வேலன்:-போட்டோஷாப் பாடம்-35 PATCH TOOL


போட்டோஷாப்பில் இன்று PATCH TOOL பற்றி பார்ப்போம்.
இது சென்ற போட்டோஷாப்பில் பார்த்த Spot Healing Brush Tool
உடன் உள்ள உப டூல் ஆகும்.
சரி... இதன் மூலம் என்ன செய்யலாம். சேதமான பகுதியை
எடுத்துவிட்டு நல்ல பகுதியை பொருத்தலாம். நீங்கள்
பிளாஸ்டிக் சர்ஜரியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
நமது உடலிலிருந்து நல்லபகுதியை எடுத்து தேவையான
பகுதியில் பொருத்துவார்கள். அதுபோல் இந்த டூல் மூலம்
நமது முகத்தில் மேடு பள்ளமோ - வெட்டுக்காயமோ -
முகப்பருவோ - இருந்தால் இதன் மூலம் ச்ரிசெய்யலாம்.
சென்ற பதிவில் முகப்பருவை நீக்குவது பற்றி போட்டு
விட்டதால் இன்றைய பதிவில் வேறு உபயோகத்தினை
பார்க்கலாம். முகப்பரு - வெட்டுக்காயம் - மேடு பள்ளம்
நீக்குதலுக்கும் இந்த டூல் மிகவும் பயன்படும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள். இந்த படத்தில் உள்ள
மீன்கொத்திப் பறவை நமக்கு தேவையில்லை..அதை
எப்படி நீக்கலாம் என இப்போது பார்க்கலாம்.
இந்த டூலை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு சதுர
மாக கர்சர் மாறும். பின்னர் படத்தின் அருகே வைத்து வரைந்து
கொண்டு வாருங்கள்.கோடு பொட்டது மாதிரி வருகின்றதா....
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
தேவையான பகுதியை முழுவதும் தேர்வு செய்த கோட்டினை
நிறைவு செய்யுங்கள்.
இப்போது கர்சரை நடுவில் வைத்து அந்த பகுதியை மெது
வாக நல்ல பகுதிக்கு நகர்த்துங்கள். உங்கள் படம் கண்ணாடி
போல் மாறி நல்ல பகுதி வருவதை காண்பீர்கள். கீழே உள்ள
படத்தை பாருங்கள்.
எந்த இடம் தேவையோ அதுவரை நகர்த்தி பின் என்டர்
தட்டுங்கள்.
இப்போது பாருங்கள் மீ்ன்கொத்தி காணமல் போயிருக்கும்.
மேலும் உங்கள் உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அதில் உள்ள நாற்காலியை எடுத்துவிடலாம்.
நாற்காலியை எடுத்தஉடன் வந்துள்ள படத்தை பாருங்கள்.
நா
இதைப்போல் தேவையில்லாத பகுதியை எடுத்துவிட்டு
 தேவையான பகுதியை சுலபமாக வைத்துவிடலாம்.
மேலும் இதன் மூலம்என்னவெல்லாம் செய்யலாம்....
அது அடுத்தபாடத்தின் பதிவில்...
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
இதை நீங்களும் செய்து பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ம்...பூ வெல்லாம் பறிதது கொடுத்து எப்படியெல்லாம்
ஐஸ் வைக்க வேண்டியிருக்கு பாருங்க...
இன்றைய PSD டிசைனுக்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதை பதிவிறக்கம் செய்ய இங்குகிளிக் செய்யவும்.
இதுவரை போட்டோஷாப்பில் பேட்ச் டூலை தெரிந்து
கொண்டவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

ஜெய்லானி said...

அருமையான பதிவு

வேலன். said...

jailani கூறியது...
அருமையான பதிவு//

நன்றி நண்பர் jailani அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

nice post, it is usefull
tanks

ரமேஷ் said...

மிகவும் அருமை நண்பரே .
தங்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

முஹம்மது மபாஸ் said...

நான் அண்மையில் கூகிள் தேடுதலின் போது உங்களின் தளம் பார்க்க நேரிட்டது, உண்மையில் நீங்கள் செய்யும் இந்த அரிய சேவையால் பயனடைவோர் பட்டியலில் அன்றே நானும் சேர்ந்து கொண்டேன். உண்மையில் நீங்கள் தரும் இந்த குறிப்புக்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை இவ்வாறு கருத்துக்கள் எழதுவதன் மூலம் புரிய வைக்க முடியாது உண்மையில் இதை பெரிய சேவை என்று கூட சொல்லலாம். உங்களின் இந்த பணி மென்மேலும் வளர என் நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்.

mafas

mdniyaz said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
மீண்டும் எங்களுக்காக புதிய பதிவை தொடங்கிவிட்டீர்கள்.
வருக எங்கள் பக்கம், அள்ளி
தருக போட்டோ ஷாப் விளக்கம்.
குடியரசு தின வாழ்த்துக்கள்
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

வேலன். said...

பெயரில்லா கூறியது...
nice post, it is usefull
tanks//

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ரமேஷ் கூறியது...
மிகவும் அருமை நண்பரே .
தங்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள்ஃஃ

நன்றி ரமேஷ் ...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

mohammed கூறியது...
நான் அண்மையில் கூகிள் தேடுதலின் போது உங்களின் தளம் பார்க்க நேரிட்டது, உண்மையில் நீங்கள் செய்யும் இந்த அரிய சேவையால் பயனடைவோர் பட்டியலில் அன்றே நானும் சேர்ந்து கொண்டேன். உண்மையில் நீங்கள் தரும் இந்த குறிப்புக்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை இவ்வாறு கருத்துக்கள் எழதுவதன் மூலம் புரிய வைக்க முடியாது உண்மையில் இதை பெரிய சேவை என்று கூட சொல்லலாம். உங்களின் இந்த பணி மென்மேலும் வளர என் நெஞ்சம் கனிந்த வாழ்த்துக்கள்.

mafas

தங்கள் போன்றோரின் வாழ்த்துக்கள்தான் எழுதும் ஆவலை அதிகமாக மாற்றுகின்றது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி முஹமது அவர்களே..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பிரியமுடன் பிரபு கூறியது...
நன்றிஃஃ

நன்றி பிரவு அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

mdniyaz கூறியது...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
மீண்டும் எங்களுக்காக புதிய பதிவை தொடங்கிவிட்டீர்கள்.
வருக எங்கள் பக்கம், அள்ளி
தருக போட்டோ ஷாப் விளக்கம்.
குடியரசு தின வாழ்த்துக்கள்
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்//

நன்றி நண்பர் முஹம்மது நியாஜ் அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...