வேலன்:-டிசைன் பாக்ஸ்(போட்டோக்களை டிசைன் செய்திட)

போட்டோஷாப்பில் செய்யக்கூடிய வேலைகளை இந்த டிசைன்பாக்ஸ் எளிதில் செய்துவிடும். 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://www.presentation-3d.com/products/design-box.htmlசெய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். வலதுபுறம் உங்களுக்கு Basic.Color,Filter என மூன்று டேப்புகள் இருக்கும.Basic டேபில் Lightness.Contrast,Saturation.Sharpness என நான்குவிதமான ஸ்லைடர்கள் இருக்கும். தேவையானதை நாம் வைத்துக்கொள்ளலாம்.Color  டேபில் RGB ஸ்லைடர்கள் இருக்கும். தேவையானதை நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.ப்ரிவியு வசதி உள்ளதால் நமக்கு பிடித்திருந்தால் அதனை Apply செய்துகொள்ளலாம்.அதனைப்போலவே பில்டரிலும் தேவையான வசதியை நாம் பெற்றுக்கொள்ளலாம்.
இடதுபுறம் உங்களுக்கு Favourite ஆக 28 விண்டோக்கள் டிஸ்பிளே ஆக தெரியும்.தேவையானதை கிளிக் செய்ய படம் பெரியவிண்டோவில் நமக்கு தெரியும்.இதனைப்போலவே Basic.Lomo,Digital,Fashion என 5 வித டேப்களில் மொத்தம் 102 எபேக்ட்கள் உள்ளது.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மேலும் இதில் Painter.Convert.GIfMaker.Svo Convert.Ios Icon.QR Code என 7 டேப்கள்உள்ளது.Convert ல் Rotate,Resize,Watermark.Rename.Output என 5 டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.தேவையானதை தேர்வு செய்துகொண்டு பின்னர் அதன் கீழே உள்ள Process கிளிக் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Gif Maker மூலம் நம்மிடம் உள்ள புகைப்படங்களை அனிமேஷன் படமாக மாற்றிவிடலாம். அனிமேஷன் நகரும் நேரத்தினை செட் செய்யலாம்.
கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள ISO Icon மூலம் நாம் புகைப்படத்தினை தேர்வு செய்ய நமக்கு பல்வேறு அளவுகளில் புகைப்படங்கள் தெரியவரும் தேவையானதை கிளிக் செய்து நாம் Export செய்துகொள்ளலாம்.
நம்மிடம் உள்ள புகைப்டங்களை வேண்டிய மாற்றங்கள் செய்து இமெயிலும் அனுப்பும் வசதி உள்ளது. இது ஏழு நாட்களுக்கான டிரையல் விஷன் ஆகும்.தேவைப்படின் நீங்கள் முழுவேர்சனையும் வாங்கிகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பின்குறிப்பு:-
எனது மகனுக்காக அருகில் உள்ள மெடிக்கல்ஷாப்பில் சென்று இன்று -29.08.2012 பிரட் வாங்கினேன்.வழக்கமாக தயாரிப்பு தேதியை பார்த்துவாங்கும் பழக்கம் உள்ளதால் அதில் உள்ள தயாரிப்பு தேதியை பார்த்துவியந்துவிட்டேன்.காரணம் நாளை மறுதினம்(31.08.2012) தயாரிக்க உள்ள பிரட் இன்றே எனது கைகளில்....இன்று எனக்கு கிடைக்கவேண்டும் என்றால்  பிரட்டை அவர்கள் நேற்றே தயாரித்துஇருக்கவேண்டும் அல்லவா...அப்புறம் எதற்கு தயாரித்த எட்டுநாட்களுக்குள் பயன்படுத்தவேண்டும் என்ற வாசகம்;.... 
அப்போ நான் பிரட்டை இன்றிலிருந்து எட்டு நாட்களுக்குள் பயன்படுத்துவதா- அல்லது இதில் உள்ள தேதியில் இருந்து  எட்டுநாட்களுக்குள் பயன்படுத்துவதா?எனக்கு ஒன்றும் புரியவில்லை...உங்களுக்காவது புரிகின்றதா?

 எங்கள் வீட்டுக்காரம்மா புது பிரட்டாக வாங்கிவரசொன்னார்கள்.நான் எப்படி ரொம்ப பிரஷ்காக தயாரிப்பதற்கு  இரண்டுநாட்களுக்கு முன்னரே உள்ள பிரட்டை வாங்கிவந்துவிட்டேன் பார்த்தீங்களா!

வாழ்க வளமுடன்....

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

MARI The Great said...

