வேலன்:-கிரேட் போட்டோ

அனைத்துவிதமான போட்டோஷாப் பணிகளையும் குறைந்த அளவு கொளளளவில் திறம்பட இந்த சாப்ட்வேர் செய்கின்றது. 96 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.Open File -Open Folder என இரண்டு ஆப்ஷன்கள் தேர்வாகும் நம்மிடம் உள்ள புகைப்படத்தை இதன்மூலம் தேர்வு செய்யவும்.
 இதில் நமது புகைப்படத்தின் அனைத்துவிவரங்களும் தெரியவரும். அடுத்துள்ள Edit photo கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Image Enhancement -Higlight Fx.Basic Adjustment.Crop என நான்குவிதமான ஆப்ஷன்கள் கிடைக்கும். தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
நான் Crop தேர்வு செய்துள்ளேன். இதில் வேண்டிய அளவு நமக்கு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் தேவையானதை கிளிக்செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 மேலும் இதில் உள்ள எபெக்ட் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் போட்டோஷாப்பில் உள்ள அனைத்து எபெக்ட்டுக்களும் நமக்கு கிடைக்கும். ப்ரேம் எபெக்ட்டில் நான் பிலிம் ரோல் எபெக்ட் கொண்டுவந்துள்ளேன். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
 இதில் கலர் ப்ளாஷ் என்று ஒரு ஆப்ஷன் கொடுத்துள்ளார்கள். இதனை தேர்வு செய்தவுடன் நமக்கு நமது புகைப்படம் கருப்பு வெள்ளை படமாக மாறிவிடுகின்றது. பின்னர் அதில் நமக்கு எந்த இடம் மட்டும் கலரில் வேண்டுமோ அந்த இடத்தை மட்டும் பிரஷ் கொண்டு தேய்க்க அந்த இடம் மட்டும் கலரில் மாறிவிடும். 
 இறுதியாக காலேஜ் என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இதில விதவிதமான ப்ரேம்கள் உள்ளது. இதில் தேவையான ப்ரேமை தேர்வு செய்து பின்னர் புகைப்படங்களை நாம் தேர்வு செய்யவேண்டும். புகைப்படங்களை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் இதில் உள்ளது. நான் தேரவு செய்துள்ள படங்களை பாருங்கள்.

நாம் புகைப்படங்கள் உள்ள போல்டர்களை தேர்வு செய்தவுடன் நமக்கு நமது புகைப்படங்கள் தம்ப்நெயில் வியுவில் கீழே வரிசையாக வந்துவிடும். தேவையான படத்தினை தேர்வு செய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
 வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

அன்பை தேடி,,அன்பு said...

பயனுள்ள மென்பொருளை அறிமுகப்படுத்திய அண்ணனுக்கு நன்றி

பால கணேஷ் said...

மிகப் பயன்படும் ஒரு மென்பொருளைத் தந்துள்ளீர்கள் நண்பரே... அவசியம் பயன்படுத்துவேன். மிக்க நன்றி.

mdniyaz said...

திரு வேலன் அவர்களுக்கு.....நீண்ட இடைவெளிக்கு பிறகு......ஒரு நல்ல விஷயத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி......அன்புடன் முஹம்மது நியாஜ், கோலாலம்பூர்

வேலன். said...

அன்பை தேடி,,அன்பு said...
பயனுள்ள மென்பொருளை அறிமுகப்படுத்திய அண்ணனுக்கு நன்றி

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

பால கணேஷ் said...
மிகப் பயன்படும் ஒரு மென்பொருளைத் தந்துள்ளீர்கள் நண்பரே... அவசியம் பயன்படுத்துவேன். மிக்க நன்றி.ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கணேஷ் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

mdniyaz said...
திரு வேலன் அவர்களுக்கு.....நீண்ட இடைவெளிக்கு பிறகு......ஒரு நல்ல விஷயத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி......அன்புடன் முஹம்மது நியாஜ், கோலாலம்பூர்

நீண்ட நாட்களுக்குபின் கருத்துரையிட வந்தமைக்கு நன்றி நியாஹ் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...