வேலன்:-மேஜிக் டெக்ஸ்டாப்-Magic Desktop

குழந்தைகளுக்கு என்றே தனியாக உருவாக்கப்பட்டுள்ள சாப்ட்வேர் இது.இதன் இணையதளம் சென்று உங்களுக்கான சாப்ட்வேர்  பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இந்த சாப்ட்வேரினை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் மேஜிக் விண்டோ ஓப்பன் ஆகும். 
  •  அக்கடாமி என்கின்ற விண்டோ ஓப்பன் செய்கையில் நமக்கு எண்கள்.நிறங்கள்.உருவங்கள்.எழுத்துக்கள் கிடைக்கும். கல்வி சார்ந்த பயிற்சியையும் ;நாம் மேற்கொள்ளலாம். 
  • இதிலுள்ள இசிபெயிண்ட்கிளிக் செய்திட நமது கைகளினால் உருவங்கள் வரையலாம். உங்களுடைய புகைப்படங்களில் எபெக்ட் மற்றும் எழுத்துக்களை சேர்க்கலாம்.
இதில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற 28 விளையாட்டுக்கள் உள்ளது. கல்வி சார்ந்த விளையாட்டும் உள்ளது.மேலும் நீங்கள் வரையும் படங்களை சினாப் ஷாட் எடுப்பதுடன் கலரும் கொடுக்கலாம். நண்பர்களுக்கும் ஷேர் செய்துகொள்ளலாம். பேசும் பச்சைக்கிளி பார்த்திருப்பீர்கள் அதுபோல இந்த சாப்ட்வேரில் நீங்கள் ;உங்கள் சொந்த குரலில் பேச அதற்கு ஏற்ப கிளி வாயசைக்கும். உங்கள் நண்பர்களுக்கும் வாய்ஸ்மெயில் அனுப்பலாம்.
குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கல்வியையும் நாம் சுலபமாக கற்றுக்கொடுக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-டெக்ஸ்டாப் வீடியோவினை காப்பி செய்ய, ஸ்கிரீன்ஷாட் எடுக்க-ZD Soft Screen Recorder

கணிணியில் பார்க்கப்படுகின்ற வீடியோவினை முழுவதுமாகவோ,குறிப்பிட்ட இடம் வரையிலோ,வேண்டிய புகைப்படத்தினை ஸ்கிரீன்ஷாட் ஆகவோ எடுக்க இந்த ஸ்கிரீன் ரிக்கார்டர் பயன்படுகின்றது.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் record.stop.screenshot.save & settings என ஐந்து டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Screen.Video.Audio.Screen shot.Webcom.Curser.Logo.Timer.Advance என ஒன்பது டேப்புகள் கொடுத்துள்ளார்கள். 
 இதில உள்ள வீடியோ டேபினை கிளிக் செய்திட வரும் விண்டோவில் வீடியொ ரெசுலேஷன்.வீடியோ பிலிம் பார் செகண்ட்.எந்த பார்மெட்டில் வீடியோ சேவ் ஆகவேண்டும்,கோடக் என நிறைய ஆப்ஷன்கள்கொடுத்துள்ளார்கள். நமது தேவைக்கேற்ப அதனை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். 
 வீடியோவில் குறிப்பிட்ட காட்சி அழகாக இருந்தால் அதனை ஸ்கிரீன்ஷாட்டாக எடுத்து அது புகைப்படங்களில் எந்த பார்மேட்டுக்கு பிஎன்ஜி.பிஎம்பி.ஜேபிஜி என எந்த பார்மெட் வேண்டுமோ அதனை தேர்வு செய்யலாம்.

வேடந்தாங்கல் சரணாயலத்தின் வீடியோவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தினை கீழே காணலாம்.

