வலைப்பதிவு நண்பர்களுக்கு :-
விளையாட்டையே பதிவாக போட்டுவரும் பதிவரை இங்கு அறிமுகப்படுத்தவிரும்புகின்றேன்.அவருக்கு இன்று 23-02-2010 பிறந்த நாள்.அவர்தளம் செல்ல இங்கு கிளிக்செய்யவும்.அவரின் தந்தை உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த பிரபல பதிவர்.(ஹி..ஹி...அது நான்தான்) அவருக்கும் உங்கள் ஆதரவு வேண்டி.
வாழ்க வளமுடன்,
வேலன்.
நமக்குஉறவினர்கள்,நண்பர்கள்,ரொம்பபிடித்தவர்கள்,அக்கம்பக்கத்தவர்கள்,குடும்பஉறுப்பினர்கள்எனஇருப்பார்கள்.அதுபோலவேவியாபரம்செய்பவர்களுகுஅவர்களின்வாடிக்கையாளர்கள்,தொழிளாளர்கள்,பார்ட்னர்ஸ்,விளம்பரதாரர்கள், பொருட்களை நமக்கு சப்ளை செய்பவர்கள் என பட்டியல் நீண்டு கொண்டு செல்லும். இவர்களின் அனைத்து விவரங்கள் அவர்களை பற்றி சுமார் 25 குறிப்புகள் வரை குறித்துவைக்க இந்த சாப்ட் வேர் உபயோகப்படுகின்றது.இது வெறும் 5 எம்.பி்.கொள்ளளவு தான்.இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கி நீங்கள் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முதலில் உள்ள நீல முக்கோணத்தை கிளிக் செய்தால் உங்களுக்கு எல்லா வகைகளும் தெரியவரும். அதில் நீங்கள் பிஸினஸ் மற்றும் குடும்பம் என தேர்வு செய்துகொள்ளலாம்.பின்னர் அதில் உள்ள + குறியை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில முதல் டேப்பில் உள்ளதில் நீங்கள் சேமிக்க வேண்டியவரின் பெயர்,டைட்டில், கம்பெனி பெயர், முழு முகவரி,அனைத்தும் தட்டச்சு செய்து கொள்ளுங்கள். அடுத்து அவரைப்பற்றி சிறப்பு விமர்சனம் ஏதாவது இருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். அதில் நிறைய கேட்டகிரி இருக்கும்..
வருகின்ற கேட்டகிரியில் அவர் எந்த வகையில் வருகின்றாரோ அதை தேர்வு செய்துகொள்ளுங்கள். அடுத்துள்ள டேபை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் :ஆகும்
இந்த விண்டோவில் மொத்தம் 12 குட்டி குட்டி விண்டோக்கள் இருக்கும். இதில முதலில் உள்ள விண்டோவின் டவுண்லோட் ஏரோவினை கிளிக் செய்ய உங்களுக்கு மேலே உள்ளவாறு விண்டோ தோன்றும். அதில் அவரின் எந்த தகவலை நீங்கள் சேமிக்க விரும்புகின்றீர்களோ அதை தேர்வு செய்து எதிரில் உள்ள விண்டோவில் அதற்குரிய தகவலை தட்டச்சு செய்யுங்கள்.கடைசியாக நீங்கள் தகவலை உள்ளீடு செய்தவரின் புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.இங்கு இன்னும் ஒன்றை கவனிக்க வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் புகைப்படம் 500 கே.பிக்குள் இருக்க வேண்டும்.
இறுதியாக ஓ.கே. கொடுங்கள். அவ்வளவுதான். ஒருவருடைய மொத்த தகவல்கள்(மொத்தம் 25 வரும்) நீங்கள் சேமித்தாகிவிட்டது.
இதில சேமித்துள்ள தகவல்களை நீக்கி கொள்ளவும் முடியும். அதைப்போல் ஒருவருடைய பெயரையும் சுலபமாக சர்ச் செய்து தேட இங்குள்ள சர்ச் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஸ்டட்டிக்ஸ் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில நீங்கள் உள்ளீடு செய்துள்ள நபர்களின் முதல் எழுத்துக்களை வைத்து எவ்வளவுபேர உள்ளனர் என தெரிந்து கொள்ளலாம்.
அடுத்துள்ளது ரிப்போர்ட்.இதை கிளிக் செய்தால்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில ஒருவரோ - அல்லது மொத்தநபர்களதோ -தேர்வு செய்து நெக்ஸ்ட் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும். அதில் அவரின எந்த விவரங்கள் தேவையோ அதை மட்டும் தேவையான பைல்வகைகளில் சேமித்துகொள்ளலாம்.
கடைசியாக உள்ள கிரியேட் கிளிக் செய்து சேமித்துக்கொள்ளுங்கள்.இதனை எச்டிஎம்எல் பைலாகவும் எக்ஸெல் பைலாகவும் சேமித்துக்கொள்ளலாம். பொறுமையாக தகவல்களை உள்ளீடு செய்து உபயோகித்து பாருங்கள். அருமையாகஇருக்கும்.பதிவின்நீளம்கருதிஇத்துடன்முடித்துக்கொள்கின்றேன் வாழ்க வளமுடன்
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
வீட்டில் சொல்லிவிட்டு ஒரு முடிவோடுதான் கிளம்பிட்டார் போலஇருக்கு...?
