வேலன்:-கணிணி வேலைநேர பயன்பாட்டினை அறிந்துகொள்ள-Worktime Personal Free

அலுவலகம் மற்றும் இல்லங்களில் கணிணியின் உபயோகத்தினை அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் எவ்வளவு நேரம் எந்த எந்த இணையதளம் பயன்படுத்தினார் என்பதனை சுலபமாக அறிந்துகொள்ளலாம்.7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.

இதில் பேஸ்புக்.விளையாட்டு.இன்டர்நெட் மற்றும் கணிணி உபயோகம் என தனிதனியே நேரங்கள் டிஸ்பிளே ஆகும்.
கணிணியின் மொத்த உபயோகம் கிளிக் செய்திட நீங்கள் எந்த எந்த நேரம் எந்த இணையதளத்தினை பார்த்தீர்கள் என தெரியவரும்.
இணைய தளங்களில் எந்த எந்த வெப் சைட்டுக்களை பார்த்தீர்கள் என டிஸ்பிளே வானது சார்ட் வடிவில் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.ட
அதுபோல கணிணியில் எந்த சாப்ட்வேரினை பயன்படுத்தினீர்கள்.எந்த ப்ரேவ்சர் உபயோகித்தீர்கள் என்பதனையும் எவ்வளவு சதவீதம் பயன்படுத்தினீர்கள் என்பதனையும் சுலபமாக அறிந்துகொள்ளலாம். கிழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.
சாப்ட்வேர் உபயோகத்தில் நீங்கள் எந்த எந்த சாப்ட்வேரினை பயன்படுத்தினீர்கள் அதனை எவ்வளவு நேரம் பயன்படுத்தினீர்கள் என்பதனையும் அறிந்து கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
வீட்டில் படிக்கும் மாணவர்கள் இருந்தால் அவர்கள் எவ்வளவு நேரம் கணிணியை பயன்படுத்தினார்கள். எவ்வளவு நேரம் பேஸ்புக் பார்த்தார்கள். எவ்வளவு நேரம் விளையாடினார்கள் என்பதனை துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.மேலும் இந்த சாப்ட்வேர் கீழ்புறம் தொடர்ந்து கணிணியை பயன்படுத்துவர்கள் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்வதற்கான சின்ன சின்ன டிப்ஸ்களையும் கொடுத்துள்ளார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.. 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...