உபயோகமான தகவல் நண்பரே, பகிர்வுக்கு நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லா இருக்கு சார்... பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

sakthi said...

நல்ல பதிவு அண்ணா ,
ரொட்டி பற்றிய இந்த தகவல் சுகாதார துறைக்கு அனுப்பலாமே !

செல்வநாயகி said...

வேலன்,

பயனுள்ள நிரல்கள் பற்றிய பதிவுகளை எழுதி வருகிறீர்கள். தமிழ்ச்சமூகத்துக்கு நீங்கள் அளிக்கும் சேவைக்கு நன்றி. முன்பு ஒருசமயம் உங்கள் பதிவில் ஒரு இடுகை வாசித்த நினைவு, இப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. உதவ வேண்டுகிறேன்.

வீட்டில் குழந்தைகள் கூகிள், யூடியூப் போன்ற தளங்களில் இப்போது அவர்களே தேட ஆரம்பிக்கிறார்கள். அப்போது ஆபாச விசயங்கள் அவர்களின் பார்வைக்கு வந்து விழுந்துவிடாதபடி தடுக்க நீங்கள் சில சாப்ட்வேர்களைச் சொல்லியிருந்தீர்கள். அந்த இடுகைக்குச் சுட்டி தர இயலுமா? நன்றி.

VANJOOR said...

.
DEAR VELAN,

THANK YOU.


.

Raji said...

Good! Keep it up.

வேலன். said...

வரலாற்று சுவடுகள் said...
உபயோகமான தகவல் நண்பரே, பகிர்வுக்கு நன்றி!ஃஃ

நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
நல்லா இருக்கு சார்... பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...

நன்றி தனபாலன் சார்...பயன்படுத்திப்பாருங்கள் சார். அருமையாக இருக்கின்றது.
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
நல்ல பதிவு அண்ணா ,
ரொட்டி பற்றிய இந்த தகவல் சுகாதார துறைக்கு அனுப்பலாமே !ஃஃ

அவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என நினைக்கின்றீர்கள்.ஒன்றும் நடக்காது.வருகைக்கு நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

செல்வநாயகி said...
வேலன்,

பயனுள்ள நிரல்கள் பற்றிய பதிவுகளை எழுதி வருகிறீர்கள். தமிழ்ச்சமூகத்துக்கு நீங்கள் அளிக்கும் சேவைக்கு நன்றி. முன்பு ஒருசமயம் உங்கள் பதிவில் ஒரு இடுகை வாசித்த நினைவு, இப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. உதவ வேண்டுகிறேன்.

வீட்டில் குழந்தைகள் கூகிள், யூடியூப் போன்ற தளங்களில் இப்போது அவர்களே தேட ஆரம்பிக்கிறார்கள். அப்போது ஆபாச விசயங்கள் அவர்களின் பார்வைக்கு வந்து விழுந்துவிடாதபடி தடுக்க நீங்கள் சில சாப்ட்வேர்களைச் சொல்லியிருந்தீர்கள். அந்த இடுகைக்குச் சுட்டி தர இயலுமா? நன்றி.ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...தாங்கள் கேட்ட இணையதள முகவரி :-http://velang.blogspot.com/2010/09/blog-post_16.html

பயன்படுத்திப்பாருங்கள்
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

VANJOOR said...
.
DEAR VELAN,

THANK YOU.
ஃஃ

நன்றி சார்..தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

R.V. RAJI said...
Good! Keep it up.ஃஃ

நன்றி ராஜி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

Anonymous said...

வேலன் அண்ணா.. ஒரு உதவி வேண்டும்..
போட்டோஷாப் cs6-ல் தமிழ் எவ்வாறு டைப்செய்வது என்று தெரியவில்லை.
ஏற்கனவே பயன்படுத்திய ஈ-கலப்பை இதில் வேலை செய்ய வில்லை..
சி.எஸ்6 உடன் இணைந்து வேலை செய்யும் கீமேன் ஏதாவது இருக்கிறதா.
நான் ஏற்கனவே LTTM பாண்ட் உபயோகித்து வந்தேன்.
சி.எஸ்6 வெளியானதிலிருந்து ட்ரை செய்து கொண்டிருக்கிறேன்.. பிரச்சினை தீரவில்லை. நீங்கள்தாம் உதவ வேண்டும்..
என்றும் அன்புடன்
தமிழ்நேசன்

ludba said...

பயனுள்ள பதிவு பிரெட் மட்டும் அல்ல பாலிலும் இதே டெக்னிக்தான் நன்றி வேலன் சார்

Related Posts Plugin for WordPress, Blogger...