வேலன்-ஜி-மெயிலில் பர்சனல் தகவலை தனியே சேமிக்க

ஜி-மெயில் உபயோகிக்காமல் இருக்க மாட்டோம். நல்ல தகவல்கள் முதற்கொண்டு வேண்டாத விளம்பரம் வரை நமக்கு மெயில் வந்துகொண்டே இருக்கும். மெயில் சேர்ந்ததும் அதை மொத்தமாக டெலிட் செய்துவிடுவோம். முக்கியமான தகவலும் டெலிட்செய்ததை அறிந்து பிறகு அதை தேடி எடுத்துவந்து வைப்போம். ஆனால் முக்கியதகவலை படிக்கும்போதே நமது பர்சனல் போல்டரில் போட்டுவைத்தால் பின்னர் தேடிஎடுக்க சுலபமாக இருக்கும்.இதர கடிதங்களை டெலிட் செய்தாலும் கவலைஇல்லை. இனி நமக்கு வரும் மெயிலை எப்படி பர்சனல் பாக்ஸில சேமிப்பது என்று பார்க்கலாம்.ஜி -மெயிலை திறந்துகொள்ளுங்கள். கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் தேவையான கடிதத்தின் எதிரில் உள்ள கட்டத்தை தேர்வு செய்தபின் மேலே பார்த்தீர்களேயானால் உங்களுக்கு Archive.Reportspam.Delete.Move To என்கின்ற டேபுகள் இருக்கும். அதில் உள்ள Move To கிளிக் செய்தால் உங்களுக்கு கீழே பாக்ஸ் ஒன்று வரும். அதில் உள்ள Personal என்பதனை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான். உங்கள் தகவல் Inbox ல் மறைந்து Personal பாக்ஸில் இருக்கும். Personal பாக்ஸில் தகவலை பெற Composs Mail கீழே உள்ள 
Personal கிளிக் செய்யவும். உங்கள் தகவல் அங்கு இருக்கும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
கடிதம் வரும்போதே அதை படித்துபார்த்து முக்கியமாக இருந்தால் மறக்காமல் அதை பர்சனல் பாக்ஸில் போட்டுவைத்துவிட்டால் மீண்டும் உபயோகிக்க சுலபமாக இருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
சின்ன பதிவாக இருப்பதால் இணைப்பாக ஒரு படம் கீழே-
JUST FOR JOLLY PHOTOS:-

நீ பாடடு வாசிக்காமல் இருந்தால் உனக்கு காசு தருகின்றேன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-ஆன்லைனில் போன்பில் சுலபமாக கட்ட

இன்றும் பலர் தங்களது BSNL தொலைபேசி கட்டணங்களை போஸ்ட் ஆபிஸிலோ - தொலைபேசி நிலையங்களிலோ கட்டி வருகின்றனர். இப்போது நமது வீட்டில் இருந்தபடியே தொலைபேசி கட்டணங்களை சுலபமாக கட்டலாம்.அதற்கான வழிமுறைகளை இன்று காணலாம.இந்த கடிதம் BSNL வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வந்திருக்கும்.


Dear Customer,
      BSNL Chennai Telephones offers Rs 5/- discount from the bill amount to those who opt for stoppage of hard copy of bill by post.
Soft copy of the bill in PDF format will continue be sent without any extra charges to all registered customers as at present.
 1% discount will also continue to be allowed for making online payment.
 This is only an Eco-Friendly measure to avoid paper bills.
 Those who are specific in opting for stoppage of hard copy and thereby wish to avail Rs5/- discount in the next bill   can login to http://billchn.bsnl.co.in website and click the  option Stop Hard Copy of Bill by Post.
                                                                                                  Assuring you of our best services always,


