வேலன்:-சி.டி.டிரைவ் தானே திறந்து மூட

பதிவுலகில் நான் பதிவிட்டதில் மிக சிறிய சாப்ட்வேர்
இதுவாகதான் இருக்கும். இது மொத்தம் 32 கே.பி.தான்.
சிடி ட்ரேயில் நாம் சிடியை போட ஒன்று அதில் உள்ள
பட்டனை அழுத்துவோம். அல்லது கம்யூட்டரில் உள்ள
சிடி டிரைவ்விலிருந்து Eject அழுத்துவோம். ஆனால்
சிடியை போட்ட பின் நாம் அதில் உள்ள பட்டனை
கையால்தான் அழுத்தவேண்டும். ஆனால் இந்த
சாப்ட்வேரானது சிடியை போட்டவுடன் தானே மூடிக்
கொள்ளவும்-தானே திறக்கவும் ஒரே கிளிக் மூலம்
 செய்யலாம்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் 
செய்யவும்.இதை டவுண்லோடு செய்து உங்கள்
டெக்ஸ்டாப்பில்வைத்ததும் உங்களுக்கு
 இந்த படம் வரும்.
இதை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Open CD கிளிக்செய்ததும் உங்களுடைய
சிடி ட்ரே தானே திறக்கும்.வேண்டிய சிடி போட்டதும்
இதில் உள்ள Close CD கிளிக் செய்தால் சிடி ட்ரே தானே
மூடிக்கொள்ளும்.
சரி இதை தவிர வேறு என்ன செய்யலாம். நம் குழந்தைகளை
அழைத்து -இப்போது பார் ...நான் ஜீ பூம்பா என்று சொன்னதும்
இந்த சிடி ட்ரே தானே திறக்கும் எனலாம். அதைப்போல் 
மீண்டும் ஜீ பூம்பா சொன்னதும் தானே மூடிக்கொல்லும் பார்
என கூறலாம்.
பயன் படுத்திப்பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ச்சே...ச்சே...போட்டோ எல்லாம் வேண்டாம்பா....
எனக்கு வெட்கமாக இருக்கு....
இன்றைய PSD டிசைன்-54 க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-

இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
சிடியை இதுவரை திறந்து மூடியவர்கள்:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

15 comments:

ரமேஷ் said...

பயன் படுத்திப்பார்த்தேன் மிகவும் அருமை நண்பரே ,இதற்கு கூடவா software என்று வியந்தேன்

யூர்கன் க்ருகியர் said...

கம்பனில எங்க பாஸ் வாய தொறந்தா வள வளன்னு பேசிகிட்டு மூடவே மாட்டேன்கிறார். அதுக்கு எதாவது சாப்ட்வேர் குடுங்க சாமி !!!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

அருமையான தகவல் சார் ....

Anonymous said...

போடோஷாப் பாடம் இடுகை இட்டு ரொம்ப வாரம் ஆகுது.

வேலன். said...

ரமேஷ் கூறியது...
பயன் படுத்திப்பார்த்தேன் மிகவும் அருமை நண்பரே ,இதற்கு கூடவா software என்று வியந்தேன்ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமேஷ் அவர்களே..

வாழ்க வளமுடன்:,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
கம்பனில எங்க பாஸ் வாய தொறந்தா வள வளன்னு பேசிகிட்டு மூடவே மாட்டேன்கிறார். அதுக்கு எதாவது சாப்ட்வேர் குடுங்க சாமி !!!

திருநெல்வேலி அல்வா வாங்கி கொடுங்கள். அல்வா நன்றாக இருந்தால் உங்களிடம் பேசமாட்டார். நன்றாக இல்லாவிட்டால் அவரால் வாயே திறக்க முடியாது.முயற்சி செய்து பாருங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஸ்ரீ.கிருஷ்ணா கூறியது...
அருமையான தகவல் சார் .ஃஃ

நன்றி கிருஷ்ணா சார்....

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
போடோஷாப் பாடம் இடுகை இட்டு ரொம்ப வாரம் ஆகுது.ஃ

ஆம் நண்பரே...நேரம் போதவில்லை...விரைவில் வெளியிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

cheena (சீனா) said...

அன்பின் வேலன்

தகவலுக்கு நன்றி

நல்வாழ்த்துகள் வேலன்

Good citizen said...

Very interesting to use a software to open & close the cd tray,,
THANK YOU VELAN sir

சிவா டிராவல்ஸ் said...

தகவலுக்கு நன்றி நண்பரே., என்னிடம் இரண்டு சி.டி டிரைவ்கள் உள்ளன.எனக்கு தேவையானதை தேர்வு செய்து திறந்து மூடுவது மூடுவது எப்படி?

வேலன். said...

cheena (சீனா) கூறியது...
அன்பின் வேலன்

தகவலுக்கு நன்றி

நல்வாழ்த்துகள் வேலன்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா சார்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
very fine


நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

moulefrite கூறியது...
Very interesting to use a software to open & close the cd tray,,
THANK YOU VELAN sir

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சிவா டிராவல்ஸ் கூறியது...
தகவலுக்கு நன்றி நண்பரே., என்னிடம் இரண்டு சி.டி டிரைவ்கள் உள்ளன.எனக்கு தேவையானதை தேர்வு செய்து திறந்து மூடுவது மூடுவது எப்படி?

நீங்கள் முதன்மையாக எந்த டிரைவை செட் செய்து வைத்துள்ளீர்களோ அதுமட்டுமே திறக்கும நண்பரே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...