ஒரு வீடியோவில் குறிப்பிட்ட பாடல்காட்சியோ.சண்டைகாட்சியோ.நகைச்சுவை காட்சியோ நமக்கு தேவையென்றால் அந்த வீடியோவின் நேரத்தினை செய்துகொள்ளலாம். இதன் மூலம் நமக்கு தேவையான வீடியோவினை பெறலாம்.
வீடியோ சாப்ட்வேரினை பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-டெக்ஸ்ட்பைலினை 70 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட-Everylang limited edition

நமக்கு தேவையான டெக்ஸ்ட் பைல்களை வேண்டிய மொழிக்கு மொழிமாற்றம் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதில் 70 வகையான மொழிகளில் மொழிமாற்றம் செய்திடலாம்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் Tamil Computer என தட்டச்சு செய்து மொழியில் ;தமிழ் என தேர்வு செய்ததும் தமிழ்கணிணி என வந்தது.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து 70 வகையான மொழிகளில் எது தேவையோ அதனை தேர்வு செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஆங்கிலத்தில் Accident என தட்டச்சு செய்தபின் தமிழில நீண்ட விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அதுபோல நாம் தட்டச்சு செய்யும் வார்த்தைகளின் ஸ்பெல்லிங் செக் செய்யும் வசதியையும் இதில்கொடுத்துள்ளார்கள். நீண்ட உரையில் தேவையான வார்த்தையை தேர்வு செய்து மாற்றும் வசதியும் (Text auto replace)கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:- வால்பேப்பர் கேலரி-My Wallpaper Gallery

டெக்ஸ்டாப்பில் விதவிதமான வால்பேப்பர்கள் செட் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 9 எம.பி. கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் வலதுபுறம் 16 கேரக்டரில் விதவிதமான புகைப்படங்கள் என மொத்தம் 2100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைத்துள்ளார்கள்..ஒவ்வொரு கேரக்டரினையும் தேர்வு செய்திட பக்கத்தில் உங்களுக்கு அந்த கேரக்டரில் உள்ள படங்களின் லிஸ்ட்  தெரியவரும். ஏதாவது ஒரு பெயரினை தேர்வு செய்த தேர்வு செய்த படத்தின் ப்ரிவியூ பக்கத்தில் உள்ள விண்டோவில் தெரியும்.
 இதில் உள்ள வால்பேப்பர் பெஸிஷன் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
புகைப்படத்தின் வகைக்கு ஏற்ப பெஸிஷனை நாம் தேர்வு செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அனைத்து வசதிகளும் உள்ள ஜீம் ப்ளேயர்-Zoom Player

வீடியோ ஆடியோ பைல்களில் நமது விருப்பபத்திற்கு ஏற்ப கொண்டுவர இந்த ஜீம் ப்ளேயர் உதவுகின்றது.மீடியா லைப்ரவரி.பைல் ப்ரவ்சர்..பிளே லிஸ்ட்.கலர் கன்ட்ரோல்.ஆடியோ இக்குவலைசர்.புக் மார்க்.பிளே இஸ்டரி என பல வசதிகளை உள்ளடிக்கியுள்ளது இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


நமது விருப்பத்திற்கு ஏற்ப வீடியோவினை தேர்வு செய்யவும்.


இதிலுள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


வீடியோவில் ஆடியோ தரம் கூட்ட குறைக்க.வீடியோவின் ஒளியை கூட்ட குறைக்க.இதற்கு முன் பயன்படுத்திய வீடியோ ஸ்டரியை காண.இக்குவலைசர் கொண்டுவர.என 18 க்கும் மேற்பட்ட ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். தேவையானதை கிளிக் செய்திட உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும்.
இது அனைத்து வகை பைல்பார்மெட்டுக்களையும் ஆதரிக்கின்றது. வேண்டிய பாரமெட்டுக்கு மாற்றியும்இதனை நாம் பார்வையிடலாம். 
மேலும் புகைப்படங்களையும் இந்த சாப்ட்வேர் மூலம் நாம் பார்வையிடலாம். இதற்கேன நாம்தனியோ வேறு ஒரு அப்ளிகேஷன் திறக்க வேண்டியதில்லை. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இணையம் மூலம் பண்பலை பாடல்களை கேட்க.Radionline

