வேலன்:-வீடியோ-ஆடியோ பார்மெட் எளிதில் மாற்ற


வீடியோ பைல்களாகட்டும் ஆடியோ பைல்களாகட்டும் நாம் விரும்பும் பார்மெட்டில் எளிதாக மாற்றி அமைக்க இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவு கின்றது. 12 எம்.பி. கொள்ளளவு கெர்ண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

இதில் நீங்கள் ஆடியோ பைலை மாற்ற விரும்புகின்றீர்களா அல்லது வீடியோ பைல்களை மாற்ற விரும்புகின்றீர்களா என முடிவு செய்து அதற்குண்டான ஆப்ஷனை டார்கெட் பார்மெட்டுக்கு மேல் உள்ளதை தேர்வு செய்யுங்கள். பின்னர் இதில் உள்ள +Add பட்டனை கிளிக் செய்யுங்கள்.தேவையான பைலை தேர்வு செய்யுங்கள்.வீடியோ பைல்களுக்கான பார்மெட்டுக்கள் கீழே உள்ளதை கவனியுங்கள். தேவையானதை தேர்வு செய்யுங்கள்.
எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்யுங்கள். இறுதியாக கன்வர்ட் கிளிக் செய்யுங்கள். சில நிமிடங்களில் உங்களுடைய பைல் வேண்டிய பார்மெட்டுக்கு மாறியிருப்பதை பாருங்க்ள் இவ்வாறு பைல்களை விரும்பிய பார்மெட்டுக்கு மாற்றி பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

இதுவரையில் இந்தியாவில் பதவி வகித்த ஜனாதிபதிகள் நமக்கு தெரியும். ஆனால் அவர்கள் எந்த எந்த தேதிகளில் பதவி வகுத்தார்கள் என தெரியாது. எனது மகனின் பள்ளிக்கு கொடுப்பதற்காக  இந்த லிஸ்ட் தயாரித்தேன்;;. அதை அப்படியே நமக்காக பதிவிடுகின்றேன். தேவைப்படுபவர்கள் இதனை பதிவிறக்கி பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

டவுன்லோட் செய்து பார்க்கிறேன்...

நன்றி...


பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல பயனுள்ள பதிவு



நன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ஆ.ஞானசேகரன் said...

http://www.infoqueenbee.com/2008/11/list-of-presidents-of-india-from-1950.html


இதையும் பார்க்கலாம்

பிரகாசம் said...

அன்புள்ள நண்பருக்கு,
Excelல் ஒரு சந்தேகம் உள்ளது. உதாரணமாக 1234456 என்று டைப் செய்து accounting அல்லது currency என்று cell format செய்தால் 12,34,456.00 என்று வரவேண்டும். ஆனால் 1,234,456.00 என்றுதான் வருகிறது. இதை சரிசெய்ய என்ன செய்யவேண்டும் என்று தெரிவித்து உதவ வேண்டுகிறேன். நன்றிகள்
m.prakasham@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...