இன்றைய PSD டிசைன்னுக்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
28 comments:
வேலன் சார்,
நல்ல தகவல் நன்றிகள் பல.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
நல்ல பதிவு அண்ணா!!
நல்ல பதிவு மாப்ஸ்
keep it up.
அனைவருக்கும் பயனுள்ள பதிவு..
சரி சார்.. இதுல எத்தன பேர் நம்பர் சேவ் பண்ணி வைக்கலாம்?
நல்ல பயனுள்ள தகவல் சார். விவரமாகவும், தெளிவாகவும் குறிப்பிட்டு இருக்கீங்க... பகிர்வுக்கு நன்றி!
ஜாலி போட்டோவா - கிலி போட்டோவா - நல்ல ஐடியா.
அவசியமான ஒன்றுதான். நன்றி.
ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,
நல்ல தகவல் நன்றிகள் பல.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.
Mrs.Menagasathia கூறியது...
நல்ல பதிவு அண்ணா!//
நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
கக்கு - மாணிக்கம் கூறியது...
நல்ல பதிவு மாப்ஸ்
keep it up.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ்...
வாழ்க வளமுடன்,
வேலன்.
சிநேகிதி கூறியது...
அனைவருக்கும் பயனுள்ள பதிவு.//
தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.
அண்ணாமலையான் கூறியது...
சரி சார்.. இதுல எத்தன பேர் நம்பர் சேவ் பண்ணி வைக்கலாம்?
குறைந்தது 350 வரை நினைக்கின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணாமலைசார்.வாழ்க வளமுடன்,வேலன்.
பிரவின்குமார் கூறியது...
நல்ல பயனுள்ள தகவல் சார். விவரமாகவும், தெளிவாகவும் குறிப்பிட்டு இருக்கீங்க... பகிர்வுக்கு நன்றிஃஃ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரவின்குமார் சார்.. வாழ்க வளமுடன் வேலன்.
Chitra கூறியது...
ஜாலி போட்டோவா - கிலி போட்டோவா - நல்ல ஐடியா.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி....வாழ்க வளமுடன்,வேலன்.
ஜெய்லானி கூறியது...
அவசியமான ஒன்றுதான். நன்றிஃஃ//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன். வேலன்.
கணிணியில் பதிந்து என்ன பயன்? இதை தொலைபேசிகளில் உபயோகப்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
தகவலுக்கு நன்றி
பிறந்த நாள் வாழ்த்துகள் சார்.
நல்ல தகவல் சார் உங்கள் புகழ் மென்மேலும் வளர என்மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் மகனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
தங்கள் அன்பு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தகவல்கள், படங்கள் சூப்பரு.
அடங்காதவரா? இல்லை மடங்காதவரா?
நண்பருக்கு எனது இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்
வேலன் சார் நன்றி.வாழ்த்துக்கள்.உங்கள் பணி தொடரட்டும்.எங்கு ஃபோட்டோஷாப் இலவசமாக டவுண்லோட் செய்யலாம்,கூறவும்.டிரயில் 30 நாள் முடிந்து விட்டது. ravianbu@ymail.com
தமிழ் மகன் கூறியது...
கணிணியில் பதிந்து என்ன பயன்? இதை தொலைபேசிகளில் உபயோகப்படுத்தினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
தகவலுக்கு நன்றி//
அந்த வசதி உள்ளது.ஆனால் செலவு கொஞ்சம் அதிகம் ஆகும்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.
டெக்ஷங்கர் @ TechShankar கூறியது...
பிறந்த நாள் வாழ்த்துகள் சார்.//
தங்கள வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.
சசிகுமார் கூறியது...
நல்ல தகவல் சார் உங்கள் புகழ் மென்மேலும் வளர என்மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் மகனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.ஃஃ
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகுமார் அவர்களே..வாழ்க வளமுடன்,வேலன்.
SUFFIX கூறியது...
தங்கள் அன்பு மகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தகவல்கள், படங்கள் சூப்பருஃஃ//
தங்களின் தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.
mdniyaz கூறியது...
அடங்காதவரா? இல்லை மடங்காதவரா?
நண்பருக்கு எனது இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூஃ//
நன்றி முஹம்மது நியாஜ் சார் அவர்களே..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
rafi கூறியது...
வேலன் சார் நன்றி.வாழ்த்துக்கள்.உங்கள் பணி தொடரட்டும்.எங்கு ஃபோட்டோஷாப் இலவசமாக டவுண்லோட் செய்யலாம்,கூறவும்.டிரயில் 30 நாள் முடிந்து விட்டது. ravianbu@ymail.comஃ//
தங்கள் வருகைக்கு நன்றி ரஃபி சார், உங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.
Post a Comment