Showing posts with label இலவச மென்பொருள். Show all posts
Showing posts with label இலவச மென்பொருள். Show all posts

வேலன்-குயிக் டைம் -இலவச பிளேயர்.


குயிக் டைம் -இலவச பிளேயர்.




உங்களிடம் சில வீடியோ பைல்கள் இருக்கும்.

அது எந்த பிளேயரிலும் சமயத்தில் இயங்காது.

அந்த மாதிரியான நேரங்களில் நமக்கு உதவுவது

தான் இந்த பிளேயர்.கம்யூட்டரின் Hard Disc-ல்

குறைந்த இடம்,குறைந்த அளவு ரேம் வைத்து

உள்ளவர்கள் இந்த சாப்ட்வேரை உபயோகிக்

கலாம். நிறுவ எளிதானது - அளவில் குறைந்தது -

விருப்பப்பட்ட பிளேயரை தேர்ந்தெடுக்கலாம்.

AAC,AC3,DVD,DTS,MP2,MP3,MPEG-2 ஆகிய

வற்றை இந்த பிளேயரில் இயங்கும்.

உங்களிடம் உள்ள டிஜிட்டல் கேமராவில்-

செல்போனில் எடுக்கப்பட்ட மூவி பைல்களை

இதன் மூலம் சுலபமாக இயக்கி பார்க்கலாம்.

இந்த பிளேயரை நீங்கள் பதிவிறக்கம் செய்யும்

முன் உங்கள் இ-மெயில் முகவரியை தரவேண்டும்.

இலவச இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய

குயிக்டைம் பிளேயர் -ல் கிளிக் செய்யவும்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
உங்களுடைய செல்போன் தொலைந்துபோனால் உடனடியாக டீலர் வசம் சொல்லிஉங்கள் செல்போன் எண்ணை லாக் செய்ய சொல்லுங்கள். உங்களுடைய முகவரி அத்தாட்சி கொடுத்து அதில் உள்ள இருப்பு தொகை-உங்களுடைய எண் என அனைத்தையும் உங்களுடைய புதிய போனில் மீட்டு விடலாம்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

டெலிட் செய்த பைலை ரீ-ஸ்டோர் செய்வது எப்படி?



நாம் சமயத்தில் நினைவில்லாமல் ஏதாவது

பைலை டிலிட் செய்து விடுவோம். அதை

ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்துவிடு

வோம். ஆனால் சில காலம் கழித்துதான்

அந்த பைல் நமக்கு தேவைபடுவது

நினைவுக்கு வரும் . அந்த நேரத்தில்

ரீசைக்கிள் பின்னில் தேடினாலும் கிடைக்காது.

அப்போது அந்த பைல் அவ்வளவு தானா?

போனது போனதுதானா என கலங்க வேண்டாம்.

நாம் அழித்த பைல்கள் நமது கணிணியில்

உள்ள டிஸ்கில் விண்டோஸ் ஆபரேடிங்

சிஸ்டம் விட்டு வைக்கும். அந்த பைலில்

உள்ள தகவல்கள் அப்படியே நமது Hard

Disc -ல் அமர்ந்திருக்கும். அந்த பகுதி

Hard Disc க்கு தேவைப்பட்டால் மட்டுமே

அந்த இடத்தை Hard DIsc எடுத்துக்கொள்ளும்.

அந்த பகுதி Hard Disc க்கு தேவைப்படாத வரை

நமது பைல் அங்கேயே பத்திரமாக இருக்கும்.

சரி நமது பைலை எப்படி மீட்டெடுப்பது.

அதற்கு தான் இந்த குட்டி சாப்ட்வேர் நமக்கு

உதவுகிறது. இந்த சின்ன சாப்ட்வேர்

300 கே.பி்.க்கு உள்ளே இருப்பதால்

கணிணியில் இடம்அதிகம் பிடிக்காது.

இந்த சாப்ட்வேரை இந்த தளத்திலிருந்து

பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

முகவரி தளம்:-இங்கே

இதை பதிவிறக்கம் செய்து உங்கள்

கணிணியில் இன்ஸ்டால் செய்யவும்.

பிறகு நீங்கள் அதை ஓப்பன் செய்கையில்

உங்களுக்கு இந்த தளம் ஓப்பன் ஆகும்.



