வேலன்:-டெக்ஸ்டாப்பில் பல்ப் எரிய வைக்க


திரைப்படத்தி்ல் ஒரு வசனம் வரும்...பல்ப் எரியுது பார் என்று...கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் இந்த வசனம் பிரபலம்.    நாம் நமது கம்யூட்டரிலும் பல்ப் எரிய வைத்தால் எப்படி இருக்கும். நாம் கடைகளில் - வீடுகளில் ஏதாவது விஷேஷம் என்றால் சீரியல் பல்ப்களை தொங்கவிட்டு எரிய விடுவோம். அதுபோல் நமது கம்யூட்டரிலும் சீரியல் பல்ப்களை எரியவிடலாம். அதை செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படும். ( 2 எம.பி.அளவுதான்) இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் முடித்து நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுடைய டாக்ஸ்பாரில் இது அமரந்துவிடும்.இதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் முதலில் ஜெனரல் டெப் இருக்கும் . இதில் நாம் பல்ப்களை எந்த சமயங்களில் எரியவிட வேண்டும் என்கின்ற ஆப்ஸன்கள் உள்ளன. தேவையானதை தேர்வு செய்து கொள்ளவும்.
செலக்ட் ஐ-கானில் உங்களுக்கு எத்தனை பல்ப்கள் - நிறங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.பாடல்கள் செட் செய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பல்ப்களின் வகைகள் கீழே உள்ளன.                                                                                         
இரண்டாவது டேபில் பல்ப்கள் இருக்கின்றது. உஙகளுக்கு டிசைன்போட்ட பல்ப் வேண்டுமா - விலங்கினங்கள் பல்ப்பா - பூக்கள் டிசைனா - அல்லது சாதாரண குண்டு பல்ப்பா நமக்கு விருப்பமானதை தேர்வு செய்யலாம்.
 தவிர அது ஒடும் வேகத்தை யும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். தவிர நமது விண்டோவின் மேல்புறம் மட்டுமா - அல்லது திரையின் நான்கு புறமுமா என விரும்புவதை தேர்வு செய்துகொள்ளலாம்.
மூன்றாவது டேபில் இசையை சேர்த்துள்ளார்கள். அவர்களே 10 பாடல்கள் தொகுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்து பிளே செய்து பார்க்கலாம். அல்லது நமக்குவிருப்பமான இசையையும் தேர்வுசெய்துகொள்ளலாம். கீழே உள்ள் விண்டோவினை பாருங்கள்.
இதில் ஸ்கிரீன் சேவரும் - வால்பேப்பரும் உள்ளன.தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
காலண்டர்வசதியும் உள்ளது. தேவைப்பட்டால் அதையும்நாம் தேர்வுசெய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.உபயோகித்துப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS
ஆண்புறா:-ஜலீலா அக்காவின் தொண்டையில் மீன்முள் மாட்டிக்கொண்டால் அபாயம் -கட்டுரையை படித்தேன்.இரு உனது தொண்டையில் இருந்து மீன்முள் எடுக்கின்றேன்.  
பெண்புறா:- ஒன்றும் வேண்டாம்...நானே பார்த்துக்கின்றேன்...நீங்க போங்க....
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இந்த டிசைனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

26 comments:

Chitra said...

இந்த இடுகையை படிக்கிறவங்களுக்கு, பல்பு கொடுத்திட்டீங்க..........

வேலன். said...

Chitra கூறியது...
இந்த இடுகையை படிக்கிறவங்களுக்கு, பல்பு கொடுத்திட்டீங்க........//

ஆஹா...அப்படியேல்லாம் இல்லை சகோதரி...தங்கள் வருகைககும் கருத்துக்கும நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

ஜெய்லானி said...

அசத்தல் பதிவு.ஜாலி போட்டோ கமெண்ட் படு நக்கல்....

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Dear Velan Sir,

Your Bulb is working fine, without fail. Its nice. Keep it up.

Best wishes.
Muthu Kumar.N

அண்ணாமலையான் said...

