வேலன்:-போட்டோஷாப் பிரஷ் டூலில் நமது பெயர்கொண்டுவர

 போட்டோஷாப்பில் இன்று பிரஷ் டூல் பற்றி பார்க்கலாம். இது டூல்பாரில் 8 ஆவதாக உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

இதன் மூலம் என்ன செய்யலாம். கோடு போடலாம். ரோடு போடலாம். உருவத்தை மறைக்கலாம். உருவத்திற்கு மெல்லிய மீசை போடலாம். சரி இதை எப்படி கொண்டுவருவது. நீங்கள் இந்த டூலை கிளிக் செய்தபின்னர் மேலே உங்களுக்கு மெனு பாருக்கு கீழே பிரஷ் படமும் அதை அடுத்து ஆங்கிலத்தில் Brush: என்று போட்டு அதற்கு பக்கத்தில் ஒரு சின்ன கீழு்நோக்கிய அம்புக்குறியும் இருக்கும். அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் 1 முதல் 13 வரையிலும் மெல்லியதாகவும் தடிமனாகவும் விதவிதமான கோடுகள் இருக்கும். தேவையான கோட்டினை கிளிக் செய்து தேவையான படத்தில் வரையவும். அதைப்போல் Master Diameter கீழ் உள்ள ஸ்லைடரை நகர்த்த உங்களுக்கு கோட்டின் சைஸ் பெரியதாகும். கீழே உள்ள படத்தினை பாருங்கள். விதவிதமான சைஸ்களில் கோடு போட்டுள்ளேன்.

இந்த டூல் கொண்டு வேறு என்னவெல்லாம் செய்யலாம்.நமது பெயரையே பிரஷ்டூலாக கொண்டுவரலாம். அதனால் என்ன பயன்...அவசரத்திற்கு இந்த டூல்மூலம் உடனடியாக பெயரை பதித்துவிடலாம்.அதை எப்படி கொண்டுவருவது? முதலில் உங்கள் பெயரை தமிழிலோ ஆங்கிலத்திலோ தட்டச்சு செய்து கொள்ளுங்கள்.(முந்தைய பாடங்களில் பெயரை தட்டச்சு செய்வதை பதிவிட்டுள்ளேன்)கீழே உள்ள படத்தினை பாருங்கள்.


ஆங்கிலத்தில் எனது பெயரை தட்டச்சு செய்துள்ளேன். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
 பின்னர் Edit மெனு கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Define Brush Preset கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
O.K. கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் பெயர் பிரஷ்டூலாகசெட்டாகிவிட்டது.சரி - இந்த டூலை எப்படி உபயோகிப்பது. நீங்கள் உபயோகிக்கும் படம் அல்லது புதிய விண்டோவினை திறந்து கொள்ளுங்கள்.பின்னர் பிரஷ் டூல் கிளிக்செய்யுங்கள்.மெனுபாரின் கீழே உள்ள ஆங்கில எழுத்து பிரஷ் பக்கத்தில் உள்ள கீழ் நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு விண்டோ ஓப்பன ஆகும். அதில் உள்ள ஸ்ரால் பாரினை கீழே நகர்த்த கடைசியில் உங்கள் பெயருடன் கோடு இருக்கும் . அதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் எந்த இடத்தில் உங்கள் பெயர் வர விரும்புகின்றீர்களோ அந்த இடத்தில் வைத்து ஒரே ஒரு கிளிக்செய்யுங்கள். அவ்வளவுதான் உங்கள் பெயர் வந்துவிட்டது. நீங்கள்Forgroundcolor கலராக எதை வைத்துள்ளீர்களோ அந்த கலருடன் பெயர் வந்துவிடும். உங்களுக்கு உங்கள் பெயர் திக்காக வரவேண்டுமானால் மவுஸால் தொடர்ந்து அழுத்துங்கள். அதைப்போல் உங்கள் எழுத்தின் அளவினை அதிகப்படுத்தவிரும்பினால் Master Diameter -ல் உள்ள ஸ்லைடை நகர்த்துங்கள். அவ்வளவுதான் உங்கள் பெயர் பெரிதாக வரும். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
உங்கள் பெயரில் பிரஷ்டூல் கொண்டுவருவதை பற்றி தெரிந்துகொண்டோம் அல்லவா..அடுத்த பதிவில் நமது புகைப்படத்தை பிரஷ் டூலாக கொண்டுவருவதைப்பற்றி பார்க்கலாம். அதைப்போலவே விதவிதமான பிரஷ்டூல்கள் பற்றியும் அதை எப்படி போட்டோஷாப்பில் இணைப்பது என்றும் பார்க்கலாம். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ம்...கண்டுக்காதீங்க..சமையல் பதிவை பார்த்து வீட்டில்
 செய்துபார்த்தேன்.அதுஎன்னவோதெரியலை...
இப்படியாகிவிட்டது...யாரிடமும் இதை சொல்லாதீங்க...!
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
 டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

31 comments:

ரமேஷ் said...

மிகவும் அருமை நண்பரே . உங்களுடைய பதிவை பார்த்தே போட்டோஷாப் கற்றுக்கொண்டிருக்கிறேன்

வாழ்த்துக்கள்

வேலன். said...

ரமேஷ் கூறியது...
மிகவும் அருமை நண்பரே . உங்களுடைய பதிவை பார்த்தே போட்டோஷாப் கற்றுக்கொண்டிருக்கிறேன்

வாழ்த்துக்கள்//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமேஷ் அவர்களே...வாழ்க வளமுடன்:வேலன்.

Anonymous said...

பகிர்வுக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்.

பொன் மாலை பொழுது said...

நல்லா கீது மாப்பு

Athiban said...