இதில் குறிப்பிட்டுள்ள டிரைவ் வில் நீங்கள்

டெலிட் செய்த டிரைவின் பெயரை குறிப்பிடவும்.

அடுத்து நீங்கள் நீக்கிய பைல் எந்த வகையை

சார்ந்ததோ அதை குறிப்பிடவும். குறிப்பாக

அது வேர்ட் பைலாக இருந்தால் .Doc என்றோ

எக்ஸெல் பைலாக இருந்தால் .Exe என்றோ

போட்டோவாக இருந்தால் .Jpeg அல்லது .psd

என்றோ குறிப்பிடவும். அதுபோல் நீங்கள்

பைலுக்கு பெயர் வைத்திருந்தாலும் அந்த

பெயரை குறிப்பிடலாம். அல்லது அனைதது

டெலிட் பைல்களும் அந்த டிரைவில் இருந்து

தேவை யொன்றால் எதையும் குறிப்பிடாமலும்

Search Delete File கிளிக் செய்யவும். உங்களுக்கு

இந்த தளம் ஓப்பன் ஆகும்.



இதில் நீங்கள் மீண்டும் தேடிய பைல் கிடைக்கும்.

பின் அதை கிளிக் செய்து Restore to Copying கிளிக்

செய்தால் நீங்கள் சேமிக்க வேண்டிய டிரைவ்

செல்க்ட் செய்து ஓகே கொடுக்கவும்.

நீங்கள் சேமித்த இடத்தில் நீங்கள் தொலைத்த

-டெலிட் செய்த பைல் -ஜம்மென்று அங்கு

அமர்ந்திருக்கும். பயன் படுத்தி பாருங்கள்.

கருத்துக்களை பின்னுடமிடுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
பென்டிரைவ் இன்ஸ்டால் செய்தவுடன்
அதை முதலில் வைரஸ் உள்ளதா
என ஸ்கேன் செய்தபின் அதில்உள்ள
பைல்களை ஓப்பன் செய்யவும்.
இதனால் வைரஸ்தாக்குதலில் இருந்து
நமது கணிணியை காப்பாற்றலாம்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

இ-மெயிலில் பூங்கொத்து அனுப்ப


இ-மெயிலில்பூங்கொத்து வாழ்த்துக்களை அனுப்பலாம்.

வழக்கமாக நாம் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு

வாழ்த்துக்களை இ-மெயிலில் அனுப்புவோம்.

ஆனால் இதையே வித்தியாசமாக பூங்கொத்துடன்

அனுப்பினால் பெறுபவர்கள் மிகுந்த மகிழ்சிஅடைவார்கள்.


முதலில் இந்த சாப்ட்வேரை நிறுவிக்கொள்ளவும்.

உங்களுக்கு இந்த மாதிரி முன்பக்கம் ஓப்பன் ஆகும்.


நீங்கள் அனுப்ப விரும்பும்பூங்கொத்தின் அடிப்பாகம் முதலில்

தேர்ந்தேடுங்கள்.






கூடுதல் புகைப்படங்களுக்கு More அழுத்தவும்.

வேண்டிய படத்தை தேர்வு செய்த பின் அதற்கு

மேற்புறம்பூச வேண்டிய வண்ணத்தை தேர்வு

செய்யவும். சரிபூங்கொத்தின் அடிப்பாகம்

ரெடி செய்து விட்டீர்கள் அல்லவா.

அடுத்து நீங்கள் இடப்புறம் உள்ள

மலர் வகைகளில் தேவையானதை தேர்வு

செய்யுங்கள்.




மலர்கள் தவிர இலை- இதர டிசைன் எது தேவையோ

அதை தேர்வு செய்யுங்கள்.பூங்கொத்து விருப்பமானதை

அலங்கரித்தபின் அடுத்து வலப்புறம் உள்ள டிசைனில்

சூழ்நிலைக்கு ஏற்ப டிசைன் ஒன்றை தேர்வு செய்யவும்.

அதற்கு பின்னணி வண்ணத்தையும் தேர்வு செய்யவும்.





