கம்யூட்டர் திரையில் ஆன் கீ-போர்ட் உபயோகிப்பது எப்படி?How to Use On-Screen Key Board in Computer?

கம்யூட்டர் திரையில் ஆன் கீ-போர்ட்
உபயோகிப்பது எப்படி?
How to Use On-Screen Key Board in Computer

புதியவர்களுக்காக
நாம் தட்டச்சு செய்யும் சமயம் கீ-போர்ட் நமது

கம்யூட்டரின் ஸ்கிரீனில் இருந்தால் நன்றாக

இருக்கும் என எண்ணுவோம். குறிப்பாக புதிதாக

தட்டச்சு செய்பவர்களும்- தமிழில் முதன்முதலில்

தட்டச்சு செய்பவரகளுக்கும் இதை யோசிப்பார்கள்.

இந்த வசதியை பெற நான் எந்த சாப்ட் வேரையும்

பதிவிறக்கம் செய்ய வேண்டாம். நமது கணிணியிலே

யே அந்த வசதி உள்ளது. அதை எப்படி பெறுவது

என் பார்ப்போம்.

முதலில் நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டிய வேர்ட்,

நோட்பேட், வோர்ட் பேட் எதுவானாலும் திறந்து

கொள்ளுங்கள். அடுத்து Start-Programs-Accessories-

Accesability-On Screen Keyboard(இது நான்காவது

வரியில் இருக்கும்) வரிசையாக தேர்ந்தேடுக்கவும்.

அதில் உள்ள On-Screen Keyboard -ஐ கிளிக் செய்யவும்.


இப்போது உங்களுக்கு இந்த கீ-போர்ட் உங்கள்

கம்யூட்டர் ஸ்கீரினில் வந்து அமர்ந்து கொள்ளும்.


இதில் நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய

விரும்பினால் இதில் உள்ள Settings கிளிக்

செய்தால் உங்களுக்கு கீழ்கண்டவாறு

சாரளம் விரியும்.



அதில் நீங்கள் Font -ஐ தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



உங்களுக்கு பிடித்த ஆங்கில பாண்ட் வகையை

தேர்வு செய்துக்கொள்ளுங்கள். அதுபோல்

எழுத்துரு அளவையும் தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் தேர்வு செய்ததும் உங்களுடைய கணிணி

திரையில் உள்ள On-Screen KeyBoard ஆனது

நீங்கள் தேர்வுசெய்ததற்கு ஏற்ப மாறிவிடும்.


இதில் நீங்கள் இரண்டு வகைகளில் தட்டச்சு செய்யலாம்.

முதல்வகையானது நீங்கள் கணிணிக்கு புதியவராக இருந்தால்

உங்களுடைய மவுஸ் கர்சரை on screen Keyboard -ல்

நீங்கள் தட்டச்சு செய்ய வேண்டிய எழுத்தின்மீது

வைத்து நேரடியாக கிளிக் செய்தால் எழுத்தானது

கணிணிதிரையில் பதிவாகும். அடுத்த வழிமுறை

யானது நீங்கள் உங்கள் கைகளை கீ-போர்டில்

அதற்குரிய போசிசனில் வைத்துக்கொண்டு

திரையில் உள்ள எழுத்தைபார்த்து டைப் அடிப்பது.

நான் மேற்கண்ட படத்தில் Hello என டைப் அடித்து

உள்ளதை பாருங்கள். நாம் ஆங்கிலத்தில்

டைப் அடிப்பதை பார்த்தோம். அதுபோல் தமிழில்

தட்டச்சு செய்வதை இப் போது பார்ப்போம்.

முன்பு கூறியபடி Font தேர்வு செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கான Font க்கான சாரளம் ஒப்பன் ஆகும்.

அதில் தமிழுக்கான எழுத்துருவை தேர்வு செய்யுங்கள்.

நான் பாமினி எழுத்துருவை தேர்வு செய்துள்ளேன்.



நீங்கள் விரும்பும் எழுத்துரு, அதன் அளவு, மற்றும் அமைப்பு

(Font -Font Style - Font Size ) தேர்ந்தேடுத்து ஓகே கொடுங்கள்.


உங்கள் On-Screen Keyboard ஆனது தமிழுக்கு மாறி விட்டதை

பாருங்கள். இனி நீங்கள் தமிழுக்கு எந்தெந்த எழுத்து எங்கு

உள்ளது என தேட வேண்டாம். ஸ்கிரீனை பார்த்தே

தட்டச்சு செய்து கொள்ளலாம். இதில் உள்ள Caps Lock Key

அழுத்தினால் உங்களுக்கு கணிணியில் திரை மாறுவதை

காணலாம்.