இதில் இரண்டுவகை லாபங்கள் நமக்கு உள்ளது.பில்லை அவர்கள் இ-மெயில் மூலம் அனுப்பினால் ரூ.5.00 குறைவு. மேலும் நாம் ஆன்-லைனில் கட்டணம் கட்டினால் நமது பில்-தொகையில் 1% நமக்கு குறையும். குறையும் தொகை அடுத்த பில்லில் கழித்து வரும்.1000 ரூபாய் உங்கள் பில்தொகை யாக இருக்கையில் உங்களுக்கு ரூபாய் 10 உடன் ரூ5 சேர்த்து ரூ15 மீதம் ஆகும். மாதத்திற்கு பதினைந்து என்றால் வருடத்திற்கு ரூபாய் 180 கண்ணுக்கு தெரியாமல் நமது சேமிப்பாக மாறும். சரி ஆன்-லைனில் பில் எப்படி கட்டுவது?
நீங்கள் http://billchn.bsnl.co.in தளம் கிளிக் செய்யவும.வரும் விண்டாவில் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேரட் கொடுத்து உள்ளே நுழையவும்.  உங்களுக்கு கீழ்கண்ட தளம் ஓப்பன் ஆகும்.
இதில் வலதுபுறம் Landline Bill Online Payment என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு உங்களுடைய பில்தொகையுடன் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேலே உள்ள I wish to pay online என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
I accept என்பதனை கிளிக் செய்யுங்கள்.உங்களு்க்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களிடம் உள்ள கார்ட் வகையை தேர்வு செய்யவும். பின் Submit தரவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உங்களிடம் உள்ள கார்ட்டுக்குரிய வங்கியை கிளிக் செய்து சப்மீட்தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் கார்டில் உள்ள பெயர் -எண் - விவரங்களை இதில் தட்டச்சு செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதிலும் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேரட் கொடுத்து சப்மிட் செய்யவும்.சில வினாடிகள் காத்திருப்பிற்கு பின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ வரும்.
அதே நேரம் உங்கள் இ-மெயிலுக்கு இரண்டு மெயில்கள் வந்திருக்கும்.ஒன்று வங்கியிலிருந்தும் மற்றொன்று பிஎஸ்என்எல் லிலிருந்தும் வந்திருப்பதை காணலாம்.இனி நீங்கள் அமர்ந்த இடத்திலிருந்தே வேலையை முடிக்கலாம் அல்லவா?
நமது இணைய நண்பர்கள் பலர் வேலைக்காக பல நாடுகளில் பணிபுரிகின்றனர். அவர்கள் சொந்த பந்தங்களுடன் பேச -பெரும்பாலும் பிஎஸ்என்எல் இணைப்பையே வைத்துள்ளனர்.சொந்த பந்தங்களுக்கு சிரமம் வைக்காமல் வெளிநாட்டிலிருந்தபடியே நமது உறவினர் பில் தொகையை சுலபமாக கட்டவே இதை பதிவிட்டுள்ளேன்.நானும் இதன் மூலமே கட்டணங்களை செலுத்தி வருகின்றேன்.மிக எளிமையாகவும் சுலபமாகவும் உள்ளது. அப்ப நீங்க.....

வாழ்க வளமுடன்,
வேலன்


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-போட்டோஷாப் -சிறப்பு அஞ்சல்தலை வெளியிட

ஹலோ...ஹலோ....கொஞ்சம் இருங்க...என்னடா இவன் இப்போதான் பதிவுலகுக்கு வந்தான். இதற்குள் இவனுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுட்டாங்களே என நினைக்கவேண்டாம்.இன்று நாம் சாதாரண மனிதர்களாக இருக்கலாம். நாளையே நாம் நாடு போற்றும் பெரிய மனிதர்களாக மாறி நமக்காக சிறப்பு தபால்தலை வெளியிட்டால் எப்படி இருக்கும்.நமது கற்பனையை போட்டோஷாப் மூலம் செயல்படுத்தலாம். போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள். இந்த ஸ்டாம்ப் ஆக்ஷனை இங்குகிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.போட்டோஷாப்பினுள் லோடு அக்ஷன் மூலம் அதனை கொண்டுவந்துவிடுங்கள்.(முந்தைய போட்டோஷாப் பதிவில் இதைப்பற்றி போட்டுள்ளேன்)இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
இதில் இரண்டு மாடல்களில் ஸ்டாம்கள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்யுங்கள். பின்னர் நீங்கள் விரும்பும் படத்தை தேர்வு செய்யுங்கள்.
 படம் தேர்வானதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். மீண்டும் அக்ஷனை கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

இதில் நீங்கள் விரும்பும் தேதியை நிரப்பிக்கொள்ளுங்கள்.இந்த தேதிதான் உங்கள் ஸ்டாம்பில் முத்திரை தேதியாக வரும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேதியை தேவையான இடத்திற்கு நகர்த்திக்கொள்ளுங்கள்..
மீண்டும் கிளிக் செய்து இறுதியாக ஸ்டாப் வரும் வரை ஓ.கே. தாருங்கள். கீழே வந்துள்ள Stamp புகைப்படம்
நாளைய பிரபலங்கள்-
என்னங்க....சிறப்பு அஞ்சல்தலை யை போட்டோஷாப்பில் கொண்டுவரு வதை பார்த்திங்களா...இப்போ முத்திரை குத்துவதாக நினைத்து உங்க ஓட்டை குத்திட்டுபோங்க...நாளை சந்திப்போம்...
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-படங்களை சேர்க்கும் விளையாட்டு

