வேலன்:- ஓரே சமயத்தில் பல்வேறு விண்டோக்களில் பணிபுரிய


<span title= நமது கம்யூட்டரில் சிலசமயங்களில் நாம் நான்கு
 அல்லது ஐந்துஅப்ளிகேஷன்கள் திறந்து வைத்துப்
பணிபுரிவோம். அந்த மாதிரியான நேரங்களில்
 அனைத்து விண்டோக்களையும் ஒன்றாக
 பார்த்தால் எவ்வளவுநன்றாக இருக்கும்.
நான் ஓரே சமயத்தில் வேர்ட்,எக்ஸெல்,
போட்டோஷாப் மற்றும் நோட்பேட் திறந்து
வைத்துள்ளேன்.கீழே உள்ள படத்ததை பாருங்கள்.
 
அந்த வசதி நமது கம்யூட்டரிலேயே உள்ளது. 
அதை எவ்வாறு பெறுவது என்று இன்று பார்க்கலாம்.
டாக்ஸ்பாரில் காலியாக உள்ள இடத்தில் வைத்து
கர்சரை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் முதலில் உள்ள Cascade Window வை தேர்வு 
செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட படம் கிடைக்கும்.
 நீங்கள் தேர்வு செய்தபின் கீழே உள்ள வாறு படங்கள்
கிடைக்கும். அதாவது ஒரு விண்டோவின் மீது மற்றும்
ஓரு விண்டோக்கள் அடுக்கி வைத்தது மாதிரி 
விண்டோக்கள் நமக்கு கிடைக்கும்.கீழே உள்ள படத்தை 
பாருங்கள்.
 அடுத்துள்ள  The Windows Horizontally தேர்வு செய்தபின்னர் நமக்கு
விண்டோக்கள் ஒன்றன்பின்னர் ஓன்றாக வருவதை காணலாம். 
கீழே உள்ள படத்தை பாருங்கள்.
 
அடுத்துள்ள The Windows Vertically தேர்வு செய்தால் உங்களுக்கு 
விண்டோக்கள் அடுத்தடுத்து வருவதை காணலாம். இட நெரு்கடி
காரணமாக நான் மூன்று  வெவ்வேறு விண்டோக்களான வேர்ட்,
எக்ஸெல் மற்றும் போட்டோஷாப் ஆகியவற்றை திறந்து
உள்ளேன். உங்களுக்கு மூன்றிலும் தேவையான மாற்றங்க
ளையும் - உடனே செய்துகொள்ளலாம். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.
சரி இந்த வசதி வேறு எந்த மாதிரியான சந்தர்பங்களில்
நமக்கு பயன்படும்?. ஓரு புதிய சாப்ட்வேர் பயன்படுத்து
கின்றோம். அதில் உள்ள வழிமுறைகள் தெரியவில்லை.
அப்போது உதவிக்கு சென்று பார்ப்போம். அப்போது இந்த
அப்ளிகேஷனை முடிவிட்டு அதற்கு சென்று பின்னர்
இங்கு வந்து பார்த்துக்கொள்வோம். அந்த மாதிரியான
சமயங்களில் அதே அப்ளிகேஷனையும் திறந்து கொண்டு
உதவி விண்டோவினையும் திறந்து கொண்டு பணிபுரிந்தால்
மிகவும் உதவியாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
சரி - இதெல்லாம் வேண்டாம். நாம் மீண்டும் பழையபடி
டெக்ஸ்டாப்பிற்கு செல்லவேண்டும். அதற்கும் இதில்
வசதி உள்ளது. Show the Desktop கிளிக் செய்தால் நாம்
பழையபடி டெக்ஸ்டாப்பினை பெறலாம். பயன்படுத்தி
பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
டேய்  டேய்  எனக்கும் கொஞ்சம் கொடுடா.....
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
 
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
 
இதை பதிவிற்கம் செய்ய இங்குகிளிக் செய்யுங்கள்.
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

Vadielan R said...

வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போல் எழுதுங்கள் நண்பரே

Unknown said...

வணக்கம் சார் ...தங்கள் அடிச்சுவட்டை பின்பற்றி வந்த நான் என்னால் முடிந்த சுவடுகளை பதிக்க விரும்பியதன் விளைவு இந்த வலைப்பூ...ஊக்கமும் ஆசிகளும் தக்க சமயத்தில் குட்டுகளும் அளித்து வருமாறு வேண்டுகிறேன்...

அண்ணாமலையான் said...

gud post . thanx

Menaga Sathia said...

உபயோகமான பதிவு...

வேலன். said...

வடிவேலன் ஆர். கூறியது...
வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போல் எழுதுங்கள் நண்பரே//

நீண்ட நாட்களுக்குப்பிறகு வந்துள்ளீர்கள் நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

அமிர் கூறியது...
வணக்கம் சார் ...தங்கள் அடிச்சுவட்டை பின்பற்றி வந்த நான் என்னால் முடிந்த சுவடுகளை பதிக்க விரும்பியதன் விளைவு இந்த வலைப்பூ...ஊக்கமும் ஆசிகளும் தக்க சமயத்தில் குட்டுகளும் அளித்து வருமாறு வேண்டுகிறேன்.//

மிக்க மகிழ்ச்சி அமிர் அவர்களே..உங்கள் கவிதையும் படங்களும் அருமை........வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

அண்ணாமலையான் கூறியது...
gud post . thanxஃஃ நன்றி அண்ணாமலைசார்.... வாழ்க வளமுடன், வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
உபயோகமான பதிவு. நன்றி சகோதரி வாழ்க வளமுடன் வேலன்.

