வேலன்:-வார்த்தைகளை தேடு (Word Search)ஆங்கிலத்தில் தான் அறிவை விருத்திசெய்துகொள்ள எவ்வளவு வழிகள்.இந்த சாப்ட்வேர் 400 கே.பி. அளவுடையது. இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். இந்த சாப்ட்வேரில் சிறு சிறு வார்த்தைகளை கொடுத்துள்ளார்கள்.மொத்தம் 4 லெவல்கள். அதில் ஒவ்வோன்றிலும் 5 குரூப்புகள். அந்த 5 குரூப்புகளிலும் 10 தலைப்புகள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 ஒவ்வோரு தலைப்பிலும் 20 க்கும் மேற்பட்ட வார்த்தைகள்.நாம் நமக்கு தேவையான குரூப் தேர்வு செய்து அதில் தேவையான தலைப்பை தேர்வு செய்ததும் நமக்கு வார்த்தைகள் கலந்து கட்டம் வரும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.(இதில் சக பதிவர்கள் பெயர்கள் உள்ளன.மொத்தமாக 50 பேரை Submit செய்ததில் குலுக்கல் முறையில் அதுவே தேர்வு செய்த பெயர்கள் கீழே.)

அதில் வலப்புறம்  உள்ள வார்த்தை களை இடப்புறம் உள்ள கட்டத்தில் தேட வேண்டும். வார்த்தையை நீங்கள் கண்டுபிடித்ததும் கர்சரை கொண்டு கோடுபோடவேண்டும். அந்த வார்த்தையானது சிவப்பு கட்டம் கட்டப்படும்.
அதே சமயம் வலப்புறம் உள்ள வார்ததைக்கு டிக் அடையாளம் கிடைக்கும்.
இதுமட்டும் அல்லாமல் நாம் விருப்பமான வார்த்தைகளை இதில் கொடுத்து நாமே கட்டங்களை உருவாக்கலாம்.அதற்கு Tools - Create my own puzzle - என உருவாக்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 

நான் நமது பதிவர்கள் சிலரது பெயரை கொடுத்து வார்த்தைகளை உருவாக்கினேன். கட்டத்திற்கு ஏற்ப அது சில பெயர்களை எடுத்துக்கொண்டு சில் பெயர்களை விட்டுவிட்டது. கீழே உள்ள கட்டத்தை பாருங்கள்.
பதிவர்களின் பெயரினை பாருங்கள்.
அனைத்துவார்த்தைகளையும் நீங்கள் கண்டுபிடித்ததும் உங்களுக்கு வாழ்த்துகிடைக்கும். சில வார்த்தைகள் தெரியவில்லையென்றால் அதற்கு உதவி கேட்கும் வசதி உள்ளது.அதற்கு Tools- Show me கிளிக் செய்தால் தேவையான வார்த்தையை நமக்கு தேடி கொடுக்கும்.

இது தவிர வேறு என்ன செய்யலாம். நாம் நமது குழந்தைகளின் ஏதாவது ஒரு சப்ஜெட் எடுத்து அதில் உள்ள பாடத்தில் உள்ள வார்த்தைகளை கொண்டு இதுபோல் ஒரு கட்டம் உருவாக்கலாம். அவர்களை வார்த்தைகளை தேட சொல்லலாம். அறிவு வளர்வதோடு அவர்களுக்கு அந்த வார்த்தையையும் ஒரு முறை படித்ததுபோல் ஆகும்.  பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். 
வாழ்க வளமுடன்.
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
 தலைமுடியை நீளமாக வளர்த்தால் எப்படியெல்லாம் உபயோகமாகின்றது பாருங்கள்.  

இன்றைய PSD டிசைன்புகைப்படம் கீழே:-
டிசைன்செய்தபின் வந்தபுகைப்படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

யூர்கன் க்ருகியர் said...

ok !

வேலன். said...

நீண்ட கருத்துக்கு நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

கக்கு - மாணிக்கம் said...

// ok //
யூர்கன் க்ருகியர்

// நீண்ட கருத்துக்கு நன்றி சார்...வாழ்க வளமுடன்,//

வேலன்.

நல்ல நக்கல்

Thomas Ruban said...

பகிர்வுக்கு நன்றி சார்.

Thomas Ruban said...

// JOLLY PHOTO//

வாவ் என்ன க்ரியேட்டிவிட்டி....

sarusriraj said...

very useful articles

mdniyaz said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
இது மிகவும் பயனுள்ள தகவல்
இதுபோல் நிறைய் படிக்க ஆவல்
தினமும் எழுதுங்கள், அதற்க்கு எனது வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹ்ம்மது நியாஜ்
கோலாலம்பூர்

Chitra said...

உங்கள் ஜாலி போட்டோ பகுதிக்காகவே ............. உங்களுக்கு நன்றிகள் பல சொல்ல வேண்டும். சூப்பர்!

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
// ok //
யூர்கன் க்ருகியர்

// நீண்ட கருத்துக்கு நன்றி சார்...வாழ்க வளமுடன்,//

வேலன்.

நல்ல நக்கல்//

தங்கள் வருகைக்கு நன்றி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
பகிர்வுக்கு நன்றி சார்.//

நன்றி தாமஸ் ரூபன் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
// JOLLY PHOTO//

வாவ் என்ன க்ரியேட்டிவிட்டி....ஃஃ//


நன்றி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

sarusriraj கூறியது...
very useful articlesஃஃ//

தங்கள் வருகைக்கும் ்கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன். வேலன்.

வேலன். said...

mdniyaz கூறியது...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
இது மிகவும் பயனுள்ள தகவல்
இதுபோல் நிறைய் படிக்க ஆவல்
தினமும் எழுதுங்கள், அதற்க்கு எனது வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹ்ம்மது நியாஜ்
கோலாலம்பூர்ஃஃ//

கட்டத்தில் உங்கள் பெயரை கண்டுபிடித்துவிட்டீர்களா சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
உங்கள் ஜாலி போட்டோ பகுதிக்காகவே ............. உங்களுக்கு நன்றிகள் பல சொல்ல வேண்டும். சூப்பர்ஃ//

நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்கவளமுடன்,வேலன்.

சசிகுமார் said...

அருமையான பதிவு நண்பரே, என்னுடைய பெயரையும் சேர்த்ததற்கு இன்னொரு நன்றி, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Dear Velan Sir,

Good info for all. Well done.

Best wishes
Muthu Kumar.N

ஜெய்லானி said...

சூப்பர் சார்

வேலன். said...

சசிகுமார் கூறியது...
அருமையான பதிவு நண்பரே, என்னுடைய பெயரையும் சேர்த்ததற்கு இன்னொரு நன்றி, தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகுமார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Good info for all. Well done.

Best wishes
Muthu Kumar.Nஃ//

நன்றி சார்...வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
சூப்பர் சார்ஃஃ//

நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

சிவகுமார் said...

அனைத்தும் கலக்கல் தகவல்கள்!!!

srgopi said...

Hi Sir,

I am following your blogs for long time. I am attaching the Registration Key for the WordSearch game is WORDKUO. Because the software is trail version.

Related Posts Plugin for WordPress, Blogger...