சின்ன வயதில் நாம் இந்த விளையாட்டை விளையாடி இருப்போம். நமது காலங்களில் பிளாஸ்டிக் பாக்ஸில் இந்த விளையாட்டு வந்தது.எண்கள்  - படங்கள் என இருக்கும். ஆனால் ஒரு விளையாட்டுதான் அதில் இருக்கும். நவீன காலத்திற்கு ஏற்ப கம்யுட்டரில் இந்த விளையாட்டு வந்துள்ளது.இதில் 15 க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது. அனைத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும்.
 சிறுவர்களுக்கு  நன்கு பொழுதுபோகும் விளையாட்டு ஆகும்.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகு்ம்

ஒரு படத்தை 9.16.25.36என்று சிறு கட்டங்களாக வேண்டிய அளவில் பிரித்துக்கொள்ளலாம்.அதிக எண்ணிக்கையில் கட்டங்கள் பிரிக்கையில் நமக்கு பொருத்துவது கடினமாக இருக்கும். வலது புறம் வந்துள்ள படம் இடது புறம் கலைந்தது போல் இடம் மாறி இருக்கு்ம். இப்போது இடது பக்கம் உள்ளது போல வலது பக்கமும் நாம் படத்தை கொண்டுவரவேண்டும்.எந்த படம் காலியாக உள்ள இடத்தில் வரவேண்டுமோ அந்த இடத்திற்கு படத்தை நகர்த்துங்கள்.கர்சர் கொண்டு அதை நகர்தினால் காலியாக உள்ள கட்டத்திற்கு படம் நகர்ந்துவிடும்.இதைப்போல முழுப்படமும் நீங்கள் நகர்த்தவேண்டும். நகர்த்தி முடித்தவுடன் வந்துள்ள படத்தை பாருங்கள்.
நீங்களும் ஓய்வு நேரங்களில் விளையாடி பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
போட்டோஷாப் பாடம் போடலாம் என்றிருந்தேன். என்னிடம் உள்ள வீடியோ எடிட்டிங் சாப்ட்வேர் சரியாக வேலை செய்யததால் திருக்கழுக்குன்றம் பிளாக்கில் புதிய பதிவை போட இயலவில்லை. இன்று சரி செய்து பதிவினை போட்டுள்ளேன். அந்த பதிவினை காண திருக்கழுக்குன்றம்(ஊரின் பெயரில் கிளிக் செய்தால் அந்த தளத்திற்கு வருவீர்கள்) வாருங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-கணக்கு பயிற்சி

குழந்தைகளுக்காக நேற்று புவியியல் பற்றி பார்த்தோம். இதுவும் குழந்தைகளுக்கான கணக்கு பாடம் சம்பந்தப்பட்டது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கணக்கிணை சுலபமாக போட மற்றும் ஒரு சாப்ட்வேர் இது.2 எம்.பி.க்குள் உள்ள இலவச சாப்ட்வேரான இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Percent Correct கீழே உள்ள ஸ்லைடரை நகர்த்தி நேரத்தை நாம் சுலபமாக செட்செய்திடலாம். ஒவ்வோரு பெருக்கல் கணக்கிற்கும் நாம் விடை காணவேண்டும். இதைப்போலவே கூட்டல். கழித்தல். பெருக்கல். வகுத்தல் கண்க்குகள் உள்ளது. இடது புறம் உங்களுக்கு வரிசையாக பட்டன்கள் இருக்கு்ம்.தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
நான் வகுத்த ல் கணக்கினை தேர்வுசெய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 இதில் ஏழாவதாக உள்ள டேபை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகு்ம்.
இதில் வட்டத்தினுள் உள்ள தேவையான எண்ணை பயன்படுத்தி இறுதி வட்டத்தில் உள்ள எண்ணிக்கையை வரவழைக்க வேண்டும். இதைப்போலவே இறுதியில் உள்ள Square கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வலது புறம் எண்ணிக்கைகள் கீழே உள்ள எண் ணிக்கைகள் சரியாக வரவேண்டும். பார்க்க சுலபமாக தோன்றினாலு்ம் சற்று கடினமாகவே உள்ளது. வலமிருந்து இடம் வரு்ம் கூட்டுத்தொகை மேலிருந்து வரும் கூட்டுத்தொகை வித்தியாசம் வருகின்றது. சற்று முயற்சித்தால் சரியான விடைவருகின்றது.விளையாடி பாருங்கள்.
நாளை போட்டோஷாப் சம்பந்தமான பதிவை பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-உலக நாடுகள்பற்றி அறிந்துகொள்ள

