வேலன்:-டீ-ப்ராக்மென்ட் தானே செய்துகொள்ள

சில வருடங்களுக்கு முன்னால்.....அனைத்து டெலிபோன்
பூத்துக்களில் இரவு 10 மணிக்கு மேல் நீண்ட வரிசையில்
மக்கள் போன் செய்ய காத்திருப்பார்கள். அவர்கள்
ரத்த சம்பந்தமானவர்கள் -உறவினர்கள் - நண்பர்கள் -
வெளிநாடுகளில் இருந்தால் அவர்களிடம் போன் பேச
இவ்வாறு காத்திருப்பார்கள். ஆனால் காலமாற்றத்தில்
பாக்கெட்டிலே செல்போன் இருந்தும் நமக்கு போன்
செய்து பேச நேரம் இருக்கமாட்டேன் என்கின்றது.
சரி அதற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம்....
அதைப்போலவே நமது கம்யூட்டரில் டி-பிராக்மெண்ட்
செய்யும் வசதி உள்ளது.
டி-.பிராக்மென்ட் செய்யும் முறை பற்றி ஏற்கனவே
பதிவிட்டுள்ளேன். அதை காண இந்ததளம் செல்லவும்.
ஆனால் டி-பிராக்மெண்ட் செய்யவேண்டியதை
நாம் நினைவில்வைத்து வாரம் ஒருமுறையாவது 
செய்கின்றோமா -இல்லையே...நமது வேலையை குறைத்து
- தானே டீ-ப்ராக்மென்ட் செய்துகொள்ள இந்த
 சாப்ட்வேர் வந்துள்ளது.இதில்
நமது கம்யூட்டர் எந்த வேலையும் செய்யாமல்
ஓய்வாக இருக்கும் சமயம் தானே டீ.பிராக்மெண்ட்
செய்யுமாறு செட் செய்திடலாம்.நமக்கு வேலை
மிச்சம். 08-01-2010 -ல்தான் புதிய பதிவு வெளி
யிட்டுள்ளார்கள்.4 எம்.பிக் கும் குறைவான அளவு இது.
இதை பதிவிறக்கஇங்குகிளிக் செய்யவும்.இதை
பதிவிறக்கம் செய்துநமது கம்யூட்டரில் இன்ஸ்டால்
 செய்ததும் உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
தேவையான டிரைவை தேர்வு செய்து Start பட்டனை கிளிக்
செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
வண்ண வண்ண சிறு கட்டங்கள் இடம் மாறுவதை
காணலாம். பார்க்க அழகாக இருக்கும்.
இதன் இடப்புறம் உள்ள Auto Defragment பட்டனை கிளிக்
செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Disk Usage, CPU Usage  தோன்றும்.கிராப் மானிட்டரில்
அளவு ஓடும்.கீழே உள்ள Settings தேவையான விவரங்கள்
நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள். அதைப்போல
எவ்வளவு நேரம் கம்யூட்டர் ஐ-டியல் (Idle) -ஓய்வாக
இருந்தால் Auto Defragment செய்யலாம் என்பதன்
நேரத்தையும் நாம் செட்செய்து Apply செய்யலாம்.
மூன்றாவதாக உள்ள பட்டனை கவனியுங்கள்.Schedule
என இருக்கும். அதை கிளிக் செய்து அதில் Schedule Config
தேர்வு செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
 ஓப்பன் ஆகும்.
அதில் உங்களுக்கு தேவையான நாளை-நேரத்தை
 தேர்வு செய்து கொள்ளலாம். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
நான்காவதாக உள்ள Options கிளிக் செய்யுங்கள். இதில்
General - Defragment என இரண்டு காலங்கள் உள்ளது. அதில்
தலா நான்கு ரேடியோ பட்டன்கள் உள்ளது. உங்கள்
தேவைக்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளுங்கள்.கீழே உள்ள
படத்தை பாருங்கள்.
சரி ..மீண்டும் முதலில் உள்ள Defragment Now என போட்டுள்ள
ரேடியோ பட்டனை கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோ
வினை பாருங்கள்..
அதில் தேவையான டிரைவ் தேர்வு செய்து Analyze
கிளிக் செய்யுங்கள். நீ்ங்கள் டி-பிராக்மெண்ட் செய்ய
வேண்டிய பைல்களின் எண்ணிக்கையை காட்டும்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
அதைப்போல் நீங்கள் எவ்வளவு டிரைவ்களை Analyze
செய்ய போகின்றீர்களோ அவை அனைத்தும் ஒன்றன் பின்
ஓன்றாக டேபிள் இருக்கும். அனைத்தையும் பார்த்துபின்
கிளோஸ் செய்துவிடுங்கள். இப்போது மீண்டும் முதல்
பக்கம் வந்து Start பட்டனை கிளிக்செய்யுங்கள்.
டி,பிராக்மென்ட் ஆக ஆரம்பிக்கும்.
நீங்கள் ஆட்டோமெடிக் போட்டுவிட்டால் அனைத்தும்
அதுவே பார்த்துக்கொள்ளும்.பதிவின் நீளம் கருதி
இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.பதிவினை பாருங்கள்.
கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
புன்னகைமன்னனில் கமலஹாசனை போல என்ன
யோசனை ....சட்டுனு குதிங்க...







இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன்செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்குகிளிக்செய்யவும்.
தானே டீ-ப்ராக்மென்ட் செய்துகொண்டவர்கள் இதுவரை:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

Lucky Limat - லக்கி லிமட் said...

அவசியமான ஒன்று நண்பரே.. மிக்க நன்றி

ஜெய்லானி said...

அருமையான பதிவு தலைவரே.

வேலன். said...

Lucky Limat லக்கி லிமட் கூறியது...
அவசியமான ஒன்று நண்பரே.. மிக்க நன்றி//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

jailani கூறியது...
அருமையான பதிவு தலைவரே.//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிநண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...