நமது புகைப்படத்தை போஸ்டரில் அச்சிட

நமது புகைப்படத்தை போஸ்டர்சைஸில்

நமது பிரிண்டரிலே யே அச்சிட


உங்கள் ஆதரவுடன் 75 வது பதிவு





நமது படத்தை போஸ்டர் சைஸில் அச்சடிக்க

நம்மிடம் சிறந்த படங்கள் இருக்கும். அதை

மிக பெரியதாக ஆக்க விரும்புவோம். ஆனால்

நம்மிடம் அதிகபட்சமாக A4 பேப்பர் சைஸில்

அச்சடிக்கும் பிரிண்டர்தான் இருக்கும். அதை

வைத்து மிக பெரிய பிரம்மாண்டமான

போஸ்டர் எப்படி அச்சடி்ப்பது? அதற்கு தான்

இந்த இலவச சாப்ட்வேர் உதவுகிறது.

இதை முதலில் பதிவிறக்கம் செய்து நிறுவிக்

கொள்ளுங்கள்.

நேரடியாக தளத்தில் இருந்து பதிவிறக்கம்


பதிவிறக்கம் செய்ததை 4Shared.com மூலம்


பின்னர் அந்த சாப்ட்வேரை

ஓப்பன் செய்கையில் உங்களுக்கு இந்த

பக்கம் ஓப்பன் ஆகும்.



அதில் உள்ள மொழியை தேர்வு செய்யவும்.

தமிழைதவிர இதர மொழிகள் உள்ளது. நாம்

ஆங்கிலத்தை தேர்வு செய்வோம்.


அடுத்து நாம் தேர்ந்தேடுப்பது Text.

இதில் மொத்தம் நான்கு பெட்டிகள்

உள்ளது. இதில் உள்ள பெட்டியில்

நாம் விரும்பும் வார்த்தைகளை சேர்க்கலாம்.



எழுத்துருக்களின் அளவையும் நிர்ணயிப்பதோடு

அல்லாமல் இடத்தையும் நிர்ணயிக்கலாம்.

அடுத்து Font. இதில் உள்ள கீழ்நோக்கிய அம்பு

குறியை தேர்வு செய்தால் உங்களிடம் உள்ள

பாண்ட்கள் தேர்வாகும். உங்களிடம் தமிழ்

பாண்ட் இருந்தால் அதையும் தேர்வு செய்யலாம்.

மேலும் அதில் உள்ள More கிளிக் செய்தால்

உங்களுக்கு கீழ்கண்ட் சாளரம் ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் Text -ன் அளவு -இடைவெளி-படத்தில்

இடம்பெற வேண்டிய பகுதி மற்றும் Text -ன் நிறத்தையும்

Shadow Color-ஷேடோ கலரையும்,Background-

பின்புற நிறத்தையும் தேர்வு செய்யலாம்.

நீங்கள் செய்கின்ற மாற்றங்களை உடனுக்குடன்

இதில் உள்ள Apply பட்டனை


தேர்வுசெய்து பார்த்துக்கொள்ளலாம்.

அடுத்து உள்ளது Photo. இதில் உங்கள் கணிணியில்

உள்ள டிரைவில் நீங்கள் விரும்பும் புகைப்படத்தை

தேர்வுசெய்துகொள்ளவும்.




அடுத்து அதில் உள்ள More கிளிக் செய்தால் உங்களுக்கு

இந்த சாரளம் ஓப்பன் ஆகும்.


இதில் நீங்கள் புகைப்படத்தின் அளவு மற்றும்

திசைகளையும் தேர்வு செய்துகொள்ளலாம்.

அடுத்து உள்ளது Border. புகைப்படத்தின் வெளிப்புறம்

வரவேண்டிய பார்டரின் வகைகளை உங்கள்

விருப்பபடிதேர்வு செய்யுங்கள்.


பார்டரின் அளவுகளையும் லைன்(Line) கலரையும்

பின்புற நிறத்தையும்(Background) தேர்ந்தேடுங்கள்.

