும்)

கடைகளுக்கானது:-

1-100 யூனிட் வரை ரூபாய் 4.30.
100 யூனிட்டுக்கு மேல உபயோகித்தால் 1 யூனிட் விலை ரூபாய் 7.00 மட்டுமே கூடுதலாக 5 சதவீதம் சர்வீஸ் சார்ஜ் மற்றும் 1 கிலோ வாட்டிறகு 120 ரூபாய் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

உங்களுக்கான அட்டவணை கீழே:-

வீடு இணைப்புக்கானது.
கடை இணைப்புக்கானது.எனது கருத்து:-
நீங்கள் நான்கு ஸ்லாப்களில் (நிலைகள்)எந்த ஸ்லாப்பில் வருகின்றீர்களோ அதை தாண்டாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.உதாரணத்திற்கு நீங்கள் 210 யூனிட் உபயோகித்தால் நீங்கள் 460.00 ரூபாய் செலுத்தவேண்டும்.. கூடுதல் 10 யூனிட்டுக்கு 140.00 ரூபாய் அதிகம் செலுத்தவேண்டும்.அப்போழுது உங்களுக்கு ஒரு யூனிட் விலை 14.00 ரூபாயாக மாறிவிடுகின்றது.உங்கள் மீட்டரில் 150 யூனிட் வரும் சமயம் முதல் சிக்கனத்தை கடைபிடியுங்கள். அவசியமில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி பணத்தை செலவழிக்காதீர்கள்.
தங்கள் மேலான கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-தமிழில் எழுதியதை படித்து காண்பிக்க

பெங்களுரில் எனக்கு நண்பர் ஒருவர் இருக்கின்றார். அவருக்கு தமிழ் பேச தெரியும் - படிக்க தெரியாது.பேசுவதை புரிந்துகொள்வார்.அவர் என்னிடம் உங்கள் பதிவுகள் எனக்கு படிக்க தெரியவில்லை.எனக்கு படித்து காண்பித்தால் நன்றாக இருக்கும் என குறிப்பிட்டார். அவருக்கான பதிவு இது. ஆங்கிலத்தில் எழுதியதை படித்துகாண்பிக்கும் சாப்ட்வேர் உள்ள்து. ஆனால் தமிழில் அதுபோல் சில சாப்ட்வேர்கள்தான் உள்ளது.இன்றைய பதிவில் அந்த இணையதளத்தினை பற்றி பார்க்கலாம். அந்த தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் படிக்க விரும்பும் தகவலை இதில் உள்ள கட்டத்தில் பேஸ்ட் செய்து சப்மிட் செய்யுங்கள். உங்களுக்கு சில நிமிடங்கள் காத்திருத்தலுக்குபின் உங்களுக்கு கீழ்கண்ட தகவல் கிடைக்கும். 
Speech for your input text has been synthesized. 
Please click here to download the synthesized speech file.
இதில் உள்ள click here என்பதனை கிளிக் செய்ய 
 உங்களுக்கான ஆடியோ பதிவு துர்ய தமிழில் கேட்கும். இதன் மூலம் நீங்கள் கேட்க விரும்பிய ஆடியோவினை தமிழில் கேட்டு மகிழலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கீபோர்டினை லாக் செய்ய

சில குழந்தைகள் சுட்டிதனம் மிகுந்ததாக இருக்கும். வீட்டிற்கு வரும் நண்பர்கள் உறவினர்கள் குழந்தைகள் சுட்டி தனம் மிக்கதாக இருக்கும். அவ்வாறான குழந்தைகளுக்கான சாப்ட்வேர் இது.1 எம்.பி.க்குள் உள்ள  இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் கீ போர்டினை நாம் லாக் செய்துவிடலாம். பிறகு எந்த கீயும் கீபோர்டில் வேலை செய்யாது.இதில் நாம கீபோர்ட் லாக் சிலைடரை நகர்த்த ஒவ்வொரு ஆப்ஷனாக நமக்கு கிடைக்கும்.கீபோர்டில் எந்த கீயை வேண்டுமானாலும் நாம் லாக் செய்துவிடலாம். தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து பின்னர் ஓ.கே.செய்யுங்கள்.இப்போது உங்களுக்கு உங்கள் கீபோரட் வேலை செய்யாது மீண்டும் நீங்கள் லாக்கினை ரிலீஸ் செய்தால்தான் கீபோர்ட் வேலை செய்யும்.பயன்படுத்திப்பாருங்கள்..
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-எளிதில் அறிந்துகொள்ள ஆங்கில இலக்கணம்.

பள்ளிகள் ஆரம்பித்துவிட்டார்கள். இனி குழந்தைகள் விளையாட்டுக்களை மறந்து பாடங்களை படிக்க ஆரம்பிப்பார்கள். இன்றைய பதிவில் ஆங்கிலம் பற்றி அறியலாம். ஆங்கிலத்தில் புலமை பெற இலக்கணம்அவசியம். அந்த இலக்கணம் பற்றி நமக்கு - குழந்தைகளுக்கு எளிமையாக அறிந்துகொள்ள இந்த புத்தகம் சொல்லிக்கொடுக்கின்றது.6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து ஒப்பன்  செய்தால் கீழ்கண்ட பாடங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
இதில் இலக்கணம் என்றால் என்ன? capital letter.Nounds.Pronouns.Adjectives.Determiners.Verbsand Tenses.Subject -Verb.Adverbs.Prepositions.Conjections.Interjections.Sentences.Punctuation என பதினான்கு தலைப்புகளில் கொடுத்துள்ளார்கள்.
நான் Sentences தேர்வு செய்துள்ளேன்.