பிறந்த நாள் என்றால் பரிசு பெட்டியையும் உடல்நிலை

சரியில்லையென்றால் ஆஸ்பத்திரை சிம்பலையும்

தேர்வு செய்யவும். சண்டை போட்டிருந்தால் சமாதன

புறாவை அனுப்பலாம்.


நான் சமாதான புறாவையும் பின்புறம் நீல வண்ணத்தையும்

தேர்வு செய்து உள்ளேன்.


உங்கள் வாழ்த்தை இரண்டு வரிகளிலும் தகவலை

எட்டு வரிகளிலும் அமைக்கலாம்.



கடைசியாக உங்கள் பெயரையும் உங்கள் இ-மெயில்

முகவரியையும் பதிவு செய்யவும்.


அதன் கீழே நீங்கள் அனுப்ப விரும்புவரது

இ-மெயில் முகவரிபதிவு செய்யவும்.

நீங்கள் தகவலை அன்றே அனுப்ப

வேண்டும் என்றால் Send அனுப்பவும். இல்லை

உங்கள்வாழ்த்தை வரும் 15 நாட்களுக்குள்

அனுப்ப வேண்டும்என்றால் இன்றிலிருந்து

அடுத்து வரும் 15 நாட்களில்

ஒன்றை தேர்வு செய்து அனுப்பிவிடவும்.

உங்கள் மலர் கொத்தை இந்த சாப்ட்வேர்

குறிப்பிட்ட நாள் அனுப்பிவிடும்.

இந்த இலவச சாப்வேரின் தள முகவரி:-


வாழ்த்துக்களுடன்,

வாழ்க வளமுடன்:,

வேலன்.


இன்றைய வலைப் பூவில் உதிரிப் பூ
வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் மாற்றும் சமயம் அன்றைய காலண்டரின் தேதியை
சிலிண்டரின் மேற்புறம் ஒட்டி விடவும். சிலிண்டர் எவ்வளவு நாள் பயன்பட்டது என சுலபமாக
அறிந்து விடலாம்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

இலவச மென்பொருள்கள்.

வேலன்:-இரட்டையர்களை கண்டுபிடிக்க.

ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரட்டைக்குழந்தைகளை
அடையாளம் காண்பதில் தாய்க்கே சில

சமயம் குழப்பமாகும். அதுபோல் நம்மிடம்

உள்ள ஒரே பைல் நமது கம்யூட்டரில் வெவ்வேறு

ஃபோல்டர்களில் அதே பெயரிலோ அல்லது வேறு 

பெயரிலோ இருக்கலாம். அதுபோல் ஒரே மாதிரி

புகைப்படமோ - பைல்களோ - பல பைல்களில்

பல போல்டர்களில் நமது கம்யூட்டரில் அமர்ந்து

இருக்கலாம். ஏற்கனவே உள்ள பைலை நீங்கள்

மீண்டும் இன்டர்நெட்டிலிருந்து மீண்டும் டவுன்

லோடு செய்திருக்கலாம். ஏற்கனவே சிடியில்

உள்ள தகவல்களை மீண்டும் சிடியில் எழதியிருக்

கலாம். இவ்வாறு ஒரே பைல்கள் இரண்டிரண்டாக

இருப்பதால் நமது Harddisk இடமும் வேஸ்ட்,

நமது நேரம், பணம், சக்தி அனைத்தும் வீண்.

இதுபோல் நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆர் போல,

திரிசூலம் சிவாஜி போல, ராஜாதி ராஜா ரஜினி போல,

வாலி அஜித் போல என டபுள் ஆக்ட் பைல்களை

அடுக்கி கொண்டே போகலாம். இதில் ஒரே மாதிரியான

பைலை கண்டுபிடித்து ஒன்றை மட்டும் வைத்துக்

கொள்ள இந்த சாப்ட்வேர் உபயோகப்படும்.

(ஓரு உறையில் ஒரு கத்திதான் இருக்கவேண்டும்)

இந்த இலவர சாப்ட்வேரை டவுண்லோடு செய்து

உபயோகித்துப்பாருங்கள். 

முகவரி தளம்:-


உங்கள் கருத்துக்களை மறக்காமல் தெரிவியுங்கள்.

இப்போது ஒட்டும் பொட மறக்காதீர்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.
இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
தலைப்பு பட்டையில் நடுவில் கர்சரை வைத்து டபுள் கிளிக் செய்தால் விண்  டேஸ் ஃபுல் ஸ்கிரினாககாட்சியளிக்கும். மீண்டும் அதே வாறு செய்தால் பழைய நிலைக்கு மாறும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

நாம் அன்றாடம் உண்ணும் உணவின் அட்டவணை(FOOD FILE)


நாம் அன்றாடம் உண்ணும் உணவின் 
அட்டவணை.(FOOD FILE)



நான் வலைப்பு_வில் எழுத ஆரம்பித்து எனது 25வது பதிவு

இது. உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை.அன்புடன் -வேலன். 
நாம் அன்றாடம் உணவு உண்ணுகின்றோம். 

பெரும்பாலும் பசிக்காகவும் சில சமயம் ருசிக்

காகவும் உண்ணுகின்றோம். ஆனால் அதில்

என்ன சத்து இருக்கின்றது - எந்த அளவு சத்து

இருக்கின்றது என நமக்கு தெரிவதில்லை.

மாறி வரும் உலகத்தில் புண்ணாக்கையும்

அழகிய பாக்கெட்டில் அழகாக பேக்பண்ணி

விற்றாலும் அதை வாங்குவதற்கும் ஆள்

இருக்கிறார்கள். அந்த கால பொருள்விளங்கா

உருண்டை(பொல்லங்கா உருண்டை),

சீடை, தட்டை , முறுக்கு, அதிரசம், கம்பு அடை,

கேழ்வரகு களி, கேழ்வரகு கூழ், சிம்னி,

குழிபணியாரம், புட்டு, இடியாப்பம், தேங்காய்

பால் ஆப்பம், காஞ்சிபுரம் இட்லி என அந்த

கால சிற்றுண்டிகளையும். சிறு திணிகளையும்

அடுக்கிகொண்டே போகலாம். அதில் நமக்கு

தேவையான சத்து அனைத்தும் நிறைந்திருந்தது.

அந்த கால மனிதர்கள் உடம்பு இந்த கால

மனிதருக்கு இருப்பதில்லை. இப்போது எல்லாம்

சர்க்கரைவியாதியும், Heart Attack -ம், 

சிறுவயதிலேயே கண்ணடி அணிதலும்,

சிறுநீரக வியாதிகளும் சிறுவயதிலேயே

அனைவருக்கும் வந்து விடுகிறது.

நாம் உண்ணும் உணவின் சத்துக்களான

Typical Values களான

1.Engergy,

2.Protein,

3.Carbohydrate,

4.Fat,

5.Fiber,

6.Sodium  என அனைத்தும் எந்த அளவு உள்ளது

என நமக்கு பட்டியலிட்டு காட்டுகிறது.

Detailed Nutritional Content (Per 100gm.Product)

எந்த அளவு சத்துக்கள் -வைட்டமின்கள்,

நீர் உள்ளது என தெளிவான அறிக்கையை

தருகின்றது. மேலும் FOOD FILE - ல் அதிகப்

படியாக என்ன உள்ளது (இனிப்பா - கொழுப்பா)

என அதையும் தனியே காட்டிவிடுகிறது.

இதில் மொத்தம் 7200 க்கும் மேலான

உணவு வகைகளையும் பட்டியலிட்டுள்ளது.

குழந்தைகள் உணவுமுதல் பெரியவர்களின்

உணவு வகைகள் வரை இதில் பட்டியலிட்டுள்ளது.

நமக்கு தேவையான உணவுகளையும்

சர்ச் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இனி எந்த ஒரு உணவு நாம் உண்ணாலும்

சரி மற்றவர்கள் சாப்பிட்டாலும் சரி- அதில்

என்ன சத்து உள்ளது. எவ்வளவு கொழுப்பு

உள்ளது, எவ்வளவு இனிப்பு உள்ளது என

தெரிந்து கொள்ளலாம்.

FOOD FILE க்கான இணைய தள முகவரி:-

http://www.kelpiesoft.com/

http://www.kelpiesoft.com/applib/foodfile/index.htm

தளம் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
URL தேர்வு செய்ய ALT+D அழுத்தினால்
     பாதும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...