எனது 350 ஆவது பதிவிற்கு வந்தவர்களுக்கும் வாழ்த்தியவர்களுக்கும் மனமார்ந்த நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.
குழந்தைகள் உலகம்-புவியியல்-geography-பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் உதவும். 800 கே.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் வலதுபுறம் 7 கண்டங்கள் இருக்கும். அதில் தேவையானதை தேர்வு செய்யவும்.நான் ஆசியா கண்டத்தை தேர்வு செய்துள்ளேன்.ஆசியாவில் உள்ள நாடுகள்- அதன் தலைநகரங்கள் - நகரங்கள் - கொடிகள் என 10 க்கும் மேற்பட்ட தலைப்புகள் உள்ளது. அதில் தேவையான தலைப்பை நாம் கிளிக்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்டவாறு விண்டோ ஓப்பன் ஆகும். நான் நாடுகளை தேர்வு செய்துள்ளேன்.இதன் மேல்புறம் கண்டுபிடிக்க வேண்டிய நாடுகள் பெயர் வரும்.சரியான விடையை கண்டுபிடித்தால் அந்த நாடு வெள்ளைநிறத்தில் பெயர் வரும். மூன்று முறைக்கு மேல் நாம் கண்டுபிடிக்க தவறினால் அதுவே நாட்டின் பெயரை ஹைலைட் செய்து காண்பிக்கும்.
இதைப்போல நாட்டின் தேசிய கொடிகள் படம் இருக்கும். அதில் வரும் பெயருக்கு எற்ப நாட்டின் தேசிய கொடியை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.
கீ்ழே உள்ள விண்டோவினை பாருங்கள்.இதில் தாய்லாந்து கொடியை கண்டுபிடிக்க சொல்லி வந்துள்ளது.
கீழே உள்ள படத்தை பாருங்கள். இதில் தலைநகரை கண்டுபிடிக்க சொல்லி வந்துள்ளது. ஒவ்வொரு நாட்டின் த்லைநகரை இதன் மூல்ம நாம் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
குழந்தைகளுக்கான இந்த சாப்ட்வேரை உபயோகிப்பதன் மூலம் உங்கள் குழந்தைகள் உலகத்தை பற்றிய அறிவில் நிச்சயம் முன்னேற்றம் காண்பார்கள்.பதிவின் நீளம் கருதி முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-350 -ஆவது பதிவு-வித்யாசமான வீடியோ முயற்சி.

அனைவருக்கும் வணக்கம்.எனது 350 ஆவது பதிவு இது சோதனை முயற்சியாக வீடியோவில் பேசி பதிவை இணைக்கலாம் என முதன் முயற்சியில் மேற்கொண்டது.இது சோதனை முயற்சியே..ஒரு சில போட்டோஷாப்  பாடங்களை வீடியோவில் செய்முறை யில் போடலாம் என உள்ளேன். முதல் முயற்சியாக முயன்றுள்ள வீடியோவினை கீழே பாருங்கள்.உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
23 -07-2010 வெள்ளிக்கிழமை முதல் 25-07-2010 வரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள டிரெட் சென்டரில் போட்டோ ஸ்டுடியோ சம்பந்தமான கண்காட்சி நடைபெறுகின்றது. அனுமதி இலவசமே...ஒரு புதுவித அனுபவமும் - நிறைய விஷயங்களையும் அங்கு சென்றால் கண்டுகொண்டுவரலாம்.
இன்றைக்கு ஏதுவம் பதிவில்லையான என கேட்பவர்களுக்காக எனது மகனின் பிளாக்கில் விளையாட்டு ஒன்றை பதிவிட்டுள்ளேன். அதை காண இங்கு கிளிக் செய்யவும்.நாளைய பதிவில் சந்திக்கலாம்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-குழந்தைகளுக்கு அறிவு வளர