குழந்தைகள் எளிதில் தெரிந்துகொள்ளும் வண்ணம் படங்களுடன் விரிவான விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள்.
படித்துப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோ காலேஜ் மேக்ஸ்.

முப்பெரும் விழா கேள்விப்பட்டிருப்போம். மூன்று விதமான பணிகளை செய்யும் இந்த சாப்ட்வேரினை எவ்வாறு குறிப்பிடுவது. விதவிதமான வாழ்த்து அட்டைகள்.காலண்டர்கள்.வால்பேபப்ர்கள் என மூன்று வெவ்வெறு டிசைன்களை இந்த சின்ன் சாப்ட்வேர் மூலம் நாம் எளிதில் கொண்டுவரலாம்.36 எம்பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸடால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.மூன்று விதமான பணிகளில் நமக்கு தேவையானதை தேர்வு செய்யவும். நான் கிரிட்டிங்கார்ட் எனபடும் வாழ்த்து அட்டையை தேர்வு செய்துள்ளேன்.
 இப்போழுது நிறைய டெம்ப்ளேட்டுகளுடன் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான டிசைனை தேர்வு செய்யவும்.
 இப்போழுது இந்த விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமது கணிணியில் உள்ள போட்டோக்களை தேர்வு செய்யவும்.
இப்போழுது நமக்கு கிரிட்டிங்கார்ட் ரெடி. இதில் Shuffle முறை கொடுக்கப்பட்டுள்ளதால் தேவையான டிசைன் நமக்கு வரும் வரை பட்ங்களை மாற்றிககொண்டே இருக்கலாம்.இறுதியாக சேவ் செய்வதோ நண்பர்களுக்கு இ-மெயில் அனுப்பவதோ செய்யலாம். 
 இதனைப்போலவே காலண்டர் தயாரிக்கவும் செய்யலாம். காலண்டர் டிசைனை நாம் தேர்வு செய்துகொள்ளவேண்டும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
முன்பு கிரிட்டிங்கார்ட்டுக்கு செய்த வழிமுறைகளே இதற்கும் செய்யவேண்டும்.  கீழே வந்துள்ள காலண்டர் டிசைனைன பாருங்கள். 
 நேரடியாக இந்த சாப்ட்வேரின் மூலம் அனைத்துப்பணிகளையும் செய்வதுடன் தேவையான டெப்ள்ளேட் டிசைன்கள் -ப்ரேம்கள் எளிதில் கொண்டுவரலாம்.
 சில படங்களை கொண்டு நான் செய்த டிசைன்கள் கீழே:-


இது 30 நாள் டிரையல் விஷனாக கொடுத்துள்ளார்கள். விருப்பப்பட்டால் நீங்கள் முழு சாப்ட்வேரினையும் வாங்கிக்கொள்ளலாம். இதன் இணையதள முகவரி காண இங்கு கிளிக் செய்யவும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பைல்கள் -போல்டர்களை பாஸ்வேர்ட்கொடுத்து பாதுகாக்க

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பர்சனல் தகவல்கள் இருக்கும். அதை மற்றவர்கள் பார்பதை விரும்பமாட்டார்கள். நாம் நமது தகவல்களை இவ்வாறு மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைத்துவைக்கலாம்.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த சாப்ட்வேரினை நீங்கள் இன்ஸ்டால் செய்யும் சமயமே உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள கொடுக்கப்போகும் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்யவும் ( இந்த பாஸ்வேர்ட் தான் உங்கள் அனைத்துப்பைல்களுக்கும் உண்டான பாஸ்வேர்டாகையால் இதனை கவனமாக தட்டச்சு செய்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்)

இப்போழுது நீங்கள் இந்த சர்ப்ட்வேரினை ஓப்பன் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் மறைக்கவேண்டிய பைலையோ - போல்டரையோ தேர்வு செய்யுங்கள்.இதன் வலதுபுறம் உங்களுக்கு தேவையான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தேவையானதை தேர்வு செய்துகொண்டு ஓ.கே.தாருங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஓ.கே.கொடுத்து வெளியேறுங்கள். இப்போழுது நீங்கள் உங்கள் சாப்ட்வேரினைன திறக்க உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் சாப்ட்வேரின் பாஸ்வேர்டினை கொடுத்தபின்னர்தான் உங்களுடைய பைல் ஓப்பன் ஆகும்.
இதன் மூலம் மற்றவர்கள் பார்வையிலிருந்து உங்கள் பைல்களை போல்டர்களை மறைக்கலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-டிரைவ் ஐ-கான் மாற்ற

விதவிதமான சின்ன சின்ன சாப்ட்வேர்களில் இதுவும் உள்ளது. நாம் பயன்படுத்தும் டிரைவ் ஐ-கான்களை விருப்பபடி நாம் மாற்றிக்கொள்ளலாம். கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் தேவையான டிரைவினை தேர்வு செய்து விருப்பமான ஐ-கானை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு அதன் ப்ரிவியு அதன் பக்கத்திலேயே தெரியும்.இறுதியாக அப்ளை கொடுங்கள்.கீழே கொடுத்துள்ள டிரைவ் ஐகான் படத்தினை பாருங்கள்.
மற்றும ஒரு டிரைவ் ஐகான் படம் கீழே:-


விதவிதமான டிரைவ் ஐகான் படங்களை மாற்றி கம்யூட்டரை அழகுபடுத்துங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...