நன்றி...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

நல்ல ஐடியாதான்..பதிவில் செய்ய முடியாதா

கக்கு - மாணிக்கம் said...

நா தான் மாப்ஸ் ஒருமாதிரி 'பாஷாண்டி" அப்டீன்னுதான் இருந்தேன்,
கொஞ்சமா சிரிச்சி, கொஞ்சமா பேசற ஆட்களிடம் சற்று கவனமாதா இருக்கணும்.
கட்டுங்க கட்டுங்க வெளுத்து கட்டுங்க மாப்ஸ்.

யூர்கன் க்ருகியர் said...

பல்பு பீசு போய்டுச்சினா ??

Mohan said...

பல்ப்ப பல இடத்துல எரியவிட ஐடியா கொடுப்பீங்க போல இருக்கு... வாழ்த்துக்கள்...

அன்புடன் அருணா said...

பல்ப் சூப்பரா எரியுது!நன்றி வேலன்!

Mrs.Menagasathia said...

பல்ப் பதிவும்,ஜாலி போட்டோவும் கலக்கல்...

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
அசத்தல் பதிவு.ஜாலி போட்டோ கமெண்ட் படு நக்கல்...//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Your Bulb is working fine, without fail. Its nice. Keep it up.

Best wishes.
Muthu Kumar.N//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முத்துக்குமார் சார்...வாழ்கவளமுடன். என்றும் அன்புடன். வேலன்.

வேலன். said...

அண்ணாமலையான் கூறியது...
நன்றிஃ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாமலைசார். வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...
நல்ல ஐடியாதான்..பதிவில் செய்ய முடியாதாஃ

செய்யலாம்..அந்த பல்ப்கள் விலைஅதிகம்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே்... வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
நா தான் மாப்ஸ் ஒருமாதிரி 'பாஷாண்டி" அப்டீன்னுதான் இருந்தேன்,
கொஞ்சமா சிரிச்சி, கொஞ்சமா பேசற ஆட்களிடம் சற்று கவனமாதா இருக்கணும்.
கட்டுங்க கட்டுங்க வெளுத்து கட்டுங்க மாப்ஸ்//
ஓ...நீங்கள் அவரை சொல்கின்றீர்களா..தங்கள் வருகைக்கும் ்கருத்துக்கும் நன்றி.... வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
பல்பு பீசு போய்டுச்சினா ??ஃ எரியரதே பீஸ்போன பல்ப்புகள் தான்....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நனறி... வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Mohan கூறியது...
பல்ப்ப பல இடத்துல எரியவிட ஐடியா கொடுப்பீங்க போல இருக்கு... வாழ்த்துக்கள். நன்றி மோகன் சார்...தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா கூறியது...
பல்ப் சூப்பரா எரியுது!நன்றி வேலன் நன்றி சகோதரி....தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
பல்ப் பதிவும்,ஜாலி போட்டோவும் கலக்கல்.ஃ நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன் வேலன்.

பிரியமுடன் பிரபு said...

நன்றி

வேலன். said...

பிரியமுடன் பிரபு கூறியது...
நன்றி//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன் வேலன்.

நித்தியானந்தம் said...

நல்ல படைப்பு வேலன் சார்....

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
நல்ல படைப்பு வேலன் சார்....ஃஃ


நீண்ட நாட்களுக்கு பின் வந்துள்ளீர்கள் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... வாழ்க வளமுடன். வேலன்.

ravi123456 said...

Twinkle_bulbs.exe என்பதை Download பண்னினேன்
ஆணால் Kaspersky Internet Security 7.0 இதை
வைரஸ் என இனம் கண்டது (WEN 32)

ravi123456 said...

Twinkle_bulbs.exe என்பதை Download பண்னினேன்
ஆணால் Kaspersky Internet Security 7.0 இதை
வைரஸ் என இனம் கண்டது (WEN 32)

Kaspersky Internet Security 7.0 யி Twinkle_bulbs.exeஐ
இயங்க அனுமதிக்கவில்லை

Related Posts Plugin for WordPress, Blogger...