வேலன்:-உங்கள் முகத்தினை அழகாக மாற்ற

முகத்துக்கு கிரீம் போடாமல் சாயங்கள் பூசாமல் அழகான முகம் கொண்டுவர போட்டோஷாப் துணையில்லாமல் இந்த சின்ன சாப்ட் வேரில் கொண்டுவரமுடியும். திருமணத்திற்கு முன்போ -திருமணத்திற்கு பின்போ உங்கள் முகம் ;அழகாக மாற இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தலாம்.9 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன ஆகும். இதில் உங்களுக்கான புகைப்படத்தினை திறக்கவும்.
 உங்களது வலதுபக்கம் உங்களுக்கான விண்டோ கிடைக்கும். அதில் புகைப்படத்தினை வேண்டிய அளவிற்கு கிராப் செய்வது மட்டுமல்லாது நமக்கு வேண்டியவாறு புகைப்படத்தினை அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம்.கீீீி உள்ள விண்டோவினை பாருங்கள்.
 இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்திட வரும் விண்டோவில் உங்களது முக அமைப்பு நேராகவோ பக்க வாட்டிலோ எப்படி உள்ளதோ அதற்கேற்ப கீழே உள்ள படத்தில் தேர்வு செய்யவும்.
 வரும் விண்டோவில் படத்தில் வலது கண் முனையில் பிறகு இடது கண் முனையில் முக்கின் நுனையில் வாயின் இடது பறம் மற்றும் வலது புறம் முகவாயின் அடியில் என கர்சர் மூலம் இதில் வரும் + குறியை படததில் வைக்கவும். உங்களுக்கான விளக்கங்கள் வலதுபுறம் விண்:டோவில் தெரியவரும்.
அடுத்து நெக்ஸ்ட் அழுத்த உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உளள புள்ளிகளை படத்திற்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

புள்ளிகளை கர்சர் மூலம் வேண்டிய இடத்திற்கு நகர்த்தியபின் இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யுங்கள். சில நிமிட காத்திருப்பிற்கு உங்களுக்கு கீழ்கண்ட வாறு அழகிய முகம் கிடைக்கும்.
மேலும் இந்த சாப்ட்வேர் மூலம் முகச்சுருக்கங்களை நீககலாம்.கண்ணில் உள்ள கருவளையங்களை நீக்கலாம். அகலமான மூக்கினை அழகு படுத்த்லாம். ஒட்டிய கண்ணங்களை பூசுபூசு வென மாற்றலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

வெளியில் தெரியும் உடம்பின் நிறத்தினை எளிதாக மாற்றலாம்.
Full-body skin perfection
பல் வைததியரிடம் சென்று பல்லினை ஸ்கேலிங் செய்யமலே பல்லினை பளிச்சிட வைக்கலாம். கீழே உள்ள படத்தினை பார்க்கவும்.
Whiten Teeth & Retouch Lips
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள் உங்களை அழகாக்கிக்கொள்ளுங்கள் மறக்காமல் உங்கள் கருத்துக்களையும் கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-மறந்துவிட்ட பாஸ்வேர்ட்டை கண்டுபிடிக்க

சில வெப் தளங்களை பயன்படுத்துகையில் பாஸ்வேரட கொடுத்து உள்நுழைவோம்.முதன்முதலாக பயன்படுத்துகையில் நமது யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டினை சேவ் செய்துகொள்ளவா என கேட்கும் நாமும் சேவ் கொடுத்து அந்த இணையதளத்தினை பயன்படுத்திவருவோம். அவ்வாறு நாம் உள் நுழைந்து பயன்படுத்தும் யூசர்நேம் மற்றும்பாஸ்வேர்டினை நாம் தனியே குறித்து வைத்திருந்தால் சரி..அவ்வாறு இல்லையென்றால் யூசர்நேம் மற்றும் பாஸ்வேரட மறந்து மீண்டும் அந்த இணையதளம் திறப்பதற்கு சிரமாகும். கம்யூட்டரில நினைவகத்தில் உள்ள யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டானது நாம் மீண்டும் கணிணியை பார்மேட் செய்யும் வரை இருக்கும். பார்மேட் செய்தபின் பாஸ்வேர்ட நமக்குதெரியவில்லையென்றால் சிரமமே....அவ்வாறு மறந்துவிட்ட பாஸ்வேர்டினை நினைவில் கொண்டுவர இந்த சின்னதாக மாறுதல் செய்தால் நமக்கான பாஸ்வேர்டினை நட்சத்திர குறியில்லாமல் வேர்டாக பார்க்கலாம். அதனை எவ்வாறு பார்ப்பது என காணலாம். முதலில் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேர் உள்ள ஏதாவது ஒரு இணையதளத்தினை திறந்துகொள்ளுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் :ஆகும். இதில் பாஸ்வேர்டினை கர்சர் மூலம் தேர்வு செய்துகொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் ஓ,கே.தரவேண்டாம். பின்னர் மவுஸ் மூலம் ரைட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 அதில கடைசியாக உள்ள Inspect element என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் ஹைலைட் செய்த வரி உங்களுக்கு கிடைக்கும். அதில பாஸ்வேர் என்பதற்கு முன் Text (டெக்ஸ்ட்) என ஆங்கிலத்தில தட்டச்சு செய்யுங்கள்.  உங்களுக்கான பாஸ்வேரட் விண்டோவில் உங்களது பாஸ்வேர்ட் விண்டோவானது டெக்ஸ்டாக தெரியும். 
தனியாக குறித்து வைத்துக்கொள்ளவும். பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பின்குறிப்பு:- ப்ரவ்சிங் சென்டர்களிலோ -அலுவலகங்களிலோ - பிறருடைய கணிணிகளிலோ இணையதளம் பயன்படுத்துகையில் எக்காரணம் கொண்டும் உங்கள் பெயர் மற்றும் பாஸ்வேர்ட்களை சேவ் செய்யாதீர்கள். மேலே சென்ன வழிமுறைகளில் உங்களுடைய யூசர்நேம் மற்றும் பாஸ்வேரட்களை மற்றவர்கள் எளிதில் அறிந்துகொள்ளலாம்.எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...