இதில் நான் பாமினி பாண்ட் மூலம் தட்டச்சு செய்ததை

கீழே உள்ள படத்தில் காணுங்கள்.



நீங்கள் டைப்-ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமல் தட்டச்சு

பழக விரும்பினால் இதுபற்றி நான் ஏற்கனவே


பதிவை பாருங்கள் - பிடித்திருந்தால் ஓட்டுப்

போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

வலைபூவில் உதிரிப்பூ

இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
எல்லாவகை கணிணியின் மதர்போர்டில்உள்ளசிறிய புரோகிராம் பயாஸ் எனப்படும்.Hard Disc,Scree, Key Board ஆகியசாதனங்களை கட்டுப்படுத்தி அவைகள் சரியாக இருந்தால் மட்டுமே கணிணி இயங்க அனுமதியளிக்கும் சிறந்த கேட்கீப்பர் ஆகும்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

பிறந்தநாள் முதல் இன்றுவரை உங்கள் வயதை அறிய-Easy way to Calculate your Age

பிறந்தநாள் முதல் இன்றுவரை உங்கள் வயதை அறிய
(Easy way to Calculate your Age)


நண்பர் ஒருவர் நம்மைபார்க்க வருகிறார்.
நண்பர்:- வணக்கம்..நலமா?
நாம்:- நலம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?வீட்டில்
எல்லோரும் நலமா?
நண்பர்:-எலலோரும் நலம்.
இப்படி ஆரம்பித்த பேச்சின் நடுவே நமது நண்பர்
நமது வயதை கேட்கிறார்.
நண்பர்:- ஆமாம் உங்கள் வயது என்ன?
நாம்:- அது ஆவுது மூன்று கழுதை வயது?
நண்பர்:- அட ஒருகழுதைக்கு என்ன வயது -
அதை சொல்லுப்பா?
நண்பர்:- சரி அதை விடு. உனக்கு திருமணமாகி
எவ்வளவு நாள் ஆகின்றது.
நாம்:- அட நீ வேறே...அதையெல்லாம் ஞாபகப்படுத்தி
கொண்டு.....
நண்பர் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு விடைபெறுகிறார்.
சரி நமது வயது தான் என்ன, ? திருமணம் ஆகி எவ்வளவு
நாள் ஆகின்றது. நமது குழந்தைகளின் வயது என்ன?
நண்பர் சென்றதும் நாம் யோசிக்கின்றோம். நமது வயதை
தோராயமாக கணக்கிடலாம். ஆனால் வருடம்-மாதம்-
தேதி கணக்கிட என்ன செய்வது.? நமக்கு உதவ தான்
Excel உள்ளதே..அதில் வயதின் கணக்கு எப்படி போடுவது
என பார்ப்போம்.
முதலில் Excel ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இதன்
கீழ்புறம் பார்தால் உங்களுக்கு இந்த மாதிரி பக்க எண்
கிடைக்கும்.


அதில் உள்ள முதல் Sheet 1 மீது கர்சர்வைத்து ரைட்
கிளிக் செய்தால் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன்
ஆகும்.


அதில் Rename என்பதை தேர்வு செய்து தமிழிலோ -
ஆங்கிலத்திலோ உங்கள் பெயரை தட்டச்சு
செய்யுங்கள். அதுபோல் இதர Sheet 2,Sheet 3,Sheet 4,
ஆகியவற்றில் உங்கள் மனைவிபெயர், மகள்,
மகன் பெயர்களை தட்டச்சு செய்யுங்கள். இறுதியாக
உள்ள Sheet-ல் உங்கள் திருமண நாள் தட்டச்சு
செய்யுங்கள்.


சரி . அடுத்து இப்போது தேதிக்கு வருவோம் . முதலில் உள்ள
A1 காலத்தில் உள்ள செல்லைதேர்ந்தேடுங்கள். பின்
உங்களுடைய பிறந்த தேதியை அதில் பதிவிடுங்கள்.
அடுத்து உள்ள A2 செல்லில் அன்றைய தேதியை
பதிவிடுங்கள். உங்களுக்கு தொடர்ந்து உங்களுடைய
வயதை தெரிந்துகொள்ள விரும்பினால் A2 செல்லில்
=now( ) என பதிவிடுங்கள்.

