வேலன்:-MOBI வகை பைல்களை படிக்க

இணையங்களில் சில பைல்களை Mobi வகை பைல்களாக பதிவேற்றம்செய்திருப்பார்கள். அவ்வாறான பைல்களை படிப்பதற்கு இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் வரும் விண்டோவில் நமக்கான Mobi பைலினை தேர்வு செய்யவும். உங்களுக்கான கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இவ்வாறான பைல்களை நாம் டெக்ஸ்ட் பைலாகவோ எச்டிஎம்எல் பைலாகவோ சேவ் செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நமக்கான இடத்தினை தேர்வு செய்ததும் நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான Mobi வகை பைல்களானது நீங்கள் விரும்பிய வகை பைல்களாக மாறிஉள்ளதினை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-மூளைக்கு வேலை தரும் புதிர்கள்.


மனித மூளைக்கு சரியானபடி வேலை தரவில்லையென்றால் அது வீணாகிப்போகும் . அதற்கும் அவ்வப்போது சரியானபடி வேலைதந்தால் சுறுசுறுப்பாக இயங்கும். வளரும் குழந்தைகளுக்கு இது சரியான பயிற்சியாகும். 2 எம்.பி. கொள்ளளவும் 100க்கும் மேற்பட்ட புதிர்கள் கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதில் இடம்பெற்றுள்ள சுலபமான புதிர் ஒன்று கீழே:-
ஏற்கனவே மூன்று வத்தி குச்சிகள்கொடுத்துள்ளார்கள். அதனுடன் இன்னும் மூன்று குச்சிகள் சேர்த்து பதினோன்று என்ற எண்ணிக்கையை வரவழைக்க வேண்டும். அதுபோல ஆறு வத்தி குச்சிகள்கொடுத்துள்ளார்கள். அதனை ஓன்பதாக மாற்ற வேண்டும்.
 உங்களுக்கான சரியாக விடை கீழே கொடுத்துள்ளார்கள்.
இதுபோல விதவிதமான வித்தியாசமான புதிர்கள்கொடுத்துள்ளார்கள். குழந்தைகளுக்கு இந்த விடுமுறை தினத்தில் கொடுத்தால் அவர்களுக்கும் பொழுதுபொகும். நமக்கும் பொழுதுபோகும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பின்குறிப்பு:-
வேலை அதிகம் காரணமாக இணையம் பக்கம் என்னால் வரமுடியவில்லை.அதிகமான பதிவுகள உங்களுக்காக காத்திருக்கின்றது. இனி தொடர்ந்து அவைகளை நீங்கள் காணலாம்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...