வேலன்:- உங்கள் சிபில் ஸ்கோரினை அறிந்துகொள்ள -Cibil Score.

வங்கியில் நாம் வரவு செலவு செய்கையில் நமது பணபரிமாற்றம் பாயிண்ட்டுகளாக சேரும்.அவ்வாறு சேரும் பாயிண்டுக்கள் பின்னர் சிபில் ஸ்கோராக கணக்கிடப்படும். நமது சிபில் ஸ்கோர் சுமார் 700 மேல்இருந்தால் நீங்கள் எந்த வங்கியில் இருந்தும் சுலபமாக கடனை பெறலாம். சிபில் ஸ்கோர் இருந்து வங்கியில் கடன் மறுக்கப்படுமானால் நீங்கள் வங்கியின் மேல் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசெல்லலாம். அந்த சிபில் ஸ்கோரினை கணக்கிட இந்த இணையதளம் உதவுகின்றது. இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இங்கு சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பான்கார்ட்டில் உள்ளவாறு உங்கள் விவரங்களை உள்ளீடுங்கள். உங்கள் ;இமெயில் முகவரி மற்றும் உங்கள் செல்பேசி எண்ணை குறிப்பிடுங்கள். உங்கள் மாத வருமானம் மற்றும் ஆண்டுவருமானம் பற்றி குறிப்பிடுங்கள்.இறுதியாக ஓ.கே.தாருங்கள்.உங்களுக்கு கீழ்க்ண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள ;போனுக்கு வந்த ஓடிபி எண்ணை இதில் குறிப்பிடுவும்.

இப்போது விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்கள் இமெயில்முகவரிக்கு வந்த எண்ணை இதில் உள்ளீடுங்கள்.பின்னர் சப்மிட் கிளிக் செய்திடுங்கள்.

சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் சிபில் ஸ்கோரானது கிடைக்கும்.

வங்கியில் உங்கள் பண பரிவர்த்தனை பொறுத்து உங்கள் சிபில் ஸ்கோரானது நிர்ணயிக்கப்படும். உங்கள் சிபில் ஸ்கோரினை காப்பி செய்து பின்னர் வங்கியில் கொடுத்து நீங்கள் கடன்தொகை பெறலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க

ஜிமெயிலில் நாம் தகவல்களை அனுப்புவோம்.பெறுவோம்.சேமித்து வைப்போம் என நிறைய ஆப்ஷன்கள் இருக்கும். அதனை நாம் நமது கணினியில்சேமித்துவைக்க இந்த  இணையதளம் உதவுகின்றது. இதனை காண இங்கு கிளிக்செய்யவும். இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்ள அனைத்து ஆப்ஷன்களும் இருக்கும். இதில் நீங்கள் விரும்பும் ஆப்ஷனை மட்டும் தேர்வு செய்யுங்கள்.

நான் ஜிமெயில் மட்டும் தேர்வு செய்துள்ளேன். அதில் உள்ள செலக்ட் ஐட்டம்ஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன்ஆகும்.

உங்கள் மெயிலில் உள்ள லேபிளில் தேவையானதை தேர்வு செய்திடுங்கள்.

பின்னர் நீங்கள் கீழே உள்ள ஓ.கே மட்டும் கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள டெலிவரி மெத்தட் கிளிக்செய்திடவும்.

உங்களுக்கான ஜிமெயில் கணக்கினை எந்த வகையில் சேமிக்க விரும்புகின்றீரகளோ அதனை தேர்வு செய்திடுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


 இறுதியாக மேனேஜ் அர்சிவ் கிளிக் செய்திடுங்கள்.

 இறுதியாக கீழே உள்ள Done கிளிக்செய்திடுங்கள்.
நீங்கள் தேர்வு செய்ததிற்கு ஏற்ப உங்களுக்கான ஜிமெயிலில் உள்ள விவரங்கள் சேமிப்பாவதை நீங்கள் காணலாம். இதன் மூலம் உங்கள் விவரங்களை நீங்கள் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ மற்றும் இணையதள வீடியோக்களை டிவிடியாக மாற்ற-video solo

நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை நாம் டிவிடியாக மாற்றவும்,வீடியோ பைல்களை பதிவிறக்கம் செய்து டிவிடியாக மாற்றவும் இந்த டசாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இணைய வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட அதன் யூஆர்எல் முகவரியை இதில் உள்ள விண்டோவில் பேஸ்ட் செய்திடவும். பின்னர் இதில் உள்ள அனலைஸ் கிளிக்செய்திடவும். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் வீடியோவானது இதில் பதிவிறக்கமாகி இருக்கும்.
 வீடியோ பைல்களை சிடியா டிவிடி யா என முடிவு செய்திடவும். மாற்ங்கள் ஏதும் செய்ய விரும்பினால் செய்திடவும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்
 டிவிடியின் முகப்பிற்கு ஏற்ப டெம்ப்ளேட்டுக்களை தேர்வு செய்திடவும்
வீடியோவில் பின்புற இசையை மாற்றுவதானால் மாற்றலாம் மேலும் பின்புல நிறங்களையும மாறறலாம் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 
 இறுதியாக நீங்கள் உங்கள் வீடியொவினை டிவிடியாக மாற்றவதானால் டிவிடி டிரைவில் டிவிடியை போட்டே ஓ.கே.தாருங்கள். நீங்கள் வீடியோவினை ஐஎஸ்ஓ பைல்களாக மாற்றவிரும்பினால் அதற்குரிய ரேடியொ பட்டனை கிளிக் செய்திடுங்கள்.


 சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் வீடியோவானது டிவிடியாக மாறியிருப்பதை காணலாம். பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஆதார் எண்கொண்டு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட -Aadhar Card Download

ஆதார்எண் மூலம் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்திட இந்த இணையதளம் உதவுகின்றது. இதன் இணையதளம் செலல இங்கு கிளிக் https://eaadhaar.uidai.gov.in/eaadhaar/#/ செய்யவும்.இந்த இணையதளம் சென்றதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் ஆதார் எண்  என்பதன் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும்.
 பின்னர் வரும் விண்டோவில் உங்கள் ஆதார் எண்ணினை உள்ளீடு செய்க.பின் உங்கள் பெயர் உங்கள் ஊர் பின்கோடு மற்றும் கேப்சாவினை தட்டச்சு செய்து என்டர் தட்டவும். நீங்கள் ஆதார் கார்ட் வாங்கும் சமயம கொடுத்த செல்பேசி எண்ணின் கடைசி நா ன்கு இலக்கங்கள் தெரியும். பின் உங்கள் செல்பேசியை பார்க்கவும்.
 அதில் வந்துள்ள ஒன்டைம் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்யவும். பின்னர் உங்களு;ககான ஆதார்கார்டானது பதிவிறக்கம்ஆகும்.

 பதிவிறக்கம் ஆனபின பிடிஎப் பைலாக வந்துள்ள அதனை ஓப்பன் செய்திட பாஸ்வேர்ட கேட்கும்.
 அதில் உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்தையும் நீங்கள் பிறந்த வருடத்தின் நான்கு எண்ணினையும் அதில் தட்டச்சு செய்யவும்.
உங்களுக்கான ஆதார்கர்ட் ஒப்பன் ஆகும். அதனை தனியே நீங்கள் சேமித்து வைத்தக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...