குழந்தைகளுக்கு பள்ளி துவங்கிவிட்டார்கள். விளையாடியது வரை போதும். இனிவரும் காலங்களில் அவர்களின் அறிவு வளர இந்த சாப்ட்வேரை பதிவிறக்கி அவர்களுக்கு கொடுங்கள்.மொத்தம் 12 வகையான அறிவு வளரக்கூடிய ஆங்கிலம் -கணக்கு -தட்டச்சு விளையாட்டுகள் உள்ளன.
குறைந்த கொள்ளளவாக 800 கே.பி. அளவுடன் இலவச சாப்ட்வேராக உள்ள இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் உள்ள How Many என்பதை கிளிக் செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்சரியானவிடையைகிளிக்செய்யவும்.இதைப்போலகூட்டல்.கழித்தல். பெருக்கல் என இதில் கணக்குகள் உள்ளது. நான் தேர்வு செய்துள்ள பெருக்கல் கணக்கை கீழே காணுங்கள்.
இதைப்போல Pick a Picture என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வந்துள்ள வார்த்தைகளுக்கான சரியான படத்தை தேர்வு செய்யுங்கள்.
அடுத்துள்ளது First Letter என்பதை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வரும் படத்திற்கு ஏற்ப முதல் வார்த்தையை தேர்வு செய்யவும்.
அடுத்துள்ளது Memory என்பதை கிளிக் செய்யவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள கட்டங்களில் படங்கள் மறைந்திருக்கும். படத்தை தேர்வு செய்து அதைப்போல படம் வேறு எங்குள்ளது என்று பார்க்கவும்.
அடுததுள்ளது Word; Memory. இதில் 6 படங்களும் அதற்கான வார்த்தைகளும் இருக்கும். சரியான படத்திற்கு ஏற்ப வார்ததையை தேர்வு செய்யவேண்டும். அதைப்போலவே Hangman.சரியான வார்த்தையை நிரப்ப வேண்டும். இல்லையென்றால் மனித உருவம் Hang பண்ணி கொள்ளும். (இதைப்பற்றி ஏற்கனவே தனியே பதிவிட்டுள்ளேன்) அடுத்துள்ளது முறையே ABC Rain.Letter Rain.& 1-2 Rain .குழந்தைகள் தட்டச்சு செய்ய சுலபமான வழி இதுவாகும். கீபோர்டில் கையை சரியான பொசிஷனில் வைத்துக்கொண்டு வரும் லெட்டர்களு்க்கான எழுத்தை தட்டச்சு செய்யவேண்டும். சரியாக எழுத்தை தட்டச்சு செய்தால எழுத்து அங்கேயே நின்று அடுத்த எழுத்து கீழே வர ஆரம்பிக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதைப்போலவே தனிதனி லெட்டர் மழை..அடுத்ததாக இரண்டு இரண்டு எண்களாக வரும். அதை இரண்டையும் கூட்டி சரியான விடையை தட்டச்சு செய்யவேண்டும். விடை சரியாக இருந்தால் லெட்டர் அந்தரத்தில் நின்று விடும்.கீழே உள்ள விண்டோவினை பாரு்ங்கள்.
 இது குழந்தைகளுக்கான சாப்ட்வேர். நாம் குழந்தைகளாக இருந்த சமயம் இந்த மாதிரி வசதிகள் இல்லை..அதனால்.....அதனால் ....ஒரு முறை நாம் இதை விளையாடிவிட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாமே...
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.


வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-சாப்ட்வேர்களின் கீ -யை கண்டுபிடிக்க

நமது கம்யுட்டரில் ஓ,எஸ். முதற் கொண்டு அனைத்து சாப்ட்வேர்களுக்கும் சி.டி.வைத்திருப்போம்.அதன் கீ -யை நாம் சி.டி.யின் மேலேயோ அல்லது சி.டியின் கவரிலோ எழுதி வைத்திருப்போம்.சி.டி.யின் கவர் தொலைந்துவிட்டாலோ சிடியின் மேல் உள்ள எழுத்து அலைந்துவிட்டாலோ நமக்கு சிரமம் தான். அதைப்போல் சாப்ட்வேர் சிடி நம்மிடம் இருக்கும். ஆனால் அதன் கீ நம்மிடம் இருக்காது. அதற்கான் கீ யை கண்டுபிடிப்பது எவ்வாறு? இந்த இக்கட்டான சூழ் நிலையில் நமக்கு உதவ வருகின்றது. இந்த சாப்ட்வேர். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
இதை கணிணியில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Find Keys  கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நம்மிடம் உள்ள சாப்ட்வேர்களின் கீ கள் அனைத்தும் தெரியும். அதை தனியாக வேறு டிரைவிலோ அல்லது தனியே பிரிண்ட் எடுத்தோ நாம் சேமித்துக்கொள்ளலாம் .கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
 அதைப்போல் நமது இணைய இணைப்பின் முகவரியையும் நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.
எனது நண்பரும் சிறந்த தொழில்நுட்ப பதிவர்களில் ஒருவருமான சூர்யகண்ணனின் வலைப்பதிவு ஹேக் செய்யப்பட்டுள்ளது..இந்த பிரச்ச்னையால் சூர்யகண்ணன் தற்காலிக முகவரி ஒன்றில் பதிவுகளை பதிவு செய்து வருகிறார்.அவரது படைப்புகளை http://sooryakannan.blogspot.com/ என்கின்ற முகவரியில் தொடர்ந்து வாசிக்கலாம்.
அன்புடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-போட்டோஷாப் - பேப்பர் வெயிட்டில் புகைப்படங்கள் வரவழைக்க

சாராண பேப்பர் வெயிட் பார்த்திருப்போம். ஒரு மாறுதலுக்கு கியுப்பில் நமது புகைப்படங்களை ஒட்டி அழகான பேப்பர் வெயிட்டாக வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கு்ம். இதற்காக நாம் மெனக்கெட்டு ஒவ்வொரு போட்டோவாக கட்செய்து ஒட்ட வேண்டாம். போட்டோஷாப்பில் நாம் தேவையான புகைப்படங்கள் கொடுத்தால் போதும். அதுவே அழகாக பாக்ஸ் அளவிற்கு நமக்கு மாற்றி தந்துவிடும். அந்த Action-ஐ பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
முதலில் தேவையான 5 புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் நம் சக பதிவர்களான திரு.முனைவர் குணசீலன்.திரு.சபீர்.திரு.ஜெய்லானி(அவர் புகைப்படம் கிடைக்காததால் அவரின் பெவரைட் பச்சை ரோஜா படம் எடுததுள்ளேன்) திரு.ஞானசேகரன்,மற்றும் திரு.ப்ரியமுடன் வசந்த்.
ஒவ்வொரு படங்களும் 747 x 747 பிக்ஸல் அளவிலும் ரெசுலேஷன் 300 பிக்ஸல் அளவிலும் கிராப் டூல் மூலம் கட் செய்து தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் தேர்வு செய்த படங்கள் கீழே-இப்போது Action Box Open செய்து அதில் இந்த Paper Cube  ஐ கொண்டுவந்துவிடுங்கள். இதை பற்றி முந்தைய பதிவுகளில் விரிவாக போட்டுள்ளேன் புதியவர்கள் இங்கு சென்று பார்த்துக்கொள்ளவும்..இப்போது உங்களுக்கு Action Paper Cube  இந்த மாதிரி வந்துவிடும். இப்போது அதில் உள்ள 5 images  என்பதை கிளிக்செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு படங்களை தேர்வு செய்ய சொல்லும் . நீங்கள் முதல் படத்தை தேர்வு செய்யுங்கள். நான் தேர்வு செய்த படம் கீழே-
இப்போது Continue கொடுத்து அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்யுங்கள். சில நிமிடங்களுக்கு பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ தோன்றும்.
இதை A4 போட்டோ பேப்பரிலோ - சாதாரண பேப்பரில் எடுத்து கனமான அட்டையில் ஒட்டிக்கொள்ளுங்கள. இதில் படம் உள்ள இடம் தவிர காலியாக உள்ள இடங்களை வெட்டி எடுத்துவிடுங்கள். பின்னர் படம் தவிர்த்து ஓரங்களை மடித்துக்கொள்ளுங்கள். நல்ல ஒட்டும் பசையை எடுத்து அதில் உள்ளவாறு ஒவ்வொன்றாக ஒட்டுங்கள். அவ்வளவுதான் பேப்பர் வெயிட் அழகான படங்களுடன் ரெடி.
இதே படத்தினை ஒரே போட்டோவின் மூலமும் செய்யலாம். அனைத்துப்பக்கங்களிலும் ஒரே போட்டோ வரும்.குழந்தைகள் போட்டோ போடும் சமயம் மிக அழகாக இருக்கும். 
சக பதிவரின் குழந்தை படம் கீழே-
இதை போட்டோ பாக்ஸில் கொண்டுவந்தபின் வந்த படம் கீழே-
நாளை விடுமுறைதானே..அழகான புகைப்படங்களை இதுபோல் செய்து பாருங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
செய்து பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...