இறுதியாக இருப்பது Size ஆகும்.இதில் முதலில்

நீங்கள் பிரிண்ட் செய்யவிருக்கும் பேப்பரின்

அளவை தேர்ந்தெடுங்கள்.



நான் A4,210x297 mm அளவு பேப்பரை தேர்ந்தேடுத்துள்ளேன்.

அடுத்து உங்கள் புகைப்படம் நீளவாக்கிலா (அ) அகல

வாக்கிலா என தேர்வுசெய்யுங்கள்.

நீங்கள் அகலவாக்கில் தேர்வு செய்தால் இதில்

உள்ள width அளவு அதிகமாகவும் நீளவாக்கில்

தேர்வு செய்தால் Hight அளவு அதிகமாகவும்

தேர்வு செய்யுங்கள். போஸ்டருக்கென சில

அடிப்படை அளவுகள் உள்ளது. அதாவது

3x2, 3x4,6x4,8x6,12x8,15x12,15x10,12x18,12x24

போன்ற அளவுகள் உள்ளது.இந்த அளவுகளில்

நாம் போட்டோவை பெரியதாக போட்டால்

தான் போஸ்டர் அழகாக இருக்கும்.

இதில் உள்ள Width மற்றும் Hight அளவுகளில்

நீங்கள் விரும்பிய அளவை கொடுக்கவும்.

இதில் உள்ள Apply பட்டனை கிளிக் செய்து

பக்கத்தில் உள்ள பிரிவியு பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்கு வலப்புறம் நீங்கள்

விரும்பிய போஸ்டர் இருக்கும்.




இதில் Num கீழ் அம்புக்குறி இருக்கும். இதில் தேர்வு

செய்யும் பாகமானது வலப்புறம் கீழே தெரிய

ஆரம்பிக்கும். இதில் நீங்கள் விரும்பிய அளவில்

பெரிதுபடுத்தி பார்க்கலாம்.



அனைத்து மாற்றங்களும் செய்து முடித்ததும் நீங்கள்

உங்களுடைய பெயரை சேர்த்து பிரிவியு பார்க்கலாம்.

இந்த சாப்ட்வேரில் நீங்கள் போஸ்டர் ஓட்ட ஏதுவாக

ஒவ்வொறு துண்டுகளின் இடையே இடைவெளி

இருப்பது இந்த சாப்ட்வேரின் சிறப்பாகும். இதனால்

நமது புகைப்படமானது இடைவெளியில்லாமல்

போஸ்டரில் அழகாக இருக்கும்.



இதில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது

உங்கள் புகைப்படத்தின் ரெசுலேசனை அதிக படுத்தி

பிரிண்ட் போடவும்.சுமார் 450 முதல் 600 வரை

ரெசுலேசனை தேர்வு செய்யலாம். பெரியதாக படம்

வர அழகாக இருக்கும்.(ரெசுலேசனை பற்றி

போட்டோஷாப் பாடத்தில் பின்னர்

பதிவிடுகின்றேன்).

இந்த பதிவு பிடித்திருந்தால் ஓட்டுபோடவும்.

உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள்.

உங்கள் மேலான ஆதரவுடன் இது எனது

75 வது பதிவாகும்.

இதுவரை வந்துள்ள 9200 பார்வையாளர்

களுக்கும் எனக்கு ஆதரவு தரும் பின் தொடர்

பவர்கள் 37 நண்பர்களுக்கும்

சிறந்த கருத்துக்களை வழங்கும் கருத்துரை

யாளர்களான நண்பர்களுக்கும்

என் மனமார்ந்த நன்றி.

தொடர்ந்து உங்கள் ஆதரவுடன்

வாழ்க வளமுடன்:,

வேலன்.







பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

24 comments:

ஆனந்த். said...

-------வா
ழ்
த்
து
க்

ள்----------

ஆனந்த். said...

தங்கள் பதிவுகள் அனைத்தும்

மிக அருமையாக இருந்தது .

வெகு விரைவில் உங்களின்
100- வது பதிவை ( வித்யாசமான )

எதிர்பார்க்கிறேன்.

