வேலன்:-போல்டர்களை வேண்டிய நிறத்திற்கு மாற்ற


விதவிதமான கலர்களில் போடும் கோலத்தினை ரங்கோலி கோலம் என்கின்றோம். அதுபோல நமது கம்யூட்டரில் உள்ள போல்டர்களுக்கும் விதவிதமான கலர்களை தரலாம். இதன் மூலம் குறிப்பிட்ட பைல்களுக்கு இந்த நிறம்தான் என முடிவு செய்யும்போது தேடுவதற்கு நமக்கு வசதியாக இருக்கும். உதாரணமாக போட்டோக்களுக்கு நாம் சிகப்பு நிறத்தினை வைத்துவிட்டால் போட்டோ உள்ள போல்டர்கள் எல்லாம் சிகப்பு நிறம் என கண்டுகொள்ளலாம். அதைப்போலவே நமது வீட்டில்உள்ள குழந்தைகளுக்கும் அவர்கள் சம்பந்தப்பட்ட போல்டர்களுக்குஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிறம் என நிறங்களை கொடுத்துவிட்டால் அவர்கள் பைல்களின் போல்டர்களை தேட வசதியாக இருக்கும்.1.5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் https://www.folderico.com/செய்யவும்.இதனை இன்ஸ்டால்  செய்தபின்னர் நீங்கள் உங்கள் கணிணியில் உள்ள போல்டரை ரைட்கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வேண்டிய நிறத்தினை நீங்கள் கிளிக் செய்யவும்.


ஒவ்வொரு போல்டர்களுக்கும் விதவிதமான வண்ணங்கள் கொடுத்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

நீங்களும் உங்களது  போல்டர்களுக்கு வண்ணங்கள் கொடுத்துப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
 வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

MARI The Great said...

பகிர்வுக்கு நன்றி நண்பா!

Anonymous said...

Velan sir,please send copy of ஆங்கிலம் எளிதில் கற்க பாடம் to my mail: vetdeva03@rediffmail.com.
Thank you

திண்டுக்கல் தனபாலன் said...

மிக்க நன்றி சார்... வாழ்த்துக்கள்...

வேலன். said...

வரலாற்று சுவடுகள் said...
பகிர்வுக்கு நன்றி நண்பா!ஃஃ

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

Anonymous said...
Velan sir,please send copy of ஆங்கிலம் எளிதில் கற்க பாடம் to my mail: vetdeva03@rediffmail.com.
Thank you
முன்னரே பதிவிட்டுள்ளேன்நண்பரே..எனது முதல் 50 பதிவுகளுக்குள் உங்களுக்கு கீடைக்கும்..வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
மிக்க நன்றி சார்... வாழ்த்துக்கள்...ஃஃ

நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...