இப்போது நீங்கள் Enter தட்டினால் உங்களுக்கு அன்றைய
தேதி வரும்(உங்கள் கம்யூட்டரில் என்ன தேதி உள்ளதோ
அந்த தேதி வரும்)

சரி வயதை கணக்கிட என்ன செய்வது?
அடுத்து கர்சரை ஏதாவது ஒரு செல்லில் வைத்து
கீழ்கண்ட பார்முலாவை தவறில்லாமல் தட்டச்சு
செய்யவும்.
=DATEDIF(A1,A2,"y") & " years, " & DATEDIF(A1,A2,"ym") & " months, " & DATEDIF(A1,A2,"md") & " days"
மீண்டும் ENTER தட்டவும். உங்களுக்கு கீழ்கண்டவாறு
விடை கிடைக்கும்.

இப்போது உங்கள் வயது - மாதம் - நாட்கள் வந்து விட்டதா?
இதில் A2 செல்லில் நீங்கள் தேதியை குறிப்பிட்டால் அந்த
தேதிவரை விடையும் =now( ) என பதிவிட்டால் நாட்கள்
தினம்தினம் கூடிக்கொண்டே செல்வதை காணலாம்.
உங்கள் குடும்பத்தினர் அனைவரது பெயரையும் ஒரு
Excel Work Book-ல் பதிவிட்டு அந்த புத்தகத்துக்கு
பெயர் ஒன்று வைத்து உங்கள் டெக்ஸ்டாப்பில்
வைத்துவிடலாம். தேவைபடும் சமயம் அதை
கிளிக் செய்து நாட்களை பார்த்துக்கொள்ளலாம்.
ஜனனகாலம் முதல் இன்று வரை உள்ள உங்கள்
வயதை தெரிந்துகொண்டீர்கள். உங்கள் மரண
தேதியை அறிய ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.
(புதியவர்கள் அங்கு சென்று பார்த்துக்கொள்ளவும்.)
மரண தேதியை அறிய கிளிக் செய்யவும்
பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டுப் போடுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.


இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
உங்கள் செல்போனில் நீங்கள் சென்றஇடத்தில் டவர் இல்லையா? நீங்கள் 112 டயல்செய்தால் அருகில்உள்ள பிற நிறுவனத்தின் டவரில்இருந்து உங்களுடைய செல்போனுக்கு சிக்னல் கிடைக்கும். 

 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-4


போட்டோஷாப் அடிப்படை பாடங்கள்-4



போட்டோஷாப் பாடங்கள் -4

இதுவரை போட்டோஷாப் பாடங்கள் 3 வரை

பார்த் தோம் . இதுவரை முன் பாடங்களை

படிக்காதவர்கள் முன்பதிவை படித்துவிட்டு

இதை தொடரவும். முன்பதிவை படிக்கா

தவர்களுக்காக மூன்று பாடங்களையும்

இங்கே பதிவிட்டுள்ளேன்.




போட்டோஷாப்பில் ஒருபடம் நாம்

மாறுதல்செய்வதற்கு முன் அதை பிரதி

DUBLICATE எடுத்துவைக்க சொல்லி

யிருந்தேன். நண்பர் ஒருவர் DUBLICATE

எப்படி எடுப்பது என கேட்டிருந்தார்.

அதனால் DUBLICATE எப்படி எடுப்பது என

முதலில் பார்ப்போம்.

உங்களுக்கு தேவையான படத்தை

முதலில் திறந்துகொள்ளுங்கள்.

நான் இந்த பிரம்மா படத்தை தேர்வு

செய்து திறந்துள்ளேன்.



இப்போது மேல் புறம் பார்த்தால் உங்களுக்கு

FILE,EDIT,IMMAGE,LAYER,SELECT... என

வரிசையாக இருப்பதில் IMMAGE -ஐ

தேர்வு செய்யுங்கள்.உங்களுக்கு வரிசையாக

கீழ்கண்டவாறு சாரளம் ஓப்பன் ஆகும்.



அதில் Dublicate என்பதை கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு படத்தின் மீது கீழ்கண்டவாறு

ஒரு விண்டோ திறக்கும்.


அதில் உங்களுடைய புகைப்படத்தின் பெயரோ - அல்லது

புகைப்பட எண்ணோ தோன்றும். அல்லது நீங்கள் விரும்பும்

பெயரையும் அதில் தட்டச்சு செய்யலாம். அடுத்து OK

கொடுங்கள்.உங்களுக்கு இந்த மாதிரி படம் இரண்டு

தோன்றும்.







இதில் ஒன்று நிஜம். மற்றது அதன் நிழல். நீங்கள் நிஜத்தை

மூடிவைத்துவிட்டு காப்பி யில்( நிஜத்தின் நிழலில்)

என்னவேண்டுமானாலும் செய்யலாம். மாற்றங்கள்

உங்களுக்கு பிடித்திருந்தால் அதை சேமியுங்கள்.

பிடிக்கவில்லையென்றால் அதை கான்செல்(cancel)

செய்துவிட்டு முன்பு கூறியபடி மீண்டும் ஒரு படத்தை

பிரதி(Dublicate) எடுத்துக்கொள்ளுங்கள்.

பிரதி எடுப்பதில் நன்கு பயிற்சிபெற நான்கு -ஐந்துமுறை

முயற்சிசெய்து பாருங்கள். சரியாக வரும்.

இனி பாடத்திற்கு வருவோம். சென்ற பதிவுகளில்

மார்க்யூ டூல் பற்றி பார்த்தோம். அதில் உள்ள

பிற வசதிகளையும் இப்போது பார்ப்போம்.

இதில் முன்வகுப்புகளில் Deselect,Select Inverse,

Feather... பற்றி பார்த்தோம். இதில் அடுத்துஉள்ளது

Save Selection..இதன் உபயோகம் நமக்கு இப்போது

தேவைபடாது . அதனால் அதை பின்பு பார்ப்போம்.

அடுத்து உள்ளது Make Work Path. இதை தேர்வு

செய்யுங்கள். நீங்கள் மார்க்யூ டூலால் தேர்வுசெய்த

பகுதியில் கர்சரைவைத்து கிளிக் செய்தால் வரும்

பகுதியில் Make Work Path செலக்ட்செய்யவும்.



இதில் உங்களுக்கு கீழ்கண்ட வாறு விண்டோ ஓப்பன்

ஆகும். அதில் டாலரன்ஸ் 5 என வைத்து ஓகே கொடுக்கவும்.


நான் கீழ்கண்ட படத்தில் அதை தேர்வு செய்துள்ளேன்.

இது படத்தை சுற்றி ஒரு கேர்டு போட்டவாறு நமக்கு

படம் கிடைக்கும். கும்பலாக உள்ள நபர்களின் படங்களில்

நமக்கு தேவையானவரை மட்டும் வட்டம் போட்டு,

கட்டம் கட்டி காண்பிக்க இது பயன்படுகிறது. பிரபல

மானவர்களின் கும்பலாக உள்ள புகைப்படத்தில்

அவரைமட்டும் காண்பிக்க வட்டம் - கட்டம் கட்டி

யுள்ளதை பார்த்திரு்ப்பீர்கள். அதை இதன் மூலம்

செய்யலாம்.


அடுத்து நாம் பார்ப்பது லேயர் வழி காப்பி. சரி லேயர்

என்றால் என்ன? போட்டோஷாப்பின்

உயிர் நாடியே லேயர் எனலாம். அதுபற்றி

பின்னர்வரும் பாடங்களில் விரிவாக

பார்க்கலாம். சரி லேயர் எப்படி வரவழைப்பது?

மிகவும் சுலபம். உங்கள்கீ-போர்டில் F7 கீயை

ஒரு முறை அழுத்துங்கள் . உங்களுக்குக்கான

லேயர்ஒன்று திறந்திருப்பதை பார்க்கலாம்.


சரி பாடத்திற்கு வருவோம். மார்க்யூ டூலால்

தேர்வு செய்து வரும் விண்டோவில் அடுத்து

வருவது layer via copy . இதை கிளிக் செய்தவுடன்


நீங்கள் தேர்வு செய்த படம் ஆனது லேயரில்

சென்று அமர்ந்துகொள்ளும். படத்தை பாருங்கள்.


அதைப்போலவே லேயர் வழி கட்.(Layer via Cut)


இதை தேர்வு செய்தாலும் உங்களுக்கு முன்பு

சொன்னவாறே லேயரில் படம் தேர்வாகும்.


அடுத்து உள்ளது New Layer. ,இதை கிளிக் செய்தால்

உங்களுக்கு புதிய லேயர் ஒன்று உருவாகும்.


அதில் உள்ள New Layer கிளிக் செய்யவும்.


உங்களுக்கு புதிய விண்டோ திறக்கும் . அதில் மாற்றம்

ஏதும் செய்யாமல் ஓகெ கொடுக்கவும். புதிய லேயர்

ஒன்று உருவாகியுள்ளதை பார்ப்பீர்கள்.


லேயர்பற்றிய பாடத்தில் இதைபற்றி விரிவாக

பார்க்கலாம். அதுபோல் அடுத்த பாடத்தில்

Free Transform பற்றி பார்க்கலாம். பதிவின்

நீளம் கருதி பாடத்தை இத்துடன் முடிக்கின்றேன்.

இங்குள்ள கோயிலின் சிற்பங்கள் தேரில்

பொருத்துவதற்காக வைத்துள்ளவை.

பதிவை படித்துப்பாருங்கள். பிடித்திருந்தால்

ஒட்டுப்போடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
சென்ற பதிவுகளில் Pixel & Resulation பற்றி பார்த் தோம்.


இன்று குறைந்த ரேசுலேசன் மற்றும் அதிக ரேசுலேசன்
பற்றி பார்ப்போம்.
Low Resolution:- Pixel குறைவாக இருக்கும். படத்தில் தெளிவு
இருக்காது. ஆனால் பைலில் குறைந்த இடத்தைப்பிடிக்கும்.
(KB அளவு குறைவாக இருக்கும்)
High Resolution:-Pixel அதிகமாக இருக்கும். படம் அருமையாக
இருக்கும். ஆனால் பைலில் அதிக இடம் பிடிக்கும்.
(KB அளவு அதிகமாக இருக்கும்).
உதாரணமாக ஒரு படத்தை நாம் 4inx6in தேர்வுசெய்து அதன்
Resollution 200 DPI என வைத்தால் (4x200)x(6x200) =800x1200
=9,60,000 Pixel - அதாவது மொத்தம் 9லட்சத்து அறுபதாயிரம்
புள்ளிகள் அந்த படத்தில் இருக்கும்.(தலை சுற்றுகிறதா).
மிகப்பெரிய படத்தை பிரிண்ட் செய்யும் போது அதிக
Resolution வைத்தால் படம் அழகாக இருக்கும்.குறைவாக
வைத்தால் படம் புள்ளிபுள்ளியாக தெரியும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

அனைத்து இணையதள முகவரிகளையும் மொத்தமாக பார்க்க

அனைத்து இணையதள முகவரிகளையும்

மொத்தமாக பார்க்க



நாம் நமக்கு பிடித்ததை புக்மார்க் செய்து 

















HOME:- இதில் மொத்தம் 49 தலைப்புகளில்

சுமார் 490 முகவரி தளங்கள் உள்ளன.

உள்ளது. 









அடுத்ததாக உள்ளது ENTERTAINMENT. இதில்

18 தலைப்புகளில் சுமார் 180 முகவரிதளங்கள்

உள்ளது.







அடுத்ததாக GAMES. இதில் 25 தலைப்புகளில் 

சுமார் 250 விளையாட்டுகள் உள்ளது.




அடுத்து குழந்தைகளுக்கான தளம். இதில் 15 தலைப்புகளில்

சுமார் 150 ம்கும் மேற்பட்ட முகவரிதளங்கள் உள்ளது.



அடுத்து SHOPPING தளம் இதில் 11 தலைப்புகளில்

110 முகவரிதளங்கள் உள்ளது.



அடுத்து உள்ளது TRAVEL.  இதில் 15 தலைப்புகளில்

மொத்தம் 150 முகவரி தளங்கள் உள்ளது.




இறுதியாக உள்ளது WEEKLY FLAVES -இதில் 12 தலைப்பு

களில் மொத்தம் 120 முகவரிதளங்கள் உள்ளது.



இந்த இணைய தளங்களை மொத்தமாக 

பார்க்க - பதிவிறக்கம் செய்ய -


தளத்தை பாருங்கள் . பிடித்திருந்தால்

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

ஒரு சின்ன எச்சரிக்கை:- இப்பொழுது 

குழந்தைகளுக்கான தேர்வு நேரம். இதில்

உள்ள தளங்களை மறந்தும் குழந்தைகளுக்கு

காண்பிக்க வேண்டாம்.இதில் உள்ள

விளையாட்டுகளில் கவனம் செலுத்தினால்

தேர்வில் கவனம் சிதறும். தேர்வுகள்

 முடிந்ததும்இந்த தளத்தை பார்க்க

 அனுமதியுங்கள்.அவர்களுக்கு 

விடுமுறை பயனுள்ளதாக கழியும்.

வாழ்க வளமுடன்.

வேலன்.

இன்றைய வலைப் பூவில்
உதிரிப் பூ
கீ - போர்ட்டில் ஒரு செயலை செய்து மீண்டும்

அதே செயலை மாற்றம் செய்ய உதவும் கீ -களை 

டாக்கில் கீ என்று அழைப்பார்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...