வேலன்:-வீடியோவிலிருந்து புகைப்படம் எடுக்க








முந்தைய பதிவில் நண்பர் ஓருவர் வீடியோவிலிருந்து


படம் எடுப்பது பற்றி கேட்டிருந்தார் .அவருக்கான பதிவு இது.





2009kr கூறியது...


useful information. Thanks
நண்பரே, video விலிருக்கும் ஒரு சாட் (shot) jpge பைல் ஆக மாற்றுவது எப்படி என்று சொல்லிகுடுங்களேன். நன்றி



நம்மிடம் வீடியோ படங்கள் இருக்கும் . அதில் உள்ள குறிப்பிட்ட
நடிகையோ - நடிகரோ வரும் ஸ்டில் அருமையாக இருக்கும்.
அந்த குறிப்பிட்ட ப்ரேம் வரும் படத்தை நாம் புகைப்படமாக
எடுத்து நமது கணிணியில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
முதலில் இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு
கிளிக் செய்யவும்.இது 5 எம்.பி. அளவிலே உள்ள சாப்ட்வேர்தான்.
இதை ரன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்
ஆகும்.
இதில் உள்ள Source கிளிக் செய்து உங்கள் கணிணியில் உள்ள
மூவி-வீடியோ படத்தை தேர்வு செய்யுங்கள்.
கீழ்கண்டவாறு படம் வரும். இதில் உங்களுக்கு பிடித்த இடம்
வர இதில் உள்ள ஸ்லைடரை மெதுவாக நகர்த்துங்கள்.குறிப்பிட்ட
இடம் வந்ததும் இதில் உள்ள அம்புக்குறியை கிளிக் செய்ய
உங்களுக்கு படம் ஆனது ப்ரேம் பை ப்ரேம் நகர ஆரம்பிக்கும்.
தேவையான இடம் வந்ததும் நகர்த்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
இதில் நமது பெயரையும் பெயர் வரும் இடத்தையும் நாம்
தேர்வு செய்யலாம்.Embeded Textஎன்கின்ற இடத்தில் Fx Frame Caputre
என இருக்கும். அதை எடுத்துவிட்டு நீங்கள் விரும்பும் பெயரை
தட்டச்சு செய்யலாம். நான் Velang.blogspot.com என்கின்ற பெயரை
தட்டச்சு செய்துள்ளேன். பெயர் வரும் இடத்தையும் நாம்
முடிவுசெய்யலாம். இதில் உள்ள Left மற்றும் Top-ல் அளவினை
குறிக்க படத்தில் நமது பெயர் அந்த இடத்தில் வரும். மேலும்
Font -Size - Style - Color-ஆகியவற்றையும் நாம் தேர்வு செய்யலாம்.
இறுதியாக Capture என கொடுக்க சேமிக்கும் இடத்தை தேர்வு
செய்து படம் எந்த பார்மெட்டில் வேண்டும் என்பதையும் தேர்வு
செய்து இறுதியில் ஓ.கே. கொடுங்கள். உங்களுக்கு படம் ரெடி.
அசின் ரசிகர்களு்க்காக தேர்வு செய்துள்ள படம்.
உங்களுக்காக பாவனா படம் சில காட்சிகள் கீழே:-










உங்களுக்குமொத்த வீடியோபடத்திலிருந்து புகைப்படம் தேர்வு செய்ய
சிரமமாக இருந்தால் குறிப்பிட்ட காட்சிவரை டிவிடி கட்டர் அல்லது விசிடி
கட்டர் உபயோகித்து அதிலிருந்து படம் தேர்வு செய்துக்கொள்ளுங்கள்.


நண்பர் சிங்கப்பூர் ந.முத்துக்குமார் நமக்காக நமது பதிவுகளை
தொகுத்து பி.டி.எப். பைலாக இணைத்துள்ளார். முந்தைய பதிவு
தேவைப்படுபவர்கள் இங்குகிளிக் -1, & கிளிக்-2,
செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
நமது அனைவர் சார்பாகஅவருக்கு மனமார்ந்த நன்றிகள்.

பதிவினை பாருங்கள்.கருத்துக்களை சொல்லுங்கள்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்.


வாழ்க வளமுடன்,

வேலன்.



இன்றைய PSD பைலுக்கான டிசைன் கீழே:-

டிசைன் செய்தபின் வந்த படம் கீ்ழே:-

இதை பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கு
கிளிக்செய்யவும்.

இதுவரை வீடியோவிலிருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள்:-

web counter

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

8 comments:

ஓஜஸ் said...

//அசின் ரசிகர்களு்க்காக தேர்வு செய்துள்ள படம்.

Thanks boss

Muthu Kumar N said...

Dear Velan Sir,

Good posting with small file.

Keep it up, your posting very helpful for everybody.

Best wishes
Muthu Kumar.N

பொன் மாலை பொழுது said...

மாப்ள வேலனிடமிருந்து எனக்கு பிடித்த மேலும் ஒரு பதிவு, மிக்க நன்றி மாப்ள !!

Malu said...

Superb!!! Very Useful. Thank you Velan Sir.

வேலன். said...

Padmanaban கூறியது...
//அசின் ரசிகர்களு்க்காக தேர்வு செய்துள்ள படம்.

Thanks boss//

நன்றி பத்மநாபன் அவர்களே...(நீங்கள் அசின் ரசிகரா..?)

வாழ்கவளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Good posting with small file.

Keep it up, your posting very helpful for everybody.

Best wishes
Muthu Kumar.N//

நன்றி நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ள வேலனிடமிருந்து எனக்கு பிடித்த மேலும் ஒரு பதிவு, மிக்க நன்றி மாப்ள !!//
ஐயோ...மாம்ஸ்..நான் மாப்ளனு சொன்னால் உருட்டுக்கட்டை பின்னாளில் இருந்துவரும்....மாப்ளை அவர் ஒருவரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Malu கூறியது...
Superb!!! Very Useful. Thank you Velan Sir.ஃஃ

நன்றி மாலு அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...