வேலன்-ஒரே சாப்ட்வேரில் 12 வகையான சாலிடர் சீட்டு விளையாட்டு

எல்லா விளையாட்டுக்களும் குழந்தைகளுக்கு தானா? பெரியவர்களுக்கு என்று  விளையாட விளையாட்டுகள் இல்லையா என்று வயதில் மூத்த நண்பர் ஒருவர் கேட்டார். அவருக்காக இந்த சாலிடர் விளையாட்டு..6 எம்.பி. கொள்ளளவு சொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 
இதில் விதவிதமான 12 வகையான சாலிடர் விளையாட்டுக்கள் உள்ளது.
தேவையான விளையாட்டினை கிளிக் செய்யவும்.பக்கத்தில் உள்ள விண்டோவில் பிரிவியு தெரியும்.
விளையாட்டு மைதானத்தின் பின்புற நிறத்தையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
அதைப்போலவே விளையாடும் கார்டின் பின்புற் உருவத்தையும் தேர்வு செய்துகொள்ளலாம்.
அதில் காணப்பட்ட ஒரு விளையாடடு கீழே. இதில் கூட்டுத்தொகை 18வருவதுபோல கார்டுக்ள சேர்க்கவேண்டும். 18 எண்ணிக்கை வந்ததும் கார்ட் மறைந்துவிடும்.
இது வழக்கமாக ரெம்மி சேர்க்கும் விளையாட்டு-ஒரே குறியில் உள்ள கார்ட்டுகளை சேர்க்கவேண்டும்.
அனைத்துவிதமான விளையாட்டுக்களுக்கும் உதவி குறிப்பு உள்ளதால் விளையாட்டில் ஏதும் சந்தேகம் இருந்தாலும் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

தமிழ்வாசி - Prakash said...

ரைட்டு .... விளையாடி பார்த்துறலாம்.

சே.குமார் said...

ரைட்.... ரைட்... ரைட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடு....

hari said...

THX

sakthi said...

அன்புள்ள அண்ணா ,
நாம் மங்காத்த ஆடி தான் பழக்கம் .
நட்புடன் அன்பு தம்பி ,
கோவை சக்தி

Anonymous said...

பிரியமான நண்பருக்கு, தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை . ஒரு வீடியோவில் உள்ள பாடலை நீக்கிவிட்டு, அந்த காட்சிகளுக்கு வேறு பாடலை இணைப்பது எப்படி? தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்
m.navaskhan@yahoo.com

ஈரோடு தங்கதுரை said...

விளையாட்டை சொல்லித்தர உங்களை விட்டா வேற யாரும் இல்லை ... ! நல்ல கேம் .

வேலன். said...

தமிழ்வாசி - Prakash said...
ரைட்டு .... விளையாடி பார்த்துறலாம்.ஃஃ

நன்றி தமிழ்சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
ரைட்.... ரைட்... ரைட்டுடுடுடுடுடுடுடுடுடுடுடு....
ஃஃ

குமார் சார்...ஞாபகமறதியாக குழந்தைகளிடம் விளையாட கொடுத்திடப்போகின்றீர்கள்...
வருகைக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

hari said...
THXஃஃ

நன்றி ஹரி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sakthi said...
அன்புள்ள அண்ணா ,
நாம் மங்காத்த ஆடி தான் பழக்கம் .
நட்புடன் அன்பு தம்பி ,
கோவை சக்தி
ஃஃ

மங்காத்தா விளையாட்டும் உள்ளது. போட்டுவிடலாமா சக்தி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Anonymous said...
பிரியமான நண்பருக்கு, தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை . ஒரு வீடியோவில் உள்ள பாடலை நீக்கிவிட்டு, அந்த காட்சிகளுக்கு வேறு பாடலை இணைப்பது எப்படி? தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்
m.navaskhan@yahoo.comஃஃ

இதற்கு அடோப் பிரிமியர் என்கின்ற சாப்ட்வேரை பயன்படுத்தலாம். ஆனால் அந்த சாப்ட்வேர் சற்று பெரியது.வேறு சின்ன சாப்ட்வேர் உள்ளது. அதனை பதிவிடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஈரோடு தங்கதுரை said...
விளையாட்டை சொல்லித்தர உங்களை விட்டா வேற யாரும் இல்லை ... ! நல்ல கேம் .ஃஃ

நன்றி தங்கதுரை சார்....
தங்கள் வாழ்த்துக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...