நாம் இணையத்தில் இருந்து பைலை டவுண்
லோடு செய்வோம். அது சுருக்கப்பட்ட பைலாக
இருந்து அதை ஓப்பன் செய்து பார்க்கையில்
குறிப்பிட்ட பைல்கள் பழுதடைந்திருந்தால்
நமக்கு எரர் என்று மெசேஜ் வந்து அந்த
மொத்த பைலுமே ஓப்பன் ஆக மறுக்கும்.
அந்த சமயங்களில் winrar மூலம் நாம்
பைலை திறந்து அதில் உள்ள பழுதான
பாகங்களை நீ்க்கிவிட்டு சேதமாகாத
பாகங்களை உபயோகிக்கலாம்.முதலில்
நீங்கள் winrar மூலம் பைலை திறந்து
கொள்ளுங்கள் . அந்த பைலின் மேல்
கர்சர் வைத்து ரைட் கிளிக் செய்தால்
உங்களுக்கு இந்த மாதிரியான காலம்
ஒப்பன் ஆகும்.
அதில் உள்ள Extract the Specified Folder தேர்வு செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்டவாறு காலம் ஓப்பன் ஆகும்.
இதில் Keep Broken Files எதிரில் உள்ள ரேடியோ பட்டனை
தேர்வு செய்து நீங்கள் சேமிக்கும் இடத்தையும் தேர்வு
செய்து ஓகே கொடுத்தால் உங்களுடைய பைலானது
விரிக்கப்பட்ட நிலையில் அந்த போல்டரில் அமர்ந்து
விடும். அங்கு சிதைந்துபோய் நல்ல நிலையில் உள்ள
பைல்களை நாம் உபயோகித்துக்கொள்ளலாம்.
பழுதடைந்த பைல்களில் இருந்து தகவல்களை
மீட்டெடுக்க தற்காலிகமான வழியாக
இதை நான் பதிவிட்டுள்ளேன்.
மாற்றுவழியிருந்தால் கருத்துரையில் பதிவிடவும்
வாழ்க வளமுடன்,
வேலன்.
இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
USB போர்டில் நாம் பென்டிரைவ் முதல் கேபிள்வரை அனைத்தையும் அதில் இணைப்போம். ஆனால் அதில் உள்ள பின் இணைக்கும் சமயம் நமக்கு தடுமாறும். பின்னை திருப்பி திருப்பி இணைக்க முயல் வாம். இந்த குறை நீக்க சரியாக பின்னை இணைத்ததும் மேல்புறம் ஸ்டிக்கர்போட்டுஒட்டிவிட்டால் அடுத்த முறைபின் சொருகும் சமயம் பொட்டு மேல்புறம் வருமாறு வைத்து பின் சொருகினால் தடுமாறாமல் நாம் அதை பின்னுடன் இணைக்கலாம்.
6 comments:
நல்ல தகவல். தந்தமைக்கு நன்றி
வேலன்,
போகிற போக்கில் உங்கள் பதிவை தொடர்ந்து படிக்கிற நம் நண்பர்கள் கணிணி வகுப்புக்கு போகவே தேவையில்லை போன்ற நிலை வந்தாலும் வரலாம்.
உங்கள் பதிவுகள் புதிதாய் கணிணியை பழகுபவர்களுக்கு மிக்க உதவியாய் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
வாழ்க உங்கள் தொண்டு.
வாழ்க வளமுடன்
என்றும் நலமுடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்
தமிழ்நெஞ்சம் கூறியது...
நல்ல தகவல். தந்தமைக்கு நன்றி//
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Muthu Kumar_Singapore கூறியது...
வேலன்,
போகிற போக்கில் உங்கள் பதிவை தொடர்ந்து படிக்கிற நம் நண்பர்கள் கணிணி வகுப்புக்கு போகவே தேவையில்லை போன்ற நிலை வந்தாலும் வரலாம்.
உங்கள் பதிவுகள் புதிதாய் கணிணியை பழகுபவர்களுக்கு மிக்க உதவியாய் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
வாழ்க உங்கள் தொண்டு.
வாழ்க வளமுடன்
என்றும் நலமுடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்//
நண்பரே...எல்லாம் தங்கள் ஆசிர்வாதங்கள் தான். பால பாடத்தை தங்களிடமு்ம் , நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களிடமும் கற்றுக்கொண்டேன்.எனது நிறைய சந்தேகங்களை நிவர்த்தி செய்தவர்கள் நீங்கள்-பி.கே.பி-தமிழ்நெஞ்சம் ஆகியவர்கள்.தங்கள் கருத்துக்கு நன்றி.
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
உபயோகமான நல்ல தகவல்... தொடரட்டும் உமது பணி...
ராஜன் கூறியது...
உபயோகமான நல்ல தகவல்... தொடரட்டும் உமது பணி..ஃஃ
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரெ...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Post a Comment