Showing posts with label free software. Show all posts
Showing posts with label free software. Show all posts

வேலன்:-ஒரே சமயத்தில் அதிகமான புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய

இணைய பக்கங்களில் நாம் விதவிதமான -வெவ்வேறு பார்மெட்டுக்களில் புகைப்படங்களை பார்க்கின்றோம். சில இணைய பக்கங்களில் உள்ள அனைத்து புகைப்படங்களும் மிக அருமையாக இருக்கும். அதை ஒவ்வொன்றாக நாம் பதிவிறக்கம் செய்யவேண்டும். அதை விட அந்த பக்கங்களில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் நாம் மொத்தமாக பதிவிறக்கம் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.1.25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 
 இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள URL  முகவரியில் உங்களுக்கு விருப்பமான இணைய முகவரியை தட்டச்சு செய்யவும். நீங்கள் தட்டச்சு செய்த முகவரி சரியானதுதான என பார்க்க இதில் உள்ள Open URL in Browser கிளிக் செய்தும் இணைய முகவரி நேரடியாக செல்லலாம்.பின்னர் இதில் உள்ள அம்புகுறியை கிளிக் செய்ய நீங்கள் புகைப்படங்களை சேமிக்க விரும்பும் இடத்தை குறிப்பிடவும்.
 இப்போழுது நீங்கள் இதில் உள்ள View Images கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் வலதுபுறம் உள்ள அம்புகுறி புகைப்படத்தின் ஒரிஜினல் பார்மெட்டுக்கு பதிவிறக்கம் ஆகும். இடது புறம் உள்ள மூன்று அம்புகுறியை தேர்வு செய்வது மூலம் புகைப்படத்தை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
அனைத்து புகைப்படங்களும் பதிவிறக்கம் ஆனதும் உங்களுக்கு Done என தகவல் வரும். அதிகமான புகைப்படங்களை நீங்கள் விரைவில் பதிவிறக்கம் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் உங்களுக்கு பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-விரும்பிய ப்ரோகிராமில் நினைவுகுறிப்புகளை எழுத



பொதுவாக டெக்ஸ்டாப்பில் -டாக்ஸ்க்பாரில் நோட்ஸ் எழுதிவைதது அதை நமக்கு குறிப்பிட்ட நேரத்தில் நினைவுபடுத்த நிறைய சாப்ட்வேர்கள்உளளது. ஆனால் குறிப்பிட்ட ப்ரோகிராம் -வேர்ட் -எக்செல் -இமெயில் -போட்டோஷாப் நோட்பேட் -என எதில் தேவையோ அதில் மட்டும் நினைவுபடுத்தும் சாப்ட்வேர் ஆக இது உள்ளதுஇலவச மென்மொருளில் 4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.வேர்டில் குறிப்பு எழுதியது வந்த விண்டோ கீழே-
புகைப்படத்தில் குறிப்பு எழுதி பின்னர் ஒப்பன செய்யும் சமயம் வந்த விண்டோகீழே-
இதன் பயன்கள் ஆங்கிலத்தில் கீழே-

  • Annotate Firefox, Interne-Explorer and all other website-browsers with Your note.
  • Annotate Word, Excel, Images and all other documents with your personal comment.
  • Set a timer to get your note back on the surface.
  • Share notes with colleagues and friends

இதன் வீடியோ தொகுப்பு கீழே-



பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-400 -ஆவது பதிவு-அனைவருக்கும் நன்றி.


அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி...கண்மூடி கண்திறப்பதற்குள் 400 பதிவுகள் பதிவிட்டுள்ளேன்..மருத்துவம் ஆகட்டும் - ஜோதிடம் ஆகட்டும் - தான் கற்ற வித்தையை மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்தால்தான் அவை அழியாமல் நிலைத்து நிற்கும். எனக்கு தெரிந்த சாப்ட்வேர்கள் - தொழில்நுட்ப விவரங்கள் - போட்டோஷாப் பாடங்கள் நான் மற்றவர்களுக்கு அறிய தருகின்றேன்.வலைபதிவு எழுதி உங்களுடன் பகிர்ந்து கொண்டது மூலம் இன்று 675 உடன் தொடரும் நண்பர்களை - பெற்றுள்ளேன்.  இதனால் கிடைப்பது ஆத்ம மனதிருப்தி மட்டுமே.இந்த ஆத்ம திருப்தி உங்கள் தொடர் வருகையாலும்-கருத்துக்களாலும் -வாக்குகளாலும் எனக்கு கிடைக்கின்றது.எனதுஇந்தவெற்றிக்குகாரணமாகஇருந்தசக
பதிவர்கள்.நண்பர்கள்.வாசகர்கள் திரட்டிகள்,மற்றும்
 யூத்ஃபுல்விகடன்,அனைவருக்கும் மனமார்ந்த நன்றி...
எனது பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு எனக்கு 
ஆதரவு கொடுத்து வரும் தமிழ்கம்யூட்டர்
 புத்தகத்திற்கும் நன்றி....தொடர்ந்து உங்கள்
 அன்பான ஆதரவையும்அளவில்லா ஓட்டுக்களையும் -
மேலான கருத்துக்களையும் வேண்டி....
வாழ்க வளமுடன்,
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-விதவிதமான Solitaire-விளையாட்டுகள்.

