நாமே பாடலை பாடி நாமே நமது பாடலை கேட்பது தனி இன்பம். கம்யுட்டரிலேயே பதிவு செய்ய வசதி உள்ளது. இருப்பினும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே அது பதிவு ஆகும். மேற்கொண்டு பதிவு செய்ய அதை நாம் நீடிக்க வேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு அந்த குறையை போக்குகின்றது. 400 கே.பி. (அதாவது 1 எம்.பி.யில் பாதி) அளவே உள்ள இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்கள் கம்யுட்டரில் நிறுவிய பின உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மேற்புறம் உங்களுக்கு Input என்கின்ற பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள் உங்களுடைய Device தேர்வு செய்து கொண்டு பின்னர் நீங்கள் எதிலிருந்து பாடல்கள் பதிவு செய்ய போகின்றீர்களோ அதை தேர்ந்தெடுங்கள்.அடுத்து உங்களுக்கு பாடல் எந்த பார்மெட்டில் வேண்டுமோ Output மூலம் அதனை தேர்வு செய்யுங்கள்.
இதிலுள்ள செட்டிங்ஸ் மூலம் தேவையான செட்டிங்ஸ் அமைத்துக்கொள்ளுங்கள். சிடி பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது. கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
எல்லாம் தயார் செய்துவிட்டீர்களா. இப்போது இதில் உள்ள ரெகார்ட் பட்டனை அழுத்துங்கள்.ஆடியோ பதிவாகும்.
தேவையானது பதிவானதும் ஸ்டாப் பட்ட ன் மூலம் நிறுத்துங்கள். இப்போது நீங்க்ள சேமித்துள்ள போல்டரில் சென்று பார்த்தால் பாடல் ப்திவாகிஇருக்கும்.
புதியவர்களுக்கு என்று இதற்கு முன் 19-02-2009 அன்று கம்யுட்டரில் ஆடியோ பதிவு செய்ய என்கின்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன். விவரமாக அதனை தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.ஆடியோ கேசட்டிலிருந்து பாடல்களை கம்யுட்டருக்கு மாற்ற என்ன செய்யவேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அந்த பதிவினை போடும் முன் இந்த சாப்ட்வேரை பயன்படுத்தினால் அந்த பதிவிற்கு சுலபமாக இருக்கும் என்றே இதனை பதிவிடுகின்றேன். ஆடியோ கேசட்டிலிருந்து பாடலை கம்யுட்டருக்கு எவ்வாறு பதிவு செய்வது என்று பின்னர் பதிவிடுகின்றேன்.(புதியவர்களுக்காகவே இந்த பதிவு) பதிவினை பாருங்கள் கருததுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு- ஆபாச தளங்களில் இருந்து குழந்தைகளை காக்க பதிவை யுத்புல் விகடனில் குட்பிளாக் பகுதியில் வெளியிட்ட விகடனாருக்கு நன்றி.நாளை ஞாயிறு கடை உண்டு. நாளை விளையாட்டை பற்றிய பதிவு .இது கொஞ்சம் பெரியவர்கள் அடிக்கடி விளையாடும் விளையாட்டு. அந்த விளையாட்டு பதிவினை காண நாளை வரை கொஞ்சம் பொருத்திருங்கள்....!
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
16 comments:
நல்ல பயனுள்ள பதிவு அண்ணா...
நான் எதிர்பார்த்த பதிவு வழக்கம்போலவே அசத்தல் வேலன் சார்...
நன்றி சார்...
very nice post and an useful one too.
பயனுள்ள பதிவு நண்பரே!
ல பயனுள்ள பதிவு அண்ணா...
எப்பவும் போல கலக்கல். நாளைக்கும் கடை இருக்கா அடி தூள்.
தேவையான பதிவு, நன்றி சார்!
திரு .வேலன் சார் ,வணக்கம் ,
ஒரு video-வில் scrolling title கொண்டு வருவது எப்படி ?எனது முகவரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன் .தங்களது மின்னஞ்சல் முகவரி தெரிவிக்கவும் .
நன்றி,.
வெறும்பய கூறியது...
நல்ல பயனுள்ள பதிவு அண்ணா.//
நன்றி நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்
மாணவன் கூறியது...
நான் எதிர்பார்த்த பதிவு வழக்கம்போலவே அசத்தல் வேலன் சார்...
நன்றி சார்..//
நன்ற சிம்பு சார்...
தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.
Chitra கூறியது...
very nice post and an useful one too.ஃ
நன்றி சகோதரி
வாழ்க வளமுடன்.
வேலன்.
velji கூறியது...
பயனுள்ள பதிவு நண்பரே!
நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சே.குமார் கூறியது...
பயனுள்ள பதிவு அண்ணா.
நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
சசிகுமார் கூறியது...
எப்பவும் போல கலக்கல். நாளைக்கும் கடை இருக்கா அடி தூள்ஃஃ
வாங்க சசி...நாளைக்கு கடைக்கு அவசியம் வந்து செல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
தேவையான பதிவு, நன்றி சார்!ஃ
நன்றி ராமசாமி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்.
வேலன்.
sakthi கூறியது...
திரு .வேலன் சார் ,வணக்கம் ,
ஒரு video-வில் scrolling title கொண்டு வருவது எப்படி ?எனது முகவரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன் .தங்களது மின்னஞ்சல் முகவரி தெரிவிக்கவும் .
நன்றிஃ
உங்களது இ-மெயில் முகவரி தெரிவிக்கமால் முகவரிக்கு அனுப்ப சொன்னால்...,!நீங்கள் சொன்ன வேலையை அடோப் ப்ரிமியரில் செய்யலாம். விண்டோ மூவி மேக்கரிலும் செய்யலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.
Post a Comment