வேலன்-புகைப்படத்தை கொஞ்சம் அழகாக காண்பிக்க

சென்ற பதிவில் சகோதரி பத்மா கூறியது...


ரொம்ப நல்லா இருக்குங்க வேலன் .
நிறைய கத்துகிறோம்.
கொஞ்சம் அழகா காமிக்க எதாவது software இருக்கா? :))

சகோதரியின் வேண்டுகோளை ஏற்று கொஞ்சம் அழகாக மாற்றும் சாப்ட்வேர் இங்கு பதிவிடுகின்றேன். இந்த சாப்ட்வேர் மூலம் போட்டோக்களைதான் அழகாக்க முடியும். உண்மையான உருவங்ளை அழகாக்க முடியாது. இனி இந்த சாப்ட்வேர்பற்றி பார்க்கலாம். இதனை பயன்படுத்த போட்டோஷாப் தேவையில்லை.இந்த சாப்ட்வேரை  பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.2 எம்.பி.கொள்ளளவு கொண்டது இந்த சாப்ட்வேர்.இதை டவுண்லோடு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஓ.கே.தாருங்கள். கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதி்ல் Input image என்பதில் கிளிக் செய்து உங்கள் ஹார்ட்டிரைவில் இருந்து புகைப்படம் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
நான் இந்த புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
நீங்கள் Input Image கொடுத்ததும் புகைப்படம் இதுபோல் வந்து அமரந்துகொள்ளும்.
இப்போது அடுத்த டேபில் உள்ள Device Noise Profile கிளிக் செய்யுங்கள். கலர் மாற்றங்கள் வேண்டுமானால் செய்துகொள்ளலாம்.இப்போது Auto Profile கிளிக் செய்யுங்கள்.
இப்போது மூன்றாவதாக உள்ள டேபில் Noise Filter Settings கிளிக் செய்யுங்கள்.இதில் வலதுபுறம் உள்ள Noise Reduction Amount -ல் உள்ள Luminance Channel அளவினை 60% என அமைத்துக்கொள்ளுங்கள் அதனை அதிகமாக வைத்துக்கொண்டால் படத்தை மெழுகில் தோய்துஎடுத்ததுபோல் இருக்கும்.
இப்போது கடைசியாக Out Put image வாருங்கள். அதில உங்கள் படத்தை எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யுங்கள். அடுத்து Apply Image கொடுங்கள். கீழே உள்ள படத்தை பாருங்கள்.
நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் படமானது அழகாக காட்சியளிக்கும். முகம் மட்டும் குளோசப்பில் எடுக்கும் சமயம் இந்த சாபட்வேரை பயன்படுத்தலாம்.இரண்டு படங்களை அருகருகே வைத்துப்பார்க்கும் சமயம் வித்தியாசத்தை நீங்கள் எளிதில உணரலாம். பதிவின் நீளம் கருதி இததுடன் முடித்துக்கொள்கின்றேன். பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

29 comments:

JOE2005 said...

Thanks Very much

ஜெய்லானி said...

நன்றி தலைவா..!!

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

வேலன் சார்,

அருமையான மென்பொருளை பதிவிட்டு அழகாகவும் விளக்கிவிட்டீர்கள்...

நன்றி சார்....

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

இனிமேல் நாங்களும் அழகாத்தானட இருக்கோம்னு சொல்லுவோம்ல...

Chitra said...

முகம் மட்டும் குளோசப்பில் எடுக்கும் சமயம் இந்த சாபட்வேரை பயன்படுத்தலாம்.இரண்டு படங்களை அருகருகே வைத்துப்பார்க்கும் சமயம் வித்தியாசத்தை நீங்கள் எளிதில உணரலாம்.


...... Miss இந்தியா vs Missed இந்தியா ........ ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....

Shafiq said...

நன்றி,

ஆனால் இயற்க்கை காட்சிகள் சரியாக வரவில்லை.

க.பாலாசி said...

//உண்மையான உருவங்ளை அழகாக்க முடியாது//

என்னா வில்லத்தனம்.. (ஹி..ஹி...)

மிக்க நன்றிங்க வேலன். இந்தமாதிரி ஒரு மென்பொருளத்தான் நான் தேடிகிட்டிருந்தேன்...

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

{அழகைப்பற்றி சொன்னவுடன் ஜோக் ஒன்று ஞாபகம் வந்தது}

காலேஜ் படிக்கும் பையனும் பொன்னும் பேசிக்கொள்கிறார்கள்...

பையன்: பொன்னுங்க உங்களுக்கு மட்டும் ஏன் அதிகமாக அழகுசாதனபொருட்கள்,மேக்கப் பொருட்கள் இருக்கு, பையன்களுக்கு இல்லை ஏன் தெரியுமா?

பொன்னு: தெரியல ஏன்...

பையன்: ஏன்னா நாங்களலெல்லாம் இயற்கையிலெயே அழகானவர்கள்...

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ளதாகவுள்ளது நண்பரே

sarusriraj said...

பயனுள்ள குறிப்புகள்

Mrs.Menagasathia said...

மிக்க நன்றி சகோ!! இதே போல் நானும் சமையல் போட்டோகளை செய்யலாம் தானே சகோ??

சுமதி said...

ஹாய் நண்பா,

ரொம்ப நல்லாயிருக்கு. ஆன்ன சிலது தான் சரியா வரலை. ஆனாலும் ஒரு நல்ல மென்பொருள் தான்.நன்றி.

//நண்பா, ஏற்கனவே என்னைபோல அழகா இருக்கருவங்களுக்கு இதெல்லாம் வேண்டாம் னு தோனுதோஓஓஓஓ.//
ஹா ஹா ஹா..... இது கூட நல்லாத் தான் இருக்கு.

வேலன். said...

JOE2005 கூறியது...
Thanks Very much//

நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
நன்றி தலைவா..!//

நன்றி ஜெய்லானி சார்...வாழ்கவளமுடன்,வேலன்.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,

அருமையான மென்பொருளை பதிவிட்டு அழகாகவும் விளக்கிவிட்டீர்கள்...

நன்றி சார்....//

நன்றி சிம்பு சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
இனிமேல் நாங்களும் அழகாத்தானட இருக்கோம்னு சொல்லுவோம்ல...//

அட இதுவேறா....ரைட் ரைட்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
முகம் மட்டும் குளோசப்பில் எடுக்கும் சமயம் இந்த சாபட்வேரை பயன்படுத்தலாம்.இரண்டு படங்களை அருகருகே வைத்துப்பார்க்கும் சமயம் வித்தியாசத்தை நீங்கள் எளிதில உணரலாம்.


...... Miss இந்தியா vs Missed இந்தியா ........ ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.....//

...... Miss இந்தியா vs Missed இந்தியா ........ நல்ல வார்த்தை ஜாலம் சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ஸ், ஏற்கனவே என்னைபோல அழகா இருக்கருவங்களுக்கு இதெல்லாம் வேண்டாம் மாப்ஸ்.
என்னா ஆளையே நம்ப பக்கம் காணாம்?
இந்த சாப்ட்வேர் மூலம் முதலிலேயே உங்களை அழகாக்கிகொண்டு இந்தமாதிரி கமெண்ட் வேறா..? வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Shafiq கூறியது...
நன்றி,

ஆனால் இயற்க்கை காட்சிகள் சரியாக வரவில்லை//

இது முகத்திற்கு மட்டும் குறிப்பாக தயாரிக்கப்பட்டது...இயற்கை காட்சி இய்ற்கையாகவே இருக்கட்டும். தங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

க.பாலாசி கூறியது...
//உண்மையான உருவங்ளை அழகாக்க முடியாது//

என்னா வில்லத்தனம்.. (ஹி..ஹி...)

மிக்க நன்றிங்க வேலன். இந்தமாதிரி ஒரு மென்பொருளத்தான் நான் தேடிகிட்டிருந்தேன்...//

நன்றி ஈரோடு பாலாசி சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
{அழகைப்பற்றி சொன்னவுடன் ஜோக் ஒன்று ஞாபகம் வந்தது}

காலேஜ் படிக்கும் பையனும் பொன்னும் பேசிக்கொள்கிறார்கள்...

பையன்: பொன்னுங்க உங்களுக்கு மட்டும் ஏன் அதிகமாக அழகுசாதனபொருட்கள்,மேக்கப் பொருட்கள் இருக்கு, பையன்களுக்கு இல்லை ஏன் தெரியுமா?

பொன்னு: தெரியல ஏன்...

பையன்: ஏன்னா நாங்களலெல்லாம் இயற்கையிலெயே அழகானவர்கள்...//

அட அப்படியா...! சொல்லவேயில்லே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பயனுள்ளதாகவுள்ளது நண்பரே//

வாங்க சார.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

sarusriraj கூறியது...
பயனுள்ள குறிப்புகள்//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
மிக்க நன்றி சகோ!! இதே போல் நானும் சமையல் போட்டோகளை செய்யலாம் தானே சகோ??//

தாராளமாக செய்யலாம் சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சுமதி கூறியது...
ஹாய் நண்பா,

ரொம்ப நல்லாயிருக்கு. ஆன்ன சிலது தான் சரியா வரலை. ஆனாலும் ஒரு நல்ல மென்பொருள் தான்.நன்றி.

//நண்பா, ஏற்கனவே என்னைபோல அழகா இருக்கருவங்களுக்கு இதெல்லாம் வேண்டாம் னு தோனுதோஓஓஓஓ.//
ஹா ஹா ஹா..... இது கூட நல்லாத் தான் இருக்கு.//

நன்றி நண்பா..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

Anonymous said...

உங்கள் போட்டோஷாப் படங்கள் நன்றாக உள்ளன. நான் இதுவரை சுமார் 1000 ( ஆமாம் ஆயிரம்) டியுட்டோரியல் படித்து இருக்கிறேன். விடியோ பாடங்களையும் பார்த்து இருக்கிறேன். MASKING பற்றி முழுமையாக புரிந்துகொள்ள முடிவில்லை அது பற்றி விளக்குங்களேன்.
-பி.எஸ்.ஆர்.

பத்மா said...

நான் தான் லேட் .மிக்க நன்றி ட்ரை பண்றேன் நிச்சயமா.

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றிங்க வேலன்... முயற்ச்சித்து பார்க்கின்றேன்

sha169 said...

அன்பரே கடந்த சில நாட்களுக்கு முன்பு உங்கள் படைப்புகளை பார்த்தேன் நன்றாக இருந்தது பயனுள்ளதாகவும் இருந்தது தற்போது உங்கள் மூலமாக போடோஷாப் பயின்று வருகிறேன். என்னிடமுள்ள AGE CALCULATION என்ற படைப்பை அனுப்பி வைக்கிறேன் இதை பயனாளர்களுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி..காரை ஹமீது

Related Posts Plugin for WordPress, Blogger...