வேலன்-பைல்களின் எக்ஸ்டென்ஷன்கள் அறிந்து கொள்ள

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

நம்மிடம் போட்டோக்கள்,வேர்ட்,எக்ஸெல்.சாப்ட்வேர்கள்.ஸிப் பைல்கள் என நிறைய பைல்கள் இருக்கும். ஆனால் அது எந்த வகையை சேர்ந்தது என அதன் அருகில் கிளிக் செய்து பார்த்தால்தான் தெரியும்.கீழே உள்ள புகைப்படங்களை பாருங்கள்.
பெயர் தெரியுமே தவிர அது எந்த வகை புகைப்படம் - JPEG-ஆ. PSD-ஆ. GIF-ஆ என தெரியாது.(இதுபோலவே பிற பைல்வகைகளுக்கும்) இது எந்த வகையை சேர்ந்தது என சுலபமாக அறிந்துகொள்ள ஒரு சின்ன டிக் மார்க் செய்தால் போதும். அனைத்து பைல்வகைகளையும் நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.
Start -ரைட் கிளிக் செய்து Explore ஓப்பன் செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வருகின்ற விண்டோவில் Tools - Folder Options கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதில் இரண்டாவதாக உள்ள வியு டேபில் கிளிக் செய்யுங்கள். அதில் உள்ள
Hide extentions for known file types  பாக்ஸ் எதிரில் உள்ள கட்டத்தில் உள்ள டிக் மார்க் கிளிக் செய்யுங்கள்.Apply -Ok- கொடுத்துவிட்டு வெளியே வாருங்கள். இப்போது உங்கள் போல்டரில் சென்று பாருங்கள்.பைல்கள் அதன் எக்ஸ்டென்ஷனுடன் காணப்படும்.உதாரணத்திற்கு கீழே உள்ள படத்தை பாருங்கள்.
 ஒவ்வொரு படமும் அதன் எக்ஸென்சன் பைலுடன் காணப்படும்.இதுபோலவே எந்த வகை பைலையும் நாம் சுலபமாக அதன் பைல்  வகையை தெரிந்துகொள்ளலாம். இந்த வசதி தேவையில்லையென்றால் மீண்டும் வந்த வழியே சென்று டிக் அடையாளம் வைத்துவிட்டு வந்து விடுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
என் இனிய இல்லம் சிநேகிதி ஸ்வீட்டோட விருதும் கொடுத்துள்ளார்கள். வாங்க...நாம்போய் எடுத்துக்கொள்ளலாம்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

14 comments:

Unknown said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

மாணவன் said...

வேலன் சார்,

வழக்கம்போல் பதிவும் அருமை படங்களும் அழகு....

பதிவுலகில் தனக்கே உரிய முத்திரையை பதித்துக்கொண்டிருக்கும் வேலன் சார் உங்களுக்கும் மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

நன்றி நன்றி.....

Jey said...

நன்றி. புதுதகவல். என் சிஸ்டத்தில் பயன்படுத்தி விட்டேன்:)

பொன் மாலை பொழுது said...

வாழ்த்துக்கள் மாப்ஸ்

எஸ்.கே said...

மிக்க நன்றி எனக்கு பயனுள்ளதாக இருந்தது.

அன்பு பதிவரே என் புதிய முயற்சியை பார்த்து கருத்து சொல்லுங்கள்.
தங்களை போன்ற வல்லுநர்களின் கருத்தை நான் பெரிதும் விரும்புகிறேன்.
manamplus
நன்றி

அன்புடன்
எஸ்.கே

Unknown said...

என்னுடைய ப்ளாக்கில் ப்ளோக்கை போஸ்ட்
செய்தால் எழுத்து 10 C.M. இடைவெளியில் தெரிகிறது.
எப்படி சரி செய்வது? உதவி செயுங்கள்.
email : pashameed@gmail.com

http://rkguru.blogspot.com/ said...

Good post.....

வேலன். said...

கலாநேசன் கூறியது...
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
வேலன் சார்,

வழக்கம்போல் பதிவும் அருமை படங்களும் அழகு....

பதிவுலகில் தனக்கே உரிய முத்திரையை பதித்துக்கொண்டிருக்கும் வேலன் சார் உங்களுக்கும் மற்றும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

நன்றி நன்றி.//

நன்றி சிம்பு சார்..
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Jey கூறியது...
நன்றி. புதுதகவல். என் சிஸ்டத்தில் பயன்படுத்தி விட்டேன்:)//

நன்றி ஜே சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
வாழ்த்துக்கள் மாப்ஸ்//

நன்றி மாம்ஸ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
மிக்க நன்றி எனக்கு பயனுள்ளதாக இருந்தது.

அன்பு பதிவரே என் புதிய முயற்சியை பார்த்து கருத்து சொல்லுங்கள்.
தங்களை போன்ற வல்லுநர்களின் கருத்தை நான் பெரிதும் விரும்புகிறேன்.
manamplus
நன்றி

அன்புடன்
எஸ்.க//

வந்துவிட்டேன் நண் பரே..அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

pashameed கூறியது...
என்னுடைய ப்ளாக்கில் ப்ளோக்கை போஸ்ட்
செய்தால் எழுத்து 10 C.M. இடைவெளியில் தெரிகிறது.
எப்படி சரி செய்வது? உதவி செயுங்கள்.
email : pashameed@gmail.com//

மெயில் அனுப்பு கின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

rk guru கூறியது...
Good post.....//

நன்றி குரு சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...