Jaleela Kamal said...

எக்ஸலில் இரண்டு விண்டோ வைத்து வொர்க் பண்ணி இருக்கேன்,

ஆனால் இது நாலு விண்டோ சூப்பர் பதிவு, தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்,

ஆனால் எனக்கு நெட் பார்க்கும் போது முடும் போது என்னற்ற பல விண்டோக்கள் ஓப்பன் ஆகுது ( 20 வின்டோக்கு மேல்) இதுக்கு என்ன செய்ய்லாம்.

mahaboob said...

வணக்கம் சார் நான் இந்தபதிவிற்கு புதியவன் உங்கள் பதிவுகள் மிகமிக பிரமாதம்

முனைவர் இரா.குணசீலன் said...

புதியவர்கள் பயன் பெறும் அரிய தகவல்.

வேலன். said...

Jaleela கூறியது...
எக்ஸலில் இரண்டு விண்டோ வைத்து வொர்க் பண்ணி இருக்கேன்,

ஆனால் இது நாலு விண்டோ சூப்பர் பதிவு, தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளலாம்,

ஆனால் எனக்கு நெட் பார்க்கும் போது முடும் போது என்னற்ற பல விண்டோக்கள் ஓப்பன் ஆகுது ( 20 வின்டோக்கு மேல்) இதுக்கு என்ன செய்ய்லாம்.
நீங்களாக திறக்காமல் விண்டொக்கள் ஓப்பன் ஆகாது. சரி உங்களுக்காகவே ஒரு சாப்ட்வேர் உள்ளது அதை பின்னர் பதிவிடுகின்றேன.தேவையற்ற விண்டோக்களை ஒரே கிளிக்கில் மூடிவிடலாம்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்ன்றி....வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

mahaboob கூறியது...
வணக்கம் சார் நான் இந்தபதிவிற்கு புதியவன் உங்கள் பதிவுகள் மிகமிக பிரமாதம் உங்களை பதிவிற்கு வருக வருக என வரவேற்கின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... வாழ்க வளமுடன், வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
புதியவர்கள் பயன் பெறும் அரிய தகவல் நன்றி நண்பரே.. வாழ்க வளமுடன் வேலன்.

ஜெய்லானி said...

//Jaleela கூறியது..எனக்கு நெட் பார்க்கும் போது முடும் போது என்னற்ற பல விண்டோக்கள் ஓப்பன் ஆகுது ( 20 வின்டோக்கு மேல்) இதுக்கு என்ன செய்ய்லாம்.///
Internet Explorerஐ தாக்கும் வைரஸின் வேலை இது ஏ.வி.ஜி.9.0 ஆண்டி வைரஸ் இதை சரி செய்யும். அடிக்கடி இதுப்போல் ஆவதால் நான் Mozilla fire fox 3.5.7க்கு மாறிவிட்டேன். வைரஸின் தலைவலியே இதில் இல்லை. நீங்களும் Try செய்து பாருங்கள்.

Unknown said...

பயனுள்ள தகவல். நன்றி

வேலன். said...

jailani கூறியது...
//Jaleela கூறியது..எனக்கு நெட் பார்க்கும் போது முடும் போது என்னற்ற பல விண்டோக்கள் ஓப்பன் ஆகுது ( 20 வின்டோக்கு மேல்) இதுக்கு என்ன செய்ய்லாம்.///
Internet Explorerஐ தாக்கும் வைரஸின் வேலை இது ஏ.வி.ஜி.9.0 ஆண்டி வைரஸ் இதை சரி செய்யும். அடிக்கடி இதுப்போல் ஆவதால் நான் Mozilla fire fox 3.5.7க்கு மாறிவிட்டேன். வைரஸின் தலைவலியே இதில் இல்லை. நீங்களும் Try செய்து பாருங்கள்.
//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.... வாழ்க வளமுடன், வேலன்.

வேலன். said...

மின்னல் கூறியது...
பயனுள்ள தகவல். நன்றி//

நன்றி நண்பரே... வாழ்க வளமுடன், வேலன்.

சண்முகம் said...

HAI THIS IS SHUNMUGAM PL DOING LIKE THIS IN UR BLOG http://tvs50.blogspot.com/2010/01/blogger-posts-to-pdf-tamil.html

Jaleela Kamal said...

மிக்க நன்றி , இந்த என்னற்ற விண்டோக்கள் ஓப்பன் ஆவதால் விரைவில் அதை close பண்ணமுடியாமல், alt f 4 அழுத்தி கொண்டே இருப்பேன், அப்படியும் மூட வில்லை எனில் சி பியு வை Direct aaka ஆஃப் பண்ணி விட்டு பிற்கு மீண்டும் ஆன் செய்வது, இதனால் நிறைய பேருக்கு பின்னூட்டமிட முடியல.
இதனால் தமிழ் எடிட்டரில் டைப் செய்து வைத்திருந்த குறிப்பு,மெசேஜ் பதில்கள் எல்லாமே போய் விடுகிறது.

//என்னற்ற வின்டோ என்பது, உதாரணத்துக்கு, என் பிலாக் , டைப்பிங்க்கா தமிழ் எடிட்டர், + உங்கள் பிலாக் பதில் போட வைத்து இருந்தால் உங்கள் பிலாக்கில் பதில் போட்டு முடித்ததும், உங்கள் பிலாக் உடைய முகப்பு மட்டுமே 25 கிட்ட ஓப்பன் ஆகுது. //


இதற்கான டிப்ஸை விரைவில் எதிர் பார்க்கிறேன்

Related Posts Plugin for WordPress, Blogger...