கம்யுட்டரிலேயே இணைந்துவரும் இந்த Solitaire விளையாட்டை விளையாடாதவர்களே இருக்க முடியாது.நான் விரும்பும் ஒருவருக்கு இந்த விளையாட்டு மிகமிக விருப்பம். கம்யுட்டரில் உட்காரும்போது ஒரு முறையாவது சீட்டு விளையாடி ஜெயித்தால்தான் அவருக்கு திருப்தி.கம்யுட்டரில் இணைந்து வரும் பலவித விளையாட்டுகளில் சாலிடாரும் ஒன்று. இதில் ஒரே விளையாட்டைதான் விளையாட முடியும். இந்த சாப்ட்வேரில; சாலிடர் விளையாட்டுகள் 70 க்கு மேல் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கேம் டேப்பை ஒப்பன்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் ஒவ்வொரு ஆங்கில எழுத்தை கிளிக் செய்தால் 4 முதல் 5 கேம் வரை இதில் இருக்கின்றது.
இதில் உள்ள உதவி மூலம் கேம் விளையாடும் முறையும் தெரிந்துகொள்ளலாம்.
விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-
இது நமக்கு காவல் இருக்கா...இல்ல நம்மளை காலி பண்ண இருக்கா...!!!

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-ஆடியோவினை கம்யுட்டரில் தொடர்ந்து பதிவு செய்ய

நாமே பாடலை பாடி நாமே நமது பாடலை கேட்பது தனி இன்பம். கம்யுட்டரிலேயே பதிவு செய்ய வசதி உள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அது பதிவு ஆகும். மேற்கொண்டு பதிவு செய்ய அதை நாம் நீடிக்க வேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு அந்த குறையை போக்குகின்றது. 400 கே.பி. (அதாவது 1 எம்.பி.யில் பாதி) அளவே உள்ள இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கம்யுட்டரில் நிறுவிய பின உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேற்புறம் உங்களுக்கு Input என்கின்ற பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நீங்கள் உங்களுடைய Device தேர்வு செய்து கொண்டு பின்னர் நீங்கள் எதிலிருந்து பாடல்கள் பதிவு செய்ய போகின்றீர்களோ அதை தேர்ந்தெடுங்கள்.
அடுத்து உங்களுக்கு பாடல் எந்த பார்மெட்டில் வேண்டுமோ Output மூலம் அதனை தேர்வு செய்யுங்கள்.
இதிலுள்ள செட்டிங்ஸ் மூலம் தேவையான செட்டிங்ஸ் அமைத்துக்கொள்ளுங்கள். சிடி பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது. கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
எல்லாம் தயார் செய்துவிட்டீர்களா. இப்போது இதில் உள்ள ரெகார்ட் பட்டனை அழுத்துங்கள்.ஆடியோ பதிவாகும். 
தேவையானது பதிவானதும் ஸ்டாப் பட்ட ன் மூலம் நிறுத்துங்கள். இப்போது நீங்க்ள சேமித்துள்ள போல்டரில் சென்று பார்த்தால் பாடல் ப்திவாகிஇருக்கும்.
புதியவர்களுக்கு என்று இதற்கு முன் 19-02-2009 அன்று கம்யுட்டரில் ஆடியோ பதிவு செய்ய என்கின்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன். விவரமாக அதனை தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.ஆடியோ கேசட்டிலிருந்து பாடல்களை கம்யுட்டருக்கு மாற்ற என்ன செய்யவேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அந்த பதிவினை போடும் முன் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தினால் அந்த பதிவிற்கு சுலபமாக இருக்கும் என்றே இதனை பதிவிடுகின்றேன். ஆடியோ கேசட்டிலிருந்து பாடலை கம்யுட்டருக்கு எவ்வாறு பதிவு செய்வது என்று பின்னர் பதிவிடுகின்றேன்.(புதியவர்களுக்காகவே இந்த பதிவு) பதிவினை பாருங்கள் கருததுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை காக்க பதிவை யுத்புல் விகடனில் குட்பிளாக் பகுதியில் வெளியிட்ட விகடனாருக்கு நன்றி.நாளை ஞாயிறு கடை உண்டு. நாளை விளையாட்டை பற்றிய பதிவு .இது கொஞ்சம் பெரியவர்கள் அடிக்கடி விளையாடும் விளையாட்டு. அந்த விளையாட்டு பதிவினை காண நாளை வரை கொஞ்சம் பொருத்திருங்கள்....!
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-புகைப்படத்தை கொஞ்சம் அழகாக காண்பிக்க