கணிணியில் பணிபுரியும் சமயம் வேலைபளு தெரியாமல் இருக்க பாடல்கள் கேட்போம். தனியாக பண்பலை பா டல்களை கேட்காமல் கணிணியின் மூலமாகவே  பாடல்கள் கேட்க இந்த இணையதளம் உதவுகின்றது. இணையம் ;மூலம் பண்பலை மற்றும் பாடல்களை கேட்க இங்கு  கிளிக் செய்யவும்.இதில் இணையதளம ;மூலம் பதிவிறக்கம் செய்தபின் கிளிக் செய்திட உங்களுடைய ப்ரவ்சரை தேர்வு செய்யவும். ப்ரவ்சரின வலது மூலையில் இதனுடைய ஐகான் வந்து அமர்ந்துகொள்ளும்; அதனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு Favorites.Facorite music.FM,Altertative.Blues.Classical.Country.Decades.Easy Listening.Electronic  இதில் தேவையானதை  தேர்வு செய்யவும். நாடுகளின வரிசையில் உங்களுக்கு தேவையான நாட்டினை தேர்வு செய்யவும். இந்தியாவினை தேர்வு செய்துள்ளேன். இந்தியாவில் உள்ள பண்பலைகளின் விவரம் நமக்கு தெரியும். அதில் தமிழ் என்பதனை தேர்வு செய்து பின்னர் உங்களுகு;கு விருப்பமான பண்பலையை தேர்வு செய்து பாடலை ஒலிக்கசெய்யவும். பாடலில் புதிய பா டல்கள். பழைய பாடல்கள். மிகப்பழைய பாடல்கள.பக்தி பாடல்கள் என ஒவ்வொரு பாடலுக்கும ஒரு பண்பலை நிலையம் உள்ளது. தேவையானதை தேரவு செய்து பா டலை கேட்கவும். பயன்படுத்திப்பாருங்கள். 
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பிடிஎப் பாஸ்வேர்ட்களை நீக்க-Weeny Free PDF Password Remover

சில பிடிஎப் பைல்களில் பாஸ்வேர்ட் கொண்டு அதனை லாக்செய்து இருப்பார்கள். அவ்வாறான பிடிஎப் பைலினை நாம் திறக்க முடியாது. அந்த வகையில் உள்ள பிடிஎப் பைலின் பாஸ்வேர்டினை நீக்கி பைலினை பார்க்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பாஸ்வேர்ட் கொடுக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள Remove Now கிளிக் செய்திட நமக்கான பிடிஎப் பைலானது பாஸ்வேர்ட்டினைநீக்கி ;சேமிப்பாகும். பின்னர் அதனை நாம் பயன்படுத்தலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வித்தியாசமான தேடுபொறி -யூசி ப்ரவ்சர்.-UC Browser

தேடுதல் பொறிகள் அதிகம் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வித்தியாசபடுகின்றன. அந்த வகையில் இந்த தேடுபோறி பல வித்தியாசங்களை கொண்டுள்ளது. 50 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நாம அதிகம் பயன்படுத்தும் பேஸ்புக்.இமெயில்.வாட்ச்அப் முதலியவற்றை முதலிலேயே கொடுத்துள்ளார்கள். அதனை கிளிக் செய்வதன் மூலம் நாம் நேரடியாக அதனுடைய தளத்திற்கு செல்லாம். அடுத்து வலது பக்கத்தில் ஸ்பிட் டெஸ்ட்.கூகுள் டிரான்ஸ்லேட்.மற்றும் வானிலை ரிப்போர்ட் ஆகியவற்றை கொடுத்துள்ளார்கள். அதனை கிளிக்செய்வதன் மூலம் நேரடியாக நாம் அதனதன் பயன்களை அறிந்துகொள்ளலாம்.


இதனை தவிரந்து கீழே டவுண்லோட்.சாப்ட்வேர.இசை.லைப்.ஷாப்பிங்.செய்திகள்.விளையாட்டு என பத்துவிதமான ஆப்ஷன்களும் அதில் பிரபலமான இணையதள முகவரிகளும் கொடுத்துள்ளார்கள். அதனை கிளிக் செய்வதன் மூலம் நேரடியாக அந்த இணையதளங்களுக்கு நாம் செல்லலாம்.