மிகவும் அருமை, அடுத்த பதிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப உபயோகமாக இருக்கு வேலன் சார், போட்டோஷாப் மூலமா எப்படி கோலம் போடுவது என்று தெரிந்தால் சொல்லவும்

mdniyaz said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
போட்டோ ஷாப்..
மிகவும் டாப்..
கற்றுக்கொடுங்கள்..
கற்றுக்கொள்ளுகின்றேன்.
வாழ்த்துகின்றேன்...
வாங்கிகொள்ளுங்கள்

என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

ஜெய்லானி said...

போட்டோஷாப் பற்றி நிறைய போடுங்க.
ரொம்ப நல்லா இருக்கு.

Chitra said...

உங்கள் பேர் சொல்லும் பதிவு. வாழ்த்துக்கள்! :-)

வேலன். said...

பெயரில்லா கூறியது...
பகிர்வுக்கு நன்றிங்க.

அன்புடன் மஜீத்ஃஃ//

நன்றி மஜீத் சார்...நீண்ட நாட்களுக்குபின் வந்துள்ளீர்கள். வருகைக்கும் கருத்துக்கும நன்றி வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
நல்லா கீது மாப்புஃ//

நன்றி மாம்ஸ்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

தமிழ் மகன் கூறியது...
மிகவும் அருமை, அடுத்த பதிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.//

தஙகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்மகன் சார்...வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

sarusriraj கூறியது...
ரொம்ப உபயோகமாக இருக்கு வேலன் சார், போட்டோஷாப் மூலமா எப்படி கோலம் போடுவது என்று தெரிந்தால் சொல்லவும்ஃ//

புதிதாக புள்ளி வைத்துபொட முடியாது. ஆனால் போட்டுவிட்ட கோலத்தை வேண்டிய இடங்களில் நிறைய எண்ணிக்கையில் வைத்துக்கொள்ளலாம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

mdniyaz கூறியது...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
போட்டோ ஷாப்..
மிகவும் டாப்..
கற்றுக்கொடுங்கள்..
கற்றுக்கொள்ளுகின்றேன்.
வாழ்த்துகின்றேன்...
வாங்கிகொள்ளுங்கள்

என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூ//

வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும நன்றி முஹம்மது நியாஜ் அவர்களே...வாழ்க வளமுடன்: வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
போட்டோஷாப் பற்றி நிறைய போடுங்க.
ரொம்ப நல்லா இருக்குஃ//

நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன்்.வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
உங்கள் பேர் சொல்லும் பதிவு. வாழ்த்துக்கள்! :-)//

நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

Jaleela Kamal said...

இது கண்டிப்பா சித்ரா சொன்னது போல் உங்கள் பெயர் சொல்லும் பதிவு தான்.

நல்ல பகிர்வு

Anonymous said...

If you are not starting a series on gimp i am going to take all the hits coming from gimp.

Anonymous said...

i am thinking of starting a tutorial series on gimp.

முஹம்மது மபாஸ் said...

Velan,,Sir.. enakku computeril tamil ezhuthuvathu eppadi endru theriyathu.. athanaal Englishil tamil ezhthukiren... intha pathivu ennai pondra niraya perukku payanullathaha irukkumendru nambukiren... nandri..

Mohan said...

நல்ல பதிவு நண்பரே! வாழ்த்துக்கள்!!

சசிகுமார் said...

நல்ல தகவல் நண்பரே, இனிமேல் என்னுடைய போட்டோ மேல என் பேர போட்டுக்குவேன்

வேலன். said...

Jaleela கூறியது...
இது கண்டிப்பா சித்ரா சொன்னது போல் உங்கள் பெயர் சொல்லும் பதிவு தான்.

நல்ல பகிர்வு//

வருகைக்கும் கருத்துக்கும் நனறி சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

shirdi.saidasan@gmail.com கூறியது...
If you are not starting a series on gimp i am going to take all the hits coming from gimp.//
shirdi.saidasan@gmail.com கூறியது...
i am thinking of starting a tutorial series on gimp.//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

mohammed கூறியது...
Velan,,Sir.. enakku computeril tamil ezhuthuvathu eppadi endru theriyathu.. athanaal Englishil tamil ezhthukiren... intha pathivu ennai pondra niraya perukku payanullathaha irukkumendru nambukiren... nandri..//
முஹமது சார்..உங்கள் இ-மெயில் அனுப்பி வைக்கவும்.விவரங்கள் அனுப்பி வைக்கின்றேன். தனியே பதிவையும் போடுகின்றேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Mohan கூறியது...
நல்ல பதிவு நண்பரே! வாழ்த்துக்கள்!ஃ//

நன்றி மோகன் சார்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
நல்ல தகவல் நண்பரே, இனிமேல் என்னுடைய போட்டோ மேல என் பேர போட்டுக்குவேன்ஃ//

நன்றி சசிகுமார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன் வேலன்.

சிவகுமார் சுப்புராமன் said...

உங்களின் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது வேலன். எங்கள் வலைத்தள நண்பர்களுக்கும் தங்களின் திறமையை அறிமுகப்படுத்துங்கள்!

என்றும் அன்புடன்
சிவா
www.eegarai.net

ஆ.ஞானசேகரன் said...

மிக்க நன்றி நண்பா

வேலன். said...

சிவகுமார் கூறியது...
உங்களின் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது வேலன். எங்கள் வலைத்தள நண்பர்களுக்கும் தங்களின் திறமையை அறிமுகப்படுத்துங்கள்!

என்றும் அன்புடன்
சிவா
www.eegarai.net//
தங்கள் வலைதளத்தில ஐக்கியமாகிவிட்டேன் நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
மிக்க நன்றி நண்பா//

நன்றி ஞானசேகரன் சார்...வாழ்க வளமுடன்.வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...