நன்றி,

"எல்லாரும் எல்லாமும்
பெற வேண்டும்" .

puduvaisiva said...

வாழ்த்துக்கள் வேலன்

வீணாபோனவன் said...

பயனுள்ள பதிவு... நன்றி தேழரே...

-வீணாபோனவன்.

சம்பத் said...

வேலன்,உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...தொடரட்டும் உங்கள் பணி..

வேலன். said...

ஆனந்த். கூறியது...
-------வா
ழ்
த்
து
க்

ள்----------//

நன்றி ஆனந்த் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆனந்த். கூறியது...
தங்கள் பதிவுகள் அனைத்தும்

மிக அருமையாக இருந்தது .

வெகு விரைவில் உங்களின்
100- வது பதிவை ( வித்யாசமான )

எதிர்பார்க்கிறேன்.

நன்றி,

"எல்லாரும் எல்லாமும்
பெற வேண்டும்" .//

எனது 50 வது பதிவிலும் வாழ்த்தினீர்கள். இந்த 75 வது பதிவிலும் வாழ்த்தினீர்கள். எல்லாம் உங்கள் ஆசிர்வாதங்களும்- அன்பும் தான்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
வாழ்த்துக்கள் வேலன்//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

வீணாபோனவன் கூறியது...
பயனுள்ள பதிவு... நன்றி தேழரே...

-வீணாபோனவன்.//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்:,
வேலன்.

வேலன். said...

சம்பத் கூறியது...
வேலன்,உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...தொடரட்டும் உங்கள் பணி..//

நன்றி சம்பத் அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Good citizen said...

Thank you for the superb explication

Anbu said...

தங்கள் பதிவுகள் அனைத்தும்

மிக அருமையாக இருந்தது அண்ணா!!.

வெகு விரைவில் உங்களின்
100- வது பதிவை எதிர்பார்க்கிறேன்.

யூர்கன் க்ருகியர் said...

தகவலுக்கு நன்றி. 75 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

Muthu Kumar N said...

வேலன்,

நீங்கள் 75 பதிவை தொட்டதிற்கு என் உளம் கனிந்த வாழ்த்துகள்.

போஸ்டர் மென்பொருள் அருமை, அதை எல்லோருக்கும் புரியும் வண்ணம் பதிவிட்டது அருமையிலும் அருமை. வாழ்த்துகள் உங்கள் கடின உழைப்பிற்கு.

உங்கள் முதல் பதிவிலிருந்து இப்போதைய பதிவிற்கும் பார்த்தால் அதன் வளர்ச்சியை மற்றும் வித்யாசத்தை கண்கூடாய் உணர முடிகிறது. உங்கள் பதிவின் முன்றேன்றம் நம் நண்பர்களின் கணிணிப் பசிக்கு சரியான Full Mealsசாய் அமைகிறது என்றால் அது மிகையாகது.

நீங்கள் மேன்மேலும் உற்சாகமாய் அதிகமாக இல்லாவிட்டாலும் அறியும் பூர்வமாய் புதிய மற்றும் வித்யாசமான பதிவுகளை உங்களிடமிருந்து நம் நண்பர்கள் எதிர் பார்க்கத் தொடங்கி விட்டனர் என்று நான் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

எனவே உங்கள் பதிவுகளில் புதுப் புது விடயங்களை அறிந்து கொள்ளும் ஆவலோடு நம் நண்பர்கள் உங்கள் பிளாக்கை திறந்து பார்கின்றனர். எனவே உங்களுக்கு வேலைப்பளு அதிகம்தான் ஆனாலும் இறைக்க இறைக்கத்தான் சுரக்கும் என்பது போல் நீங்கள் வித்யாசமான பதிவுகளை இடும்போது கிடைக்கும் மன நிறைவு மற்றும் அது கிடைக்கப்பெற்ற நம் நண்பர்களின் மன நிறைவை நீங்கள் எங்களின் கருத்துரையை படிக்கும் போது கிடைக்கும் நிறைவு எல்யையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்ற நம்பிக்கையோடு உங்கள் வருகின்ற பதிவுகளுக்கும் சேர்த்து Advance வாழ்த்துகள்.

வளர்க உங்கள் பணி,

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்

வேலன். said...

moulefrite கூறியது...
Thank you for the superb explication//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Anbu கூறியது...
தங்கள் பதிவுகள் அனைத்தும்

மிக அருமையாக இருந்தது அண்ணா!!.

வெகு விரைவில் உங்களின்
100- வது பதிவை எதிர்பார்க்கிறேன்.//

தங்கள் கருத்துக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி...நண்பரே..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜுர்கேன் க்ருகேர் கூறியது...
தகவலுக்கு நன்றி. 75 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்//

நன்றி நண்பரே...தங்களை சில நாட்களாக பதிவில் காணவில்லை...?

வாழ்க வளமுடன்:,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன்,

நீங்கள் 75 பதிவை தொட்டதிற்கு என் உளம் கனிந்த வாழ்த்துகள்.

போஸ்டர் மென்பொருள் அருமை, அதை எல்லோருக்கும் புரியும் வண்ணம் பதிவிட்டது அருமையிலும் அருமை. வாழ்த்துகள் உங்கள் கடின உழைப்பிற்கு.

உங்கள் முதல் பதிவிலிருந்து இப்போதைய பதிவிற்கும் பார்த்தால் அதன் வளர்ச்சியை மற்றும் வித்யாசத்தை கண்கூடாய் உணர முடிகிறது. உங்கள் பதிவின் முன்றேன்றம் நம் நண்பர்களின் கணிணிப் பசிக்கு சரியான Full Mealsசாய் அமைகிறது என்றால் அது மிகையாகது.

நீங்கள் மேன்மேலும் உற்சாகமாய் அதிகமாக இல்லாவிட்டாலும் அறியும் பூர்வமாய் புதிய மற்றும் வித்யாசமான பதிவுகளை உங்களிடமிருந்து நம் நண்பர்கள் எதிர் பார்க்கத் தொடங்கி விட்டனர் என்று நான் உங்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.

எனவே உங்கள் பதிவுகளில் புதுப் புது விடயங்களை அறிந்து கொள்ளும் ஆவலோடு நம் நண்பர்கள் உங்கள் பிளாக்கை திறந்து பார்கின்றனர். எனவே உங்களுக்கு வேலைப்பளு அதிகம்தான் ஆனாலும் இறைக்க இறைக்கத்தான் சுரக்கும் என்பது போல் நீங்கள் வித்யாசமான பதிவுகளை இடும்போது கிடைக்கும் மன நிறைவு மற்றும் அது கிடைக்கப்பெற்ற நம் நண்பர்களின் மன நிறைவை நீங்கள் எங்களின் கருத்துரையை படிக்கும் போது கிடைக்கும் நிறைவு எல்யையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்ற நம்பிக்கையோடு உங்கள் வருகின்ற பதிவுகளுக்கும் சேர்த்து Advance வாழ்த்துகள்.

வளர்க உங்கள் பணி,

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர்//

நீண்ட கருத்துக்கு நன்றி நண்பரே...
தாங்கள் கூறியது போல் முதல் பதிவிலிருந்து நான் அறிந்துகொண்டது அதிகம். நான் அறிந்துகொண்டதைவிட
பதிவிடும்போது அதைபற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைகிறது.நீங்கள் சொல்வதுபோல் ஓய்வு நேரம் கிடைப்பது அறிதாகின்றது.ஒரு பதிவு வெளியிட்டு அது தமிலிஷ்ஷில் பிரபல இடுகைகளில் வரும் சமயம் மனம் மகிழ்ச்சி அடைகின்றது. அடுத்து எதைபற்றி பதிவிடலாம் என மனம்
அலைபாய்கின்றது. தாங்கள் சொல்வதுபோல் கணிணி நண்பர்களுக்கு் முழுச்சாப்பாடு கிடைத்தால் எனக்கு மகிழ்ச்சியே...
தாங்கள் போன்றவர்களின் மனப்பூர்வமான ஆசியே எனக்கு போதும்.அதுவே எனக்கு நிறைய மனமகிழ்சியை தருகின்றது.
தொடர்ந்து உங்கள் ஆசிகளை விரும்பும்
என்றும் அன்புடன்:,
வேலன்.

டவுசர் பாண்டி said...

இன்னா இன்னாவோ,

எழ்தரே அண்த்தே, ஆனா ,

நமபுளுக்கு ஒன்னிமே பிரீலபா,

நா எப்பன்னா, விழ்து வாரிகுனு

வந்துட்றேன், தூள் டக்கரு பா .

வாய்த்துக்கள்.

வேலன். said...

டவுசர் பாண்டி கூறியது...
இன்னா இன்னாவோ,

எழ்தரே அண்த்தே, ஆனா ,

நமபுளுக்கு ஒன்னிமே பிரீலபா,

நா எப்பன்னா, விழ்து வாரிகுனு

வந்துட்றேன், தூள் டக்கரு பா .

வாய்த்துக்கள்.//

நன்றி டவுசர் பாண்டி அவர்களே..
எனக்கு உங்கள் பாஷையில் பதில் சொல்லவராது..

வாழ்க வளமுடன்,
வேலன்.

ஒரு அகதியின் நாட்குறிப்பு !!! said...

வணக்கம் வேலன் சார்,
நாளும் வந்து மறைகிற வலைப் பூக்கள் மத்தியில்
பத்தோடு இதுவும் ஒன்று என்று இருந்துவிடாமல் தங்கள் படைப்பை மற்றவர்க்கும் பயன் படவைக்கின்றீர்கள்.
வாழ்த்துக்கள்.

//.தாங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...எனது பதிவில் முதன்முதலாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன். வாழ்த்துக்கள். தாங்கள் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருந்தால் தெரிவிக்கவும். ஆவன செய்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.//
இது இரண்டாவது தடவையாக
வருகின்றேன். இனி நிதமும் வருவேன். உங்களுக்குத் தொந்தரவுதர.
நான் உண்மையில் கனடாவில் இருப்பவன்.photoshop (போட்டோஷாப் )
ற்கான கோப்பு தரவிறக்கம் பற்றிய
பதிலைத் தருவீர்களென எதிர் பார்க்கின்றேன்.
நீங்கள் வளமாக வாழ்ந்தால்தான் நாங்களும் நலமாக வாழலாம் என வாழ்த்துகிற
தமிழ்சித்தன்

வேலன். said...

இது இரண்டாவது தடவையாக
வருகின்றேன். இனி நிதமும் வருவேன். உங்களுக்குத் தொந்தரவுதர.
நான் உண்மையில் கனடாவில் இருப்பவன்.photoshop (போட்டோஷாப் )
ற்கான கோப்பு தரவிறக்கம் பற்றிய
பதிலைத் தருவீர்களென எதிர் பார்க்கின்றேன்.
நீங்கள் வளமாக வாழ்ந்தால்தான் நாங்களும் நலமாக வாழலாம் என வாழ்த்துகிற
தமிழ்சித்தன்//

தாங்கள் தமிழ்நாட்டில்வசித்தால் தாங்களுக்கு சி.டி.அனுப்பலாம் என எண்ணியிருந்தேன்.ஆனால் கனடாவில் வசிப்பதால் சிரமம். தாங்கள் கேட்டபடி இணையதள முகவரி இணைத்துள்ளேன். தங்களுக்குதேவையை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.முகவரி:-
http://www.mininova.org/search/?search=photoshop&cat=0//

தாங்கள் வருகையை நித்தம் எதிர்நோக்கும்

அன்பன்,
வாழ்க வளமுடன்,
வேலன்.

ராஜ நடராஜன் said...

ரெசுலேசன் 600 வரை போகலாமா?நான் 300 தாண்டியது கிடையாது.

ராஜ நடராஜன் said...

இன்று கற்றுக்கொண்ட பாடங்களில் முக்கியமானது.இடுகைக்கும் உங்கள் சிறந்த பணி தொடரவும் வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...