வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது புகைப்படம் -கையெழுத்து கொண்டுவர

சென்ற போட்டோஷாப் பதிவில் பிரஷ் டூலில் நமது பெயர் கொண்டுவருவது பற்றிப்பார்த்தோம்.அந்த பதிவினை காணதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துவிட்டு வரவும்.இன்றைய பதிவில் போட்டோஷாப் பிரஷ் டூலில் நாம் நமது புகைப்படங்களையும் நமது கையெழுத்தையும் எப்படி கொண்டுவருவது என்று பார்க்கலாம்.
முதலில் பிரஷ் டூலாக வைத்துக்கொள்ளவிரும்பும் புகைப்படத்தை திறந்து கொள்ளுங்கள்.கீழே நான் எனது மகனின் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
இப்போது போட்டோஷாப்பில் எடிட் மெனுவினை கிளிக்செய்யுங்கள். உங்களுக்கு வரும் விண்டோவில் Define Brush Preset  என்பதனை கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஒப்பன் ஆகும். அதில் ஓ.கே. கொடுங்கள்.
இப்போது உங்கள புகைப்படம் பிரஷ் டூலாக போட்டோஷாப்பில் அமர்ந்துவிட்டது. இனி ஒரு புதிய பைலினை திறந்து கொள்ளுங்கள். அடுத்து பிரஷ் டூலினை தேர்வு செய்துகொள்ளுங்கள். 
உங்களுக்கு மெனுபாரின் கீழே தோன்றும் பிரஷ் என்கிற ஆங்கில எழுத்தின் கீழே உள்ள சிறிய முக்கோணத்தை கிளிக் செய்ய வரும் விண்டோவில் கடைசியில் உங்கள் படம் இருப்பதை காணலாம். அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்போது புதிய பைலில் நீங்கள் கர்சரால் கிளிக் செய்ய உங்கள் படம் அழகாக தோன்றும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
Master Diameter - எதிரில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி உங்கள் புகைப்படம் வேண்டிய அளவிற்கு வைத்துக்கொள்ளலாம். சரி ...இந்த புகைப்படமே நமக்கு கலர் கலராக வரவேண்டும். என்ன செய்வது. Foreground கலரை மாற்றிக் கொள்வதுமூலம்விதவிதமான
கலர்களில்புகைப்படங்கள்கொண்டுவரலாம்.
கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

சரி. இப்போது நமது கையெழுத்தை எப்படி கொண்டுவருவது.
 உங்கள் கையெழுத்தை தனியே காகிதத்தில் போட்டுகொண்டு 
அதை ஸ்கேன் செய்து புகைப்படமாக மாற்றிக்கொள்ளுங்கள்.
 பின்னர்ஏற்கனவேசொன்னதுபோல்பிரஷ்டூலாக
அதைமாற்றிக்கொள்ளுங்கள்.
உங்கள் புகைப்படத்தை தேர்வு செய்து அதை புதிய
 பைலில பிரஷ் டூல் மூலம் பதிந்துகொள்ளுங்கள். 
இப்போது கையெழுத்துள்ள பிரஷ் டூலையும் கொண்டுவந்து
 அதன் கீழே கிளிக் செய்யுங்கள். கீழே உள்ள புகைப்படத்தை
 பாருங்கள்.

உங்கள் கையெழுத்துடன் புகைப்படம் ரெடி...ஒரு சின்ன எச்சரிக்கை:-அலுவலகங்களில் பயன்படுத்துபவர்கள் உங்கள் ஒரிஜினல் (உண்மையான ) கையெழுத்தில் இதை முயற்சிக்கவேண்டாம். அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.(படத்தில் உள்ளதும் நாம் பதிவிற்காக போட்ட டம்மி கையெழுத்து....எப்படி நாம உஷாராக இருக்கனும் இல்ல). அடுத்த பதிவில் விதவிதமான பிரஷ் டூலை எப்படி இன்ஸ்டால் செய்வது மற்றும் உபயோகிப்பதை பற்றி்ப் பார்ககலாம்.இதுவரையில் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
காலையில் இருந்து உணவு கிடைக்காமல் நான் பசியாக இருப்பதால்  உங்களை ஒன்னும் செய்யமாட்டேன்...என் காலில் உள்ள முள்ளைமட்டும் எடுத்துவிடுங்களேன்....ப்ளிஸ்....
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

யூர்கன் க்ருகியர் said...

//அலுவலகங்களில் பயன்படுத்துபவர்கள் உங்கள் ஒரிஜினல் (உண்மையான ) கையெழுத்தில் இதை முயற்சிக்கவேண்டாம். //

நாங்க போடற கையெழுத்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
இதுக்கெல்லாம் பீதி அடைய வேண்டாம் .

ஜெய்லானி said...

அருமையான பதிவு.

Chitra said...

ஸ்ரீலஸ்ரீ கரடியானந்தா ஆசிர்வாதம் செய்கிறார் .....

Shiva said...

Good Job ..appreciated

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
//அலுவலகங்களில் பயன்படுத்துபவர்கள் உங்கள் ஒரிஜினல் (உண்மையான ) கையெழுத்தில் இதை முயற்சிக்கவேண்டாம். //

நாங்க போடற கையெழுத்து ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
இதுக்கெல்லாம் பீதி அடைய வேண்டாம் //

ஒண்ணும் ப்ராப்பளம் இல்லை...பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கின்றீர்களா...? அப்ப சரி..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
அருமையான பதிவு.ஃஃ//

நன்றி ஜெய்லானி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
ஸ்ரீலஸ்ரீ கரடியானந்தா ஆசிர்வாதம் செய்கிறார் .....//

ஆஹா...சாமியார்கள் லிஸ்டில் கரடியையும் சேர்ததுவிட்டீர்களா...அப்ப ஆசிர்வாதம் வாங்கிடவேண்டியதுதான்...வருகைக்கும்கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Shiva கூறியது...
Good Job ..appreciated//

நன்றி சிவா சார்..வாழ்க வளமுடன்.வேலன்.

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள பதிவு நண்பரே..

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

murali said...

Dear Sir
Please publish Hindu Gods (PSD)

Regards

Muralidharan

Related Posts Plugin for WordPress, Blogger...