திருமணம் முதல் இதர நிகழ்ச்சிகள் வரை நாம் புகைப்படங்கள் நிறைய எடுப்போம். அனைத்தையும் பிரிண்ட்போட்டால் அவ்வளவுதான். நமது கஜானா காலியாகிவிடும். பிரிண்ட் போட்டுவிடடு பார்க்கும்போதுதான் அடடா இதை நாம் பிரிண்ட்போடாமலே இருந்திருக்கலாமே என யோசிப்போம். இந்த சங்கடங்களை தவிர்க்க இந்த ஆக்சன் டூல் நமக்கு உதவுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
வழக்கப்படி இதனை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்துகொள்ளவும். பின்னர் நீங்கள் எடுத்த முதல் 25 புகைப்படங்களை தேர்வு செய்துகொள்ளுங்கள். ஆக்சன் டூலில் இந்த ஆக்சனை கிளிக் செய்யுங்கள்.சில நிமிட காத்திருப்புக்கு பின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.
அதில் தேவையான புகைப்படததை மார்க்செய்துகொண்டு அதை மட்டும் பிரிண்ட் போடலாம்.போட்டோ ஸடுடியோ வைத்திருப்பவர்கள் இதுபோல் வாடிக்கையாளர்களுக்கு ப்ரிவியு எடுத்துகொடுத்து பின்னர் தேவைப்பட்டதை பிரிண்ட் எடுத்து கொடுக்கலாம்.அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் தங்களிடம் உள்ள புகைப்படத்தை இதுபோல சிறியதாக போட்டு வீட்டில் காண்பித்து தேவையானதை பெரியதாக போட்டுக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
இது ரம்ஸான் ramzon நோன்பு மாதம். இஸ்லாமிய சகோதர - சகோதரிகளுக்காக நான் ஏற்கனவே தொழுகைக்கான நேரம் செட் செய்யும் சாப்ட்வேரை பதிவிட்டிருந்தேன்.இதுவரை அந்த சாப்ட்வேரை சுமார் 1200 பேர் பதிவிறக்கி பயன்படுத்தி உள்ளார்கள். இப்போது புதியதாக பதிவிற்கு வந்துள்ள நண்பர்களுக்கு அந்த பதிவைப்பற்றி தெரியாது்.அந்த பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
வேலன்-போட்டோஷாப் -புகைப்படங்கள் மொத்தமாக பிரிண்ட் செய்ய
Posted by
வேலன்.
on Thursday, August 19, 2010
8 comments:
வழக்கம்போல் அருமையான தகவல் வேலன்.
தொழுகைக்கான நேரம் செட் செய்யும் சாப்ட்வேர் அருமை. இசுலாமிய சகோதரர்களுக்கு இது போன்ற சாப்ட்வேர் இருந்தால் போடவும்.
சார், உங்களைப்பார்த்து பதிவுலகத்துக்கு வந்தவன் நான். பத்திரிகைகளில் பிரபலமான என்னால் பதிவுலகில் பிரபமாக முடியவில்லை. நான்கைந்து முறை முறச்சி செய்து தோற்றுப் போய் இப்போது என் நண்பன் சி.பி. செந்தில்குமாரின் தூண்டுதல் பேரில் மீண்டும் பதிவுப் போட வந்துள்ளேன். என் பதிவைப் பார்த்து பிடித்திருந்தால் மேற்கொண்டு நான் என்னென்ன செய்யவேண்டும் என்று அறிவுரைகளைச் சொன்னால் நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டவானாய் இருப்பேன் நன்றி!
http://poonkadir.blogspot.com
Jey கூறியது...
வழக்கம்போல் அருமையான தகவல் வேலன்.//
நன்றி நண்பரே...தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.
Chitra கூறியது...
:-)//
நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.
pashameed கூறியது...
தொழுகைக்கான நேரம் செட் செய்யும் சாப்ட்வேர் அருமை. இசுலாமிய சகோதரர்களுக்கு இது போன்ற சாப்ட்வேர் இருந்தால் போடவும்.//
நன்றி நண்பரே..பதிவிடுகின்றேன்.வாழ்க வளமுடன்,
வேலன்.
எஸ்.எஸ்.பூங்கதிர் கூறியது...
சார், உங்களைப்பார்த்து பதிவுலகத்துக்கு வந்தவன் நான். பத்திரிகைகளில் பிரபலமான என்னால் பதிவுலகில் பிரபமாக முடியவில்லை. நான்கைந்து முறை முறச்சி செய்து தோற்றுப் போய் இப்போது என் நண்பன் சி.பி. செந்தில்குமாரின் தூண்டுதல் பேரில் மீண்டும் பதிவுப் போட வந்துள்ளேன். என் பதிவைப் பார்த்து பிடித்திருந்தால் மேற்கொண்டு நான் என்னென்ன செய்யவேண்டும் என்று அறிவுரைகளைச் சொன்னால் நான் உங்களுக்கு மிகவும் கடமைப் பட்டவானாய் இருப்பேன் நன்றி!
http://poonkadir.blogspot.com//
பார்த்தேன். நண்பரே...தங்கள் மெயில் முகவரி அனுப்பவும். தகவல்கள் தருகின்றேன். வாழ்க வளமுடன்,
வேலன்.
very nice software
Post a Comment