சென்ற பதிவில் சகோதரி பத்மா கூறியது...


ரொம்ப நல்லா இருக்குங்க வேலன் .
நிறைய கத்துகிறோம்.
கொஞ்சம் அழகா காமிக்க எதாவது software இருக்கா? :))

சகோதரியின் வேண்டுகோளை ஏற்று கொஞ்சம் அழகாக மாற்றும் சாப்ட்வேர் இங்கு பதிவிடுகின்றேன். இந்த சாப்ட்வேர் மூலம் போட்டோக்களைதான் அழகாக்க முடியும். உண்மையான உருவங்ளை அழகாக்க முடியாது. இனி இந்த சாப்ட்வேர்பற்றி பார்க்கலாம். இதனை பயன்படுத்த போட்டோஷாப் தேவையில்லை.இந்த சாப்ட்வேரை  பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.2 எம்.பி.கொள்ளளவு கொண்டது இந்த சாப்ட்வேர்.இதை டவுண்லோடு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஓ.கே.தாருங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதி்ல் Input image என்பதில் கிளிக் செய்து உங்கள் ஹார்ட்டிரைவில் இருந்து புகைப்படம் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
நான் இந்த புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
நீங்கள் Input Image கொடுத்ததும் புகைப்படம் இதுபோல் வந்து அமரந்துகொள்ளும்.
இப்போது அடுத்த டேபில் உள்ள Device Noise Profile கிளிக் செய்யுங்கள். கலர் மாற்றங்கள் வேண்டுமானால் செய்துகொள்ளலாம்.இப்போது Auto Profile கிளிக் செய்யுங்கள்.
இப்போது மூன்றாவதாக உள்ள டேபில் Noise Filter Settings கிளிக் செய்யுங்கள்.இதில் வலதுபுறம் உள்ள Noise Reduction Amount -ல் உள்ள Luminance Channel அளவினை 60% என அமைத்துக்கொள்ளுங்கள் அதனை அதிகமாக வைத்துக்கொண்டால் படத்தை மெழுகில் தோய்துஎடுத்ததுபோல் இருக்கும்.
இப்போது கடைசியாக Out Put image வாருங்கள். அதில உங்கள் படத்தை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்து Apply Image கொடுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் படமானது அழகாக காட்சியளிக்கும். முகம் மட்டும் குளோசப்பில் எடுக்கும் சமயம் இந்த சாபட்வேரை பயன்படுத்தலாம்.இரண்டு படங்களை அருகருகே வைத்துப்பார்க்கும் சமயம் வித்தியாசத்தை நீங்கள் எளிதில உணரலாம். பதிவின் நீளம் கருதி இததுடன் முடித்துக்கொள்கின்றேன். பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-கம்யூட்டரின் அஞ்சறைப்பெட்டி

