வேலன்:-விண்டோசில் விரும்பிய எழுத்துக்களை கொண்டுவர


<span title=

புதியவர்களுக்கு என தலைப்பிட்டாலும் நாம் அனைவருக்கும் இதுபற்றி தெரிந்திருக்காது...ஆம்...கணிணியில் உள்ள எழுத்துக்களை நாம் நமது விருப்பத்திற்கு ஏற்ற படி மாற்றிக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.இது டெக்ஸ்டாப்பின் வெற்றிடத்தில் ரைட்கிளிக் செய்தால் வரும் விண்டோ:-(இதன் எழுத்துக்களை பாருங்கள்) 
இதே விண்டோவில் நாம் விரும்பிய எழுத்துக்களை வேண்டிய நிறங்களை  கொண்டுவந்தபின் வந்த விண்டோவினை பாருங்கள்:-
சரி..இந்த எழுத்துக்களை எப்படி நமது கம்யூட்டரில் கொண்டுவருவது...இதற்கு சாப்ட்வேர் எல்லாம் தேவையில்லைங்க..ஒரு சின்ன மாற்றம் செய்தால் போதும்.முன்பு சொன்னது மாதிரி டெக்ஸ்டாப்பின் காலி இடத்தில் வைத்து ரைட் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு மேலே உள்ள விண்டோ ஒப்பன் ஆகும். அதில் Properties கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நான்காவதாக உள்ள Appearance டேபை கிளிக் செய்து அதில் உள்ள Advanced கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Item என்கின்ற விண்டோவில் உங்கள் கணிணியில் உள்ள அனைத்தும் பட்டியலிடப்படும். அதில் தேவையானதை தேர்வு செய்து( நான் மெனு என்பதனை தேர்வு செய்துள்ளேன்)அதன் எழுத்துரு - வண்ணம் - அளவு -தேர்வு செய்து ஓ,கே.தரவும் . .
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இப்போது உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த ஐட்டத்தின் எழுத்துக்களும் வண்ணங்களும் அளவுகளும் மாறி உள்ளதை காணலாம்.மாற்றுவதற்கு முன் உள்ள படம் கீழே:-

மாற்றியபின் வந்த படம் கீழே:-
அதைப்போலவே டூல் டிப் என்றால் என்னவென்று தெரியுமா ?
நம்மில் பலபேருக்கு தெரியாது.ஆனால் நாம் தினமும் அதை பார்க்கின்றோம்.ஏதாவது போல்டர் - டிரைவ் அருகே நாம் கர்சரை கொண்டு செல்லும் சமயம் ஒரு சிறிய விண்டோ தோன்றும். அதில் அந்த போல்டரின் விவரம் வரும்.கீழே உள்ள படத்தினை பாருங்கள். எளிதாக புரியும்.
இதில் காலியிடம் - மொத்த இடம் ஆகிய தவல்கள் அடங்கிய விண்டோதான் டூல் டிப் ஆகும். இதையும் நாம் நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

இதுமட்டும் இல்லாமல் விண்டோ - ஸ்கோரல் பார் -என மொத்தம் 18 ஐட்டங்களின் எழுத்துக்களை - அளவுகளை மாற்றிக் கொள்ளலாம்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ம்....வெளிநாட்டில் வேலைன்னு நம்பி வந்தேன். இங்கேயும் என்னை மாடுமெய்க்க விட்டுட்டாங்களே...
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக்செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

மைதீன் said...

உபயோகமான பதிவு

கக்கு - மாணிக்கம் said...

வழக்கம் போல தூள் பதிவு மாப்ஸ்

அன்புடன் அருணா said...

ஆஹா....நன்றி!

தமிழ் மகன் said...

எப்படி சார் இதெல்லாம் தெரிஞ்சுக்கிறீங்க. நல்ல பதிவு, நன்றி.

Anonymous said...

நல்ல உபயோகமான பதிவு நன்றி.

மஹாராஜா

sarusriraj said...

உபயோகமான பதிவு , டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு சொல்கிறேன்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உபயோகமான பதிவு.

Chitra said...

மாடை, வாக்கிங் கூட்டிட்டு போற வேலை நல்லா இருக்கும் போல.

வேலன். said...

மைதீன் கூறியது...
உபயோகமான பதிவு//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மைதீன் அவர்களே..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
வழக்கம் போல தூள் பதிவு மாப்ஸ்//

தங்கள் நீண்ட கருத்துக்கு நன்றி மாம்ஸ்...(ஜெயகாந்த் காற்று உங்களுக்கு அடித்துவிட்டதா...?)வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா கூறியது...
ஆஹா....நன்றிஃஃ//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

தமிழ் மகன் கூறியது...
எப்படி சார் இதெல்லாம் தெரிஞ்சுக்கிறீங்க. நல்ல பதிவு, நன்றி.//

நமக்கு தெரிந்ததே கொஞ்சம் தான்.தெரியாதது இன்னும் நிறைய இருக்கின்றது நண்பர் தமிழ் மகன் அவர்களே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
நல்ல உபயோகமான பதிவு நன்றி.

மஹாராஜா//

நன்றி மஹாராஜா அவர்களே...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

sarusriraj கூறியது...
உபயோகமான பதிவு , டெஸ்ட் பண்ணி பார்த்துட்டு சொல்கிறேன்ஃ//

டெஸ்ட் செய்து பாருங்கள் சகோதரி ..அருமையாக வித்தியாசமாக இருக்கு...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Dr.எம்.கே.முருகானந்தன் கூறியது...
உபயோகமான பதிவு.//

நன்றி டாக்டர்...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
மாடை, வாக்கிங் கூட்டிட்டு போற வேலை நல்லா இருக்கும் போல//

உங்களின் இந்த நகைச்சுவை உணர்வு மிகவும் பிடித்திருக்கு சகோதரி..கஷ்டமான மாடுமேய்கும் வேலையையும் நகைச்சுவையோடு -மாட்டை வாக்கிங் கூட்டிட்டு போற வேலை நல்லா இருக்கும் போல - என குறிப்பிட்டுள்ளது மிகவும் சிறப்பு.வாழ்க வளமுடன்,வேலன்.

சசிகுமார் said...

வழக்கம் போல கலக்கீட்டீங்க சார், தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

வேலன். said...

சசிகுமார் கூறியது...

வழக்கம் போல கலக்கீட்டீங்க சார், தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்//

நன்றி சசிகுமார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும ்நன்றி ...வாழ்க வளமுடன்,வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...