நாம் அன்றாடம் உண்ணும் உணவின் அட்டவணை(FOOD FILE)


நாம் அன்றாடம் உண்ணும் உணவின் 
அட்டவணை.(FOOD FILE)



நான் வலைப்பு_வில் எழுத ஆரம்பித்து எனது 25வது பதிவு

இது. உங்கள் ஆதரவு தொடர்ந்து தேவை.அன்புடன் -வேலன். 
நாம் அன்றாடம் உணவு உண்ணுகின்றோம். 

பெரும்பாலும் பசிக்காகவும் சில சமயம் ருசிக்

காகவும் உண்ணுகின்றோம். ஆனால் அதில்

என்ன சத்து இருக்கின்றது - எந்த அளவு சத்து

இருக்கின்றது என நமக்கு தெரிவதில்லை.

மாறி வரும் உலகத்தில் புண்ணாக்கையும்

அழகிய பாக்கெட்டில் அழகாக பேக்பண்ணி

விற்றாலும் அதை வாங்குவதற்கும் ஆள்

இருக்கிறார்கள். அந்த கால பொருள்விளங்கா

உருண்டை(பொல்லங்கா உருண்டை),

சீடை, தட்டை , முறுக்கு, அதிரசம், கம்பு அடை,

கேழ்வரகு களி, கேழ்வரகு கூழ், சிம்னி,

குழிபணியாரம், புட்டு, இடியாப்பம், தேங்காய்

பால் ஆப்பம், காஞ்சிபுரம் இட்லி என அந்த

கால சிற்றுண்டிகளையும். சிறு திணிகளையும்

அடுக்கிகொண்டே போகலாம். அதில் நமக்கு

தேவையான சத்து அனைத்தும் நிறைந்திருந்தது.

அந்த கால மனிதர்கள் உடம்பு இந்த கால

மனிதருக்கு இருப்பதில்லை. இப்போது எல்லாம்

சர்க்கரைவியாதியும், Heart Attack -ம், 

சிறுவயதிலேயே கண்ணடி அணிதலும்,

சிறுநீரக வியாதிகளும் சிறுவயதிலேயே

அனைவருக்கும் வந்து விடுகிறது.

நாம் உண்ணும் உணவின் சத்துக்களான

Typical Values களான

1.Engergy,

2.Protein,

3.Carbohydrate,

4.Fat,

5.Fiber,

6.Sodium  என அனைத்தும் எந்த அளவு உள்ளது

என நமக்கு பட்டியலிட்டு காட்டுகிறது.

Detailed Nutritional Content (Per 100gm.Product)

எந்த அளவு சத்துக்கள் -வைட்டமின்கள்,

நீர் உள்ளது என தெளிவான அறிக்கையை

தருகின்றது. மேலும் FOOD FILE - ல் அதிகப்

படியாக என்ன உள்ளது (இனிப்பா - கொழுப்பா)

என அதையும் தனியே காட்டிவிடுகிறது.

இதில் மொத்தம் 7200 க்கும் மேலான

உணவு வகைகளையும் பட்டியலிட்டுள்ளது.

குழந்தைகள் உணவுமுதல் பெரியவர்களின்

உணவு வகைகள் வரை இதில் பட்டியலிட்டுள்ளது.

நமக்கு தேவையான உணவுகளையும்

சர்ச் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

இனி எந்த ஒரு உணவு நாம் உண்ணாலும்

சரி மற்றவர்கள் சாப்பிட்டாலும் சரி- அதில்

என்ன சத்து உள்ளது. எவ்வளவு கொழுப்பு

உள்ளது, எவ்வளவு இனிப்பு உள்ளது என

தெரிந்து கொள்ளலாம்.

FOOD FILE க்கான இணைய தள முகவரி:-

http://www.kelpiesoft.com/

http://www.kelpiesoft.com/applib/foodfile/index.htm

தளம் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய வலைப்பூவில் உதிரிப்பூ
URL தேர்வு செய்ய ALT+D அழுத்தினால்
     பாதும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

வேலன். said...

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.

வாழ்க வளமுடன்,
வேலன்.

எட்வின் said...

பயனுள்ள தகவல்கள். நன்றி

வேலன். said...

பயனுள்ள தகவல்கள். நன்றி//

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...