சமையல் அறையில் அஞ்சறை பெட்டி என்று ஒன்று இருக்கும். அதில் கடுகு.சீரகம்,மிளகு,வெந்தயம்,மிளகா,உளுத்தம் பருப்பு,மஞ்சள் துர்ள் என எல்லாம் தனிதனி கிண்ணங்களி்ல் இருக்கும். தேவையானதை எடுத்து சமையலின் போது பயன்படுத்திக்கொள்ளுவார்கள். (என்னடா இவன்...திடீரென்று சமையல் குறிப்பு சொல்கின்றான் என எண்ணவேண்டாம்) சமையல் அறைக்கு அஞ்சறை பெட்டி எவ்வளவு முக்கியமோ அதைப்போல கம்யூட்டருக்கு இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்அளிக்கும்.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.35 எம்.பி. கொள்ளளவு கொண்ட இது இலவச சாப்ட்வேர் ஆகும்.இதை கணிணியில நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்எந்தவீடியோவையும்வேண்டியபார்மெட்டுக்குஎளிதில்
மாற்றிகொள்ளலாம்.ஆடியோவையும்அதுபோலவேண்டிய
பார்மெட்டுக்குமாற்றிக்கொள்ளலாம். போட்டோக்களை ஒரு பார்மெட்டிலிருந்து வேண்டிய பார்மெட்டிற்கு மாற்றிக்
கொள்ளலாம். டிவிடியிலிருந்து வீடியோவாக மாற்றலாம்.
 ஆடியோ பைல்களைஎம்.பி.3 பாடல்களாக மாற்றிக்
கொள்ளலாம்.வீடியோ கட்டர், ஆடியோ கட்டர்,வீடியோ
 ஜாயினர்.ஆடியொ ஜாயினர், வீடியோஆடியோ மிக்ஸிங் 
என இதில் உள்ள பயன்கள் மிகமிக அதிகம்செல்போன்
 மாடலை தெரிவித்தால் அதற்கான வீடியோபதிவை
 இதில மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை
 பாருங்கள்.
Convert music CD to MP3,WMA,OGG,AAC.
Convert video DVD to MP4,3GP,AVI,WMV..
இதி்ல் வாட்டர் மார்க் செய்யும் வசதியும் உள்ளது.வீடியோவை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்ற Add File கிளிக் செய்து டிரைவில் உள்ள வீடியோவை கிளிக்செய்து சேமிக்க விரும்பும் இடத்தையும் தேர்வு செய்யவும். 
இறுதியாக இதில் உள்ள Start கிளிக் செய்தால் Convert ஆகி நாம் சேமித்த இடத்தில் சேமிப்பாகும். அங்கிருந்து எடுத்து பயனபடுத்திக் கொள்ளலாம்.
பதிவின் நீளம் கருதி சுருக்கமாக சொல்லியுள்ளேன்.சாப்ட்வேரை பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள். நமது சக வாசக சகோதரர் பாலராஜன்கீதா அவர்கள் சொன்னது:- 


http://www.formatoz.com/
என்ற சுட்டியில் உள்ள formatfactory மென்பொருளைப்பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறீர்களா என்று தெரியவில்லை. இல்லை என்றால் இயன்றால் தரவிறக்கி, பயன்படுத்தி அதைப்பற்றி வாசகர்களுக்கு ஒரு இடுகையாக அளியுங்கள்.


இந்த சாப்ட்வேர் பற்றி சொன்ன சகோதரர் பாலராஜன்கீதா அவர்களுக்கு நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வார் செஸ் விளையாட்டு


செஸ் விளையாட்டை விளையாடதவர்களே இல்லை எனலாம். எவ்வளவோ கம்யூட்டரில் செஸ் விளையாட்டு இருந்தாலும் இந்த வார் செஸ் மற்றதிலிருந்து மிகவும் வேறுபட்டது. முதலில் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். பதிவிறக்கம் செய்தபின் கேம் ஒப்பன் செய்யவும் கீழ்கண்ட விண்டோ  ஓப்பன் ஆகும். 
அதில நியூ கேம் என்பதனை தேர்வு செய்யுங்கள். அடுத்து 
ஓப்பன ஆகும் விண்டோவில் நீங்கள் எங்கு விளையாட
 போகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள்.
(காடு,பாலைவனம் போன்று)அதைப்போலவே
 விளையாட்டு சுலபமாகவா கடினமாகவா
 என்பதனையும் தேர்வு செய்யுங்கள்.
நான் காடு தேர்வு செய்துள்ளேன்.இப்போது
கீழ்கணட் விண்டோ ஓப்பன ஆகும்.

