வேலன்:-வீடியோவினை விரும்பிய இடத்தில் வெட்டி சேமிக்க-Gihosoft Free Video Cutter

நம்மிடம்உள்ள வீடியோக்களில் குறிப்பிடட பகுதியையோ.பாடல்களோ.சண்டைக்காட்சிகளோ தனியாக பிரித்து பார்ப்பதற்கு வீடியோ கட்டர் தேவை..15 எம்.பி.கொள்ளளவுகொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் உங்களிடம் உள்ள வீடியோ வினை ஒப்பன் செய்தோ டிராக் அண்ட் டிராப் முறையிலோ தேர்வு செய்யவும்.
 வீடியோவினை ஓடவிடவும். பின்னர் எந்த இடத்தில் உங்களுக்கு வீடியோ தேவையோ அந்த இடத்திற்கான ஸ்லைடினை நகர்த்தி வைக்கவும். பின்னர் எந்த இடத்தில் முடிய வேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். வீடியோ ஓடும் நேரத்தினையும் இதில் செட் செய்திடலாம். 

இதில் வீடியோ  MP4.AVI.WMV & MOV என எந்த பார்மெட்டில் நமக்கு வீடியோ வேண்டுமொ அதனையும் அதனை சேமிக்கவிரும்பும் டிரைவினையும் தேர்வு செய்து ஒ,கே.தரவும்.

சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்களுக்கான வெட்டப்பட்டவீடியோவினை நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்க்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...