வேலன்:-போட்டோஷாப் இல்லாமல் .PSD பைல்களை பயன்படுத்த-ீPSD Viewer

.PSD பைல்களை நாம் போட்டோஷாப் உதவியில்லாமல் பார்வையிட முடியாது. அனேகம் பேர் போட்டோஷாப் வைத்திருக்கமாட்டார்கள். அவ்வாறு போட்டோஷாப் வைத்திருக்காதவர்கள் தங்களிடம் உள்ள .PSD பைல்களை பார்வையிடவும் அதனை வேறு பார்மெட்டுக்கு சுலபமாக மாற்றிடவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 10 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் வரும் விண்டோவில் உங்களிடம் உள்ள .PSD பைலினை திறக்கவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் படத்தினை ஓப்பன்செய்ததும் நீங்கள் படத்தினை பெரிதுபடுத்திப்பார்ப்பதற்கும் சிறியதாக மாற்றி பார்ப்பதற்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தினை எளிதாக திருப்பலாம். மேலும் இதில் உள்ள சேவ் ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் புகைப்படத்தினை நீங்கள் விரும்பும் பார்மெட்டுக்கு எளிதில் மாற்றிவேண்டிய இடத்தில் சேமித்துவைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பாஸ்வேர்ட்களை பாதுகாக்க

ஜிமெயில் கணக்கு தொடங்கி வங்கி கணக்கு வரை இணையத்தில் பயன்படுத்தும் அனைத்து சேவைகளுக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் அவசியம். சிலர் அனைத்து கணக்குகளுக்கும ;ஒரே பாஸவேர்ட வைத்திருப்பார்கள். சிலர் ஒவ்வொரு   கணக்கிற்கும் தனிதனி யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்; வைத்திருப்பார்கள்.இவை அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே யூசர்நேம் மற்றும பாஸ்வேர்ட கொண்டுவர இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம செய்தி இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும். இதில் உங்களுடைய பெயர் மற்றும் பாஸ்வேர்ட கொடுத்து லாகின் ஆகவும்.         
 இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
ஓ.கே.கொடுத்து வெளியேறவும். இப்போது மீண்டும் அப்ளிகேஷன் திறக்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழையவும். இப்போது இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
 இதில் இணையத்தில் நீங்கள் பயன்படுத்தும் ஒவவொரு கணக்கினையும இதில் உள்ளீடு செய்துவிடவும்.அனைத்து இணைய கணக்கிணையும் இணைத்தபின் வெளியேறவும்.
இப்போது நீங்கள் இணையத்தில் வைத்துள்ள அனைத்து கணக்கின் விவரங்களும் அதற்கான பாஸ்வேர்ட்களும் பாஸ்வேர்ட் டுக்கான குறிப்புகளும் கிடைக்கும்.உங்களுடைய அனைத்து இணையதள விவரங்களையும நீங்கள் சேமிததுவிட்டீர்கள். அப்ளிகேஷனை மூடிவிடவும். இப்போது மீண்டும் அந்த அப்ளிகேஷனை திறக்கையில் உங்களுக்கான யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்கொடுத்தால்தான் உள்நுழைய முடியும். பயன்படுத்திபபாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

 

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly

அனைத்து புகைப்படங்களிலும் நாம் வாட்டர் மார்க் கொண்டு வர போட்டோஷாப் தவிர்த்து இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நீங்கள் வாட்டர்மார்க் கொண்டு வேண்டிய புகைப்படங்கள் உள்ள போல்டரினை தேர்வு செய்திடவும்.உங்கள் போல்டரில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் உங்களுக்கு கீழ்கண்ட வாறு தெரியவரும்.

இதில் உள்ள Add Text என்பதனை கிளிக்செய்யவும் உங்களுக்கு வலதுபுறம் விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் விரும்பும் வாட்டர் மார்க் வார்த்தையை சேர்க்கவும்.பின்னர் விரும்பும் எழுத்துருவினை தேர்வு செய்யவும். மேலும் எழுத்துக்களின் நிறத்தினையும் நீங்கள் தேர்வு செய்திடலாம். வாட்டர்மார்க்கின் Transparency & Rotaion தேர்வு செய்திடலாம். மேலும் இதில் உள்ள Effect கிளிக் செய்தால் நிறைய மாடல்கள் கொடுத்துள்ளார்கள் தேவையானதை நீங்கள் தேர்வு செய்திடலாம்.

வண்ணங்கள் உங்கள் விரும்பமானதை நீங்கள் டிஸ்பிளே மூலம் தெரிந்துகொள்ளலாம்.
 உங்கள ;கர்சர் மூலம் நீங்கள் புகைப்படத்தில் விரும்பிய இடத்தில் எழுத்துருவினை அமைத்துக்கொள்ளலாம்.
 இதற்கு அடுத்த லெவல் செல்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.புகைக்படங்களை சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்திடவும்.
இறுதியாக ஓகே தரவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
நீங்கள் தேர்வு செய்திட்ட இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான புகைப்படங்கள் வாட்டர் மார்க்குடன் இருப்பதனை நீங்கள் காணலாம். மேலும் வாட்டர் மார்க்காக நீங்கள் லோகோ மற்றும் நீங்கள் விரும்பும் புகைப்படத்தினையும் கொண்டுவரலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- அனைத்து வகை இ-புக் புத்தகங்களையும் படிக்க -Alfareader.

அனைத்து வகை இ-புத்தகங்களையும் எளிதில் படிக்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. மேலும் இ-ஆடியோ புத்தகத்தையும் இதன் மூலம்நாம் படிக்கலாம். இந்த மென்பொருளைபதிவிறக்கம் செய்திட இதன் இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 நீங்கள் எந்த புத்தகத்தினை படிக்க விரும்புகின்றீர்களோ அந்த புத்தகத்தினை டிராக் அன்ட் டிராப் முறையிலோ அல்லது தேர்வு செய்தோ கொண்டுவரவும்.
 புத்தகத்தினை ஒவ்வொரு பக்கமகாவோ இரண்டு பக்கங்களாகவோ கொண்டுவரலாம். மேலும் உங்கள் பக்கத்தனை நீங்கள் பெரியதாகவோ சிறியதாகவோ கொண்டுவரலாம்.
 இதில் உள் ளதம்ப்நெயில்வியூ கிளிக செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தம்ப்நெயில் வியூவின் மூலம் பகக்ங்களை எளிதில் தேர்வு செய்து படிக்கலாம்.அனைத்து இபுக் புத்தகங்களையும் படிக்க இது வசதியானது. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பைல்களை சுருக்க -சுருக்கிய பைல்களை விரிவாக்கம் செய்ய -Bandzip.

பைல்களை சுருக்கவும் சுருக்கி உள்ள பைல்களை விரிவாக்கம் செய்து பார்க்கவும் இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதனை இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம ;செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நீங்கள் சுருக்கவேண்டி பைல்களின் பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள். விருப்பமானதை தேர்வு செய்திடுங்கள். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து தேவையான ஆப்ஷன்களை தேர்வு செய்திடுங்கள். பின்னர் இதன் கீழே உள்ள ஓ.கே.பட்டனை கிளிக் செய்திடுங்கள்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
 நீங்கள் சுருக்கவேண்டிய பைலினை தேர்வு செய்திடவும் அதனை சேமிக்கவிரும்பும் இடத்தினையும் தேர்வு செய்திடவும்.
 உங்கள் பைலினில் உள்ள டாக்குமெண்டுகளோ.புகைப்படங்களோ.பாடல்களோ.வீடியோ பைலகளோ என எதனை நீங்கள் சுருக்க விரும்பினீர்களோ அது சுருங்க ஆரம்பிக்கும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இந்த மென்பொருளானது ஆதரிக்கும் பார்மெடடுகளாக  7Z, ACE, AES, ALZ, ARJ, BH, BIN, BZ, BZ2, CAB, Compound(MSI), EGG, GZ, IMG, ISO, ISZ, LHA, LZ, LZH, LZMA, PMA, RAR, RAR5, SFX(EXE), TAR, TBZ, TBZ2, TGZ, TLZ, TXZ, UDF, WIM, XPI, XZ, Z, ZIP, ZIPX, ZPAQ  என நிறைய பார்மெட்டுக்கள் உள்ளது. மேலும் இதுஒரு இலவச மென்பொருளாகும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...