நமது போட்டோவில் காலண்டர் தயாரிக்கும் முறை



புதுவருடம் வர போகின்றது. தினசரி காலண்டர், வார காலண்டர், மாத

காலண்டர் என எவை எவை கிடைக்கப்போகின்றதோ அவற்றை வாங்கி சுவரில்

மாட்டிக்கொள்வது நமது வழக்கம். இனி காலண்டருக்காக நீங்கள் அலைய

வேண்டாம். நமது காலண்டரை நமதுகம்யூட்டரிலேயேஅச்சடித்துக்கொள்ளலாம்.

நமது போட்டோவையோ அல்லது நமது வேண்டியவர்களின் போட்டோவோ

அச்சடித்து அவர்களுக்கு பரிசளிக்கலாம்.

இனி நீங்கள் விரும்பும் புகைப்படத்தை காலண்டராக அச்சடிக்கும் முறையை

காணலாம்.

1.இந்த சாப்ட்வேரை இயக்கினால் Page,Picture,Date,Font & Help என ஐந்து

வகையான டேபுகளை காணலாம்.

2. பிரிண்டர் மற்றும் காகிதத்தின் அளவை தேர்ந்தெடுக்கவும்.

3.காலண்டரின் உள்ளே வரும் குறுக்கு நெடுக்கு கோடுகளை

தேர்ந்தெடுக்கவும்.

4.Pages டேபை பயன்படுத்தவும்.

5.படத்தை தேர்வு செய்ய. வெட்ட,சுழற்ற Picture tap கிளிக் செய்யவும்.

6.காலண்டரில் வரும் கிழமைகள் ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை

வேண்டுமா அல்லது திங்கள் கிழமை முதல் ஞாயிறு வரை வேண்டுமா என

தேர்வு செய்ய Date டேபை தேர்வு செய்யவும்.

7.காலண்டரில் வரும் எழுத்துகளின் அளவு. தோற்றம் அளவை தேர்ந்தேடுக்க

Font டேபை தேர்வு செய்யவும்.

8.அனைத்தையும் தேர்வு செய்துPrint Preview பார்த்து Print Ok கொடுக்கவும்.

நீங்கள் சாப்ட்வேர் தயாரிக்கும் வெப்தளம்:- http://www.bento.ad.jp/

முயற்சி செய்யுங்கள் . புது வருட வாழ்த்துக்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

நந்தவனத்து ஆண்டி said...

Its not in english language :(

what can we do ?

யூர்கன் க்ருகியர் said...

ஜப்பான் மொழி புரியவில்லை...எனினும் நீங்கள் அட்டாச் செய்திருந்த படத்தில் இருந்த வார்த்தைகளில் இருந்து கூகிள் சர்ச் செய்ததில் இந்த லிங்க் கிடைத்தது.
நம்பலாமா?

http://www.freeware-guide.com/rareware/PhotoPrintCalendar.html

Tech Shankar said...

சப்பானிய மொழியில் இருந்து ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்திய அருமை நண்பர் வாழ்க.

வேர்ட் வெரிஃபிகேசன் (சொல் சரிபார்த்தலை) நீக்கியதற்கு நன்றிகள்.

Tech Shankar said...

மேலும் comment moderation ஐ நிறுவவும்.

மறுமொழியானது உங்களுக்கு மின்னஞ்சலில் வரும். அதன் பிறகு அதை நீங்கள் பார்த்து, ஏற்புடையதாக இருந்தால் மட்டும் நீங்கள் அதை வலைப்பூவில் தோன்றச் செய்யலாம்.

இல்லாவிடில் நிராகரிக்கலாம்.

ஏகப்பட்ட SPAM comments வந்தது. பார்த்தேன் - comment moderation போட்ட பிறகு Spam comments குறைந்துவிட்டது.

Sundhar Raman Rajagopalan said...

Thanks for introducing a Software.Immediately on Installing the Software, I get a message like this:"The instruction cannot be executed for lack of resource.Please close any windows not in use..."
Please clarify.
அன்புடன்,
R.Sundhar Raman

sathananda said...

வணக்கம் நன்பரே,
"நமது போட்டோவில் காலண்டர் தயாரிக்கும் முறை" பதிப்பைப் பார்த்தேன்.interesting.ஆனால் நீங்கள் கொடுத்துள்ள சுட்டி புரியாத மொழியில் உள்ளது. உதவமுடியுமா?
sathananada.

ராஜ நடராஜன் said...

பெண்டோ போவதற்கு முன் உங்களுக்கு ஒரு வாழ்த்தும் நன்றியும்.

ராஜ நடராஜன் said...
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...

Sorry,Same comment repeated again.

ராஜ நடராஜன் said...

பெண்டோ = ஜப்பான்.

Related Posts Plugin for WordPress, Blogger...