இதில் இரண்டு சேஸ் போரட்கள் இருக்கும். ஒன்று
 உண்மையான உருவத்துடனும் மற்றோன்று செஸ்
 காய்களுடனும் இருக்கும். இதில் நமது வெள்ளை நிறம்.
 இப்போது விணடோவில் தோற்றும் செஸ் காயினை
 நாம் கர்சர் கொண்டு நகர்த்த வேண்டும.(செஸ் 
விதிமுறைகளுக்கு ஏற்ப காயினை நகர்த்த வேண்டும்)
காயினை நகர்த்த நகர்த்த இதில் உள்ள உருவங்கள்
 இன்னிசையுடன் நகர்வதை காணலாம்.நமது வெள்ளை 
குதிரை பறந்து சென்று அமர்வதை கீழே உள்ள 
விண்டோவில் பாருங்கள்.
நமது சேனாதிபதியும் நகர் வதை காணுங்கள்.
நமது மந்திரி ( இளவரசி)கொள்ளை அழகு.அதைப்போல 
யானை நகரும் போதும் அழகான இன்னிசை கேட்கும்.
சில வருடங்களுக்கு முன் இந்த விளையாட்டை இரவில்
 நான் விளையாடும் சமயம் ஒலி அளவை அதிகமா
க வைத்து விளையாடினேன். ஒரு கட்டத்தில் நமக்கே
 பயமாக வந்தது. விளையாடி பாருங்கள்.இறுதியாக
 யார் விளையாட்டில வெற்றி பெறுகின்றார்களோ
 அப்போது சுழுல் காற்று வந்து மொத்த நபர்களையும் 
அடித்து செல்லும். கீழே பாருங்கள் .கம்யூட்டர் வெறறி
 பெற்ற பின் வந்த புகைப்படம்
பதிவினை பாருங்கள். கருத்தினை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
பச்சோந்தி மாதிரி நிறம் மாறலாம் என்று பார்த்தால முடியவில்லையே...!
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற


கிராமப்புறங்களில் கிணறு தூர் வாருவதை பார்த்திருப்பீர்கள். எப்போதோ கிணற்றில் போட்ட பொருள்கள் ஒவ்வொன்றாக கிடைக்கும்.அதைப்போலவே இந்த சாப்ட்வேரில் நாம் நமது மெமரி கார்ட்,பென்டிரைவ்,ஹாரட்டிரைவ் என அதில் உள்ள அனைத்து தகவல்களையும் -பார்மெட் செய்தபி்ன் சுலபமாக பெறலாம்.இந்த சாப்ட்வேர்ரானது இமெஜ் பைல்,டேடா பைல்,வீடியோ பைல்,மற்றும் ஆடியோ பைல்களை மீட்டுகொடுக்கும்.இந்த சாபட்வேரிலிருந்தும் தகவல்களை பெற முடியாமல் போனால் அவ்வளவுதான்.(சில பென்டிரைவ் மற்றும் மெமரி கார்ட் சர்வீஸ்க்கு கொடுக்கும் முன் இந்த சாப்ட் வேர் மூலம் பரிசோதனை செய்துவிட்டு கொடுப்பது நமக்கு நல்லது) சரி 4 M.P. கொள்ளளவு உள்ள இந்த சாப்ட் வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Select a Drive கிளிக்செய்யுங்கள் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான டிரைவை தேர்வு செய்து ஒன்றாம் எண்ணை ஒ.கே. கொடுங்கள்.கீழே உள்ள விண்டோ தோன்றும்.
உங்களை Confirm செய்ய சொல்லி மெசெஜ் வரும் . யெஸ் கொடுங்கள்.
அவ்வளவுதான் .உங்கள் டிரைவிலிருந்து தகவல்கள் பெற ஆரம்பிக்கும்.
ஸ்கேன் பண்ணி முடிந்ததும் டீப் ஸ்கேன் செய்யவா என கேட்கும் அதற்கும் யெஸ் என பதில் அளியுங்கள்.
அதிலுள்ள ப்ரிவியுவினை பாருங்கள்.நீங்கள் எப்போதோ பார்மெட் செய்த பைல்கள் தெரியும்.
ஸ்கேன் பண்ணி முடித்ததும் வந்துள்ள படங்களை பாருங்கள்.(வெய்யிலுக்கு இதமாக ஐஸ்கிரீம் படங்களை பதிவிட்டுள்ளேன்)
இதில் உள்ள அட்வான்ஸ் ஆப்ஷனை பயன் படுத்தி உங்களுக்கு மீட்டுஎடுத்த தகவல்கள் எங்கு சேமிக்க வேண்டுமோ அங்கு சேமிக்கலாம். அதைப்போல மீட்டு எடுத்த தகவல்களை சிடியாக வேண்டுமானாலும் இந்த சாப்ட்வேர்மூலமே காப்பி செய்து கொள்ளலாம்.பயன்படுத்திப் பாருங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
சரி...நீங்கள் கோபமாக பார்ப்பது புரிகின்றது.என்ன பண்ணறது.என் பசி எனக்கு....!


இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்த இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-இசை ஆல்பம் தயாரிக்க


உங்கள் மகத்தான ஆதரவில் எனது 275 ஆவது பதிவு இது.
குழந்தைகள் இருந்தாலே எதையாவது தட்டி - தாளம் போட்டு ஒலியெழுப்பி விளையாடிக்கொண்டிருப்பார்கள.இது கம்யூட்டரிலேயே இசை கோர்த்து பாடலை உருவாக்கும் சாப்ட்வேர்ஆகும்..நமது விருப்பமான டியுனிலே புதிய இசையை உருவாக்கலாம். சற்றே பெரிய சாப்ட்வேர் . அதனால் இதனுடைய லிங்க்கை இங்கே கொடுத்துள்ளேன்.இதை பதிவிறக்கி கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதன் வலதுமூலையில் உள்ள 1 என்கின்ற எண்ணுக்கு கீழ் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் வேண்டிய இசைக்கருவியை தேர்வு செய்யுங்கள்.
இப்போழுது கீழே பார்த்தீரு்களேயானால் சிறிய விண்டோ இருக்கும் அதில் ஏற்கனவே உள்ள இசைகருவிகளின் தொகுப்பு சின்ன பிட்களாக இருக்கும். அதில் தேவையானதை கிளிக் செய்யவும்.
இப்போது மேலே உள்ள விண்டோவினை பாருங்கள். அந்த இசை தொகுப்பின் பிட்டை மவுஸால தேர்வு செய்து இழுத்துவந்து மேலே விட்டுவிடுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள். நான் டிரம்ஸ் தேர்வு செய்துள்ளேன்.
இதைப்போலவே கிடார் இசை தொகு்பபை கீழே கொடுத்துள்ளேன்.
வேறு இசை தொகுப்பு -பாடலில் வரும இசை நமக்கு பிடித்திருக்கலாம். அதையும் இதில கொண்டுவந்து சேர்ககலாம். நமது விருப்பமான பாடலின் சி.டி.யை அதன் டிரைவில் போடுங்கள். இப்போது பைல் மெனுவில் உள்ள இம்போர்ட் என்பதை கிளிக் செய்து அதில் வரும் ஆடியோ சிடியை கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில் சிடியை ஓட விட்டு தேவையான இசை தொகுப்பை கட் செய்து உங்கள் ஆல்பத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.
இதில் வலதுபுற மூலையில் பார்த்தீர்களேயானால் சின்ன டி.வி.போன்று ஒரு ஐ-கான் இருக்கும் அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழு்கண்ட இசைகளின் அலைன்மெண்ட் கிடைக்கும் தேவையான மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள்.
அதைப்போலவே தேவையான தொகுப்பை கட்செய்ய வேண்டியஇடத்தில் பேஸட் செய்ய வசதிகளும் இதில் உள்ளது.
இசைதொகுப்பில உங்கள் கர்சரை கொண்டு செல்ல அது கையாக மாறிவிடும். தேவையான இடத்தில் அதை நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.அதன் கீழேயே உங்களுக்கு பிளே பட்டன் உள்ளது. நீங்கள் தொகுத்த இசை குறிப்பை இதில் பிளே செய்து பார்க்கலாம்.வீடியோவினையும் இதில இணைத்து பாடல்கள் சேர்க்கலாம். இந்த சாப்ட்வேர் பற்றி 10 சதவீதமே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.நேரமில்லாத காரணத்தால் என்னால் இந்த சாப்ட்வேரை அலசி ஆராய முடியவில்லை. முழு சாப்ட்வேர்பற்றியும் நீங்கள் உபயோகித்து தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் குழந்தைகளிடம் விட்டுவிடுங்கள். அடி தூள் கிளப்பி விடுவார்கள்.இசை தொகுப்பும் கற்பனைதானே.அவர்கள் கற்பனையில் எந்த வடிவம் வருகின்றதோ அதை உருவாக்கி இசை ஆல்பமாக சேமித்துவைத்துக்கொள்ளுங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.உபயோகித்துப்பாருங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ஆஹா...வெயிலுக்கு எப்படி ஆனந்தமாக இருக்கு தெரியுமா..!
இன்றைய PSD டிசைன் கீழே:-

டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...