பொதுவாக நாம் தமிழ் ஆங்கிலம் மற்றும் சிலர் இந்தி அறிந்துவைத்திருப்பார்கள். புதிய மொழியில் வார்த்தைகள் இருந்தால்அதனை மொழிபெயர்க்க தெரியாது. இந்த கூகுள் வழங்கும் டிரான்ஸ்லேட்டரில் நாம் சுமார் 60 மொழிகளை சுலபமாக மொழிமாற்றம் செய்துகொள்ளலாம். 4 எம்.பிகொள்ள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் தட்டச்சு செய்யவேண்டிய மொழியையும் மொழிமாற்றம்செய்யவேண்டிய மொழியையும் தேர்வு செய்யவும்.பின்னர் இதில் உள்ள விண்டோவில் வார்த்தைகளை தட்டச்சு செய்யவும். நான் தமிழ்கம்யூட்டர் என்பதனை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்துள்ளேன். பிறகு இதில் மேல்புறம் உள்ள டிரான்ஸ்லேட் பட்டனை கிளிக் செய்யவும்.சில நொடிகள் காத்திருக்கவும்.
மொழிமாற்றம் செய்த வார்த்தை நமக்கு கீழே உள்ள விண்டோவில் கிடைககும்.Swap Language என்கின்ற வசதி கொடுத்துள்ளார்கள். நாம் நமது மொழியை உல்டாவாக மாற்றிக்கொள்ளலாம்.இந்திய மொழிகளில் இந்தி மட்டுமே கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பின்குறிப்பு:-
இன்று Limca ஒன்று வாங்கினேன்.பார்த்தால் Maaza பாட்டிலில் லிம்கா..Maaza புது ப்ளேவர் போட்டுள்ளார்கள் என நினைத்தேன். கடைக்காரரை கேட்டால் அவ்வாறு புது டிரிங்ஸ் வரவில்லை என்று சொன்னார்...படங்கள் கீழே
பிறகு தான தெரிந்தது. Maaza பாட்டிலில் Limca கூல்டிரிங்ஸை நிரப்பிஉள்ளார்கள். சோதனை செய்கையில் அவர்கள் பார்த்திருக்கனும்.ஆனால் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.பாட்டில் மாறியிருந்தால் பரவாயில்லை..இதுவே பாட்டிலில் வேறு ஏதாவது விழுந்திருந்து கவனிக்காமல் விட்டிருந்தால்.....?
வாழ்க வளமுடன்.
வேலன்.
8 comments:
தெரிந்ததுதான் என்றாலும் பகிர்வுக்கு நன்றி
thanks for sharing, this is against the consumer rights, label should not be different from the contents
அண்ணா ,வணக்கம் அது எப்படி உங்க கண்களுக்கு மட்டும் தப்பு தென்படுகிறது .கண்டிக்க வேண்டிய தவறு ! பகிர்வுக்கு நன்றி அண்ணா !
நன்றி...
1) http://translate.google.com/
2) http://www.google.com/transliterate/Tamil
இதே போதுமே...
Kamalakkannan c said...
தெரிந்ததுதான் என்றாலும் பகிர்வுக்கு நன்றிஃஃ
நன்றி கமலக்கண்ணன் சார்..
வாழக்வளமுடன்.
வேலன்.
nagoreismail