இதில் உள்ள விண்டோவினை கிளிக் செய்திட பிரபலமான இணையதளங்கள் உங்களுக்கு கிடைக்கும். இதில் கிளிக்செய்து தேவையினை பெறலாம் கீழே உள்ள விண்;டாவில் பாருங்கள்.


இது தவிர்த்து நமக்கு விருப்பமான இணையதளங்களையும்பெறலாம் இதில் உள்ள ஆட் பட்டனை கிளிக் செய்து நமது இணையதள முகவரியை இணைத்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் ;பாருங்கள்.




மேலும் நாம் ஒரு இணையதளம் பார்க்கையில் அதில் உள்ள புகைப்படங்கள் நமக்கு பிடித்திருந்தால் அதனை இ;தில் உள்ள டவுண்லோட் போட்டோ கிளிக் செய்திடஅந்த இணையத்திலி; உள்ள அனைத்து புகைப்படங்களும் நமக்கு கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்து கணிணியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அதுபோல கிரிக்கெட் ரசிகர்களுக்குஎன யூசி கிரிக்கெட் என சின்ன ஐகான்கொடுத்துள்ளார்கள். அதனை கிளிக் செய்ய கிரிக்கெட் விளையாட்டின விளையாடும் இடம் மற்றும் அணிகள் பற்றிஅறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பிடித்த சாபட்வேரினையோ இதர வீடியோவினையோ பதிவிறக்கம் செய்வதென்றால் இதில் உள்ள டவுணலோடு கிளிக் செய்திட பதிவிறக்கம் விரைந்து நடக்கும். மேலும் நீங்கள் நான்கைந்து இணையபக்கங்கள் ;திறந்து வைத்திருந்தால் இதில் உள்ள டேப்வியூவர் கிளிக் செய்திட அனைத்து இணையபக்கங்களும் உங்களுக்கு ஓரே விண்டோவில் தோன்றும்.இதன் கீழே வலது மூலையில் கொடுத்துள்ள ஸ்லைடரை கிளிக்செய்திட மானிட்டரின் வெளிச்சத்தினை கூட்டவோ குறைக்கவோ செய்திடலாம். மேலும் இதில் உள்ள எழுததுக்களை பெரியதாக பார்க்க நாம் கன்ட்ரோல் மற்றும் கூட்டல் கிளிக் செய்து எழுத்துக்களை பெரியதாக பார்ப்போம். ஆனால இந்த தேடுபோறியில் நாம் இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்துவது மூலம் எழுத்துக்களை பெரியதாகவோ சிறியதாகவோ மாற்றிப்பார்க்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கணிணி வேலைநேர பயன்பாட்டினை அறிந்துகொள்ள-Worktime Personal Free

அலுவலகம் மற்றும் இல்லங்களில் கணிணியின் உபயோகத்தினை அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. அலுவலகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் எவ்வளவு நேரம் எந்த எந்த இணையதளம் பயன்படுத்தினார் என்பதனை சுலபமாக அறிந்துகொள்ளலாம்.7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.

இதில் பேஸ்புக்.விளையாட்டு.இன்டர்நெட் மற்றும் கணிணி உபயோகம் என தனிதனியே நேரங்கள் டிஸ்பிளே ஆகும்.
கணிணியின் மொத்த உபயோகம் கிளிக் செய்திட நீங்கள் எந்த எந்த நேரம் எந்த இணையதளத்தினை பார்த்தீர்கள் என தெரியவரும்.
இணைய தளங்களில் எந்த எந்த வெப் சைட்டுக்களை பார்த்தீர்கள் என டிஸ்பிளே வானது சார்ட் வடிவில் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.ட
அதுபோல கணிணியில் எந்த சாப்ட்வேரினை பயன்படுத்தினீர்கள்.எந்த ப்ரேவ்சர் உபயோகித்தீர்கள் என்பதனையும் எவ்வளவு சதவீதம் பயன்படுத்தினீர்கள் என்பதனையும் சுலபமாக அறிந்துகொள்ளலாம். கிழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.
சாப்ட்வேர் உபயோகத்தில் நீங்கள் எந்த எந்த சாப்ட்வேரினை பயன்படுத்தினீர்கள் அதனை எவ்வளவு நேரம் பயன்படுத்தினீர்கள் என்பதனையும் அறிந்து கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
வீட்டில் படிக்கும் மாணவர்கள் இருந்தால் அவர்கள் எவ்வளவு நேரம் கணிணியை பயன்படுத்தினார்கள். எவ்வளவு நேரம் பேஸ்புக் பார்த்தார்கள். எவ்வளவு நேரம் விளையாடினார்கள் என்பதனை துல்லியமாக அறிந்துகொள்ளலாம்.மேலும் இந்த சாப்ட்வேர் கீழ்புறம் தொடர்ந்து கணிணியை பயன்படுத்துவர்கள் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்வதற்கான சின்ன சின்ன டிப்ஸ்களையும் கொடுத்துள்ளார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.. 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Macgo Free Media Player

நம்மிடம் உள்ள வீடியோ ஆடியோ பைல்களை கேட்டு பார்த்து மகிழவும்.டிரைவில் உள்ள பார்த்து மகிழவும் இணையதள யூஆர்எல் மூலம் வீடியோ பார்த்து மகிழவும் இந்த சின்ன பிளேயர் உதவுகின்றது. 34 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் ஓப்பன் பைல் கிளிக்செய்து நமது கணிணியில் உள்ள வீடியோ ஆடியோ பைல்களை தேர்வு செய்யலாம். ஓப்பன் டிஸ்க் கிளிக்செய்து டிரைவில் உள்ள வீடியோ ஆடியோவினை கேட்டு மகிழலாம்.
 இதில் உள்ள அட்ஜஸ்ட்மென்ட் கிளிக் செய்வதன் மூலம் நமது வீடியோவின் 
Brightness.Saturation.Contrast.Gamma.Hue போன்றவற்றை நமது தேவைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.கீழேஉள்ளவிண்டோவில் பாருங்கள்.
வீடியோவினை வேண்டிய அளவிற்கு கிராப் ;செய்யவும். வேண்டிய அளவிற்கு பெரியதாகவோ சிறியதாகவோ மாற்றிப்பார்க்கவும்.வேண்டிய படத்தினை சினாப்ஷாட் எடுக்கவும் இது பயன்படுகின்றது. சிறிய அளவிளான இந்த சாப்ட்வேர் என்னற்ற வசதிகளை கொண்டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத:துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஆதார் அடையாள அட்டையில் மாற்றங்கள் செய்திட-Aadhaar

ஆதார் அடையாள எண் இப்போது அனைத்து அரசு பணிகளுக்கும்அவசியமாகிவிட்டது.ஆதார் அடையாள அட்டையில் உங்களைப்பற்றிய விவரங்கள் சரியாக இல்லையென்றால் ஆன்லைன் மூலம் சரிசெய்து புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டையை சரிசெய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பன்னிரண்டு இலக்க  எண்ணை உள்ளீடு செய்யவும்.இதில் உள்ள OTP கிளிக் செய்யவும்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். அதில் உங்கள் கைப்பேசியில் வந்துள்ள எண்ணை உள்ளீடு செய்யவும்..(OTP எண்ணானது உங்களது கைப்பேசிக்கு அனுப்பப்படும் எண்ணாகும்.) பின்னர் லாகின்செய்யவும்.


உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பெயர்.பாலினம்.பிறந்த தேதி.முகவரி.கைப்பேசி எண்.இமெயில் முகவரி போன்றவற்றில் எதனை மாற்றிக்கொள்ள விரும்புகின்றீர்களோ அதற்கு எதிரே கிளிக் செய்யவும்.

பிறந்த தேதி மாற்றுவதாக இருந்தால் DOB என்பதனை  கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் கொடுக்கப்பட்டுள்ள காலேண்டர் மூலம் உங்களது சரியான பிறந்த தேதியை தேர்வு செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும். இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக உங்களிடம் உள்ள உங்கள் பள்ளிச்சான்றிதழோ.பிறப்பு சான்றிதழோ.அல்லது ஒரிஜினல் சான்றிதழின் நகலை உங்கள் கணீணியின் மூலம் அப்லோடு செய்யுங்கள்.

உங்களுக்கான ஆதார்அடையாள அட்டையில் விவரம் மாற்றப்பட்டு 15 தினங்களுக்குள் உங்களுடைய கைப்பேசிக்கு தகவல் வரும். நேரில் சென்றோ அல்லது உரிய பணம் செலுத்து அஞ்சல் மூலமோ உங்களுடைய புதிய ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போல்டரில் பத்துவிதமான வடிவங்கள் கொண்டுவர-Dr.Folder-Yt Computing

கணிணியில் பயன்படுத்தும் போல்டர்கள் ஓரே நிறத்தில் இருக்கும். பெயரை வைத்துதான் நாம் போல்டரை தேர்வு செய்யவேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் நாம் போல்டருக்கு பத்துவிதமாக வித்தியாசபடுத்தி  கொடுக்கலாம்.7 எம்.பி.கொள்ளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நாம் மாற்றவிரும்பும்போல்டரையோ மல்டிபிள போல்டரையோ தேர்வு செய்யவும். பின்னர் இதில் வலதுபுறம் உள்ள டேபினை காணவும். இதில் Work;.Colors.Stars.Letters.Everyday.Additional.User Icons.Numbers.Type.and Zodiac என பத்துவிதமான ஆப்ஷன்கள்கொடுத்துள்ளார்கள்.

இதில் உள்ள கலரினை தேர்வு செய்ய 12 விதமான நிறங்கள் நமக்கு கிடைக்கும்.வேண்டிய நிறத்தினை நாம் தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள அப்ளை கிளிக் செய்யவும்.உங்களுக்கான போல்டர் விரும்பிய நிறத்தில் மாறியிருப்பதை காணலாம்.

இதில் உள்ள ஸ்டார் கிளிக் செய்ய ஒன்றிலிருந்து ஐந்து வரையிலான ஸ்டார் உடன் போல்டர் கிடைக்கும். பைலின்தரத்திற்கு ஏற்ப நாம் ஸ்டார் குறியீடு கொடுக்கலாம். 

இதில் உள்ள லெட்டர்ஸ் கிளிக்  செய்ய A முதல் Z வரையிலான எழுத்துக்கள் கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்யலாம். கீழே உள்ள விண்டூவில் பாருங்கள்.

இதில் உள்ள Everyday கிளிக் செய்ய உங்களுக்கு விதவிதமான முககுறியீடுகள் கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்யலாம்.

இதில் உள்ள Additional கிளிக் செய்ய விதவிதமான புகைப்படங்களுடன் ஐகான்கள் கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


 அலுவலக உபயோகத்திற்கு ஏற்ப இதில் உள்ள ஐகானை தேர்வு செய்து அதில் பைல்களை வைத்துக்கொள்ளலாம்.
0 விலிருந்து 9 வரையிலான எண்கள்கொடுத்துள்ளார்கள். தேவையான எண்ணினை நாம் தேர்வு செய்து வைத்துக்கொள்ளலாம்.

போல்டரின் டைப் - வகைக்கு ஏற்ப நாம் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இறுதியாக விலங்குகளின் புகைப்படங்களை கொடுத்துள்ளார்கள். தேவையான புகைப்படத்தினை நாம் தேர்வு செய்யலாம். கிழெ உள்ள விண்டூவில் பாருங்கள்.

போல்டரின் ஐகானை ரைட்க கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதன் மூலமும் நாம் போல்டருக்கு விரும்பிய வடிவத்தினை கொடுத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு போல்டருக்கும் ஒவ்வொருவிதமான வடிவங்கள் என மொத்தம் பத்து வடிவங்கள் கொடுத்து மொத்தமாக உள்ள போர்டர் வியூ கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

நீங்கள் பைல்களை விரைந்து தேடவும். குறிப்பிட்ட பைல்களுக்கு சரியான குறியீட்டினை வழங்கவும் இந்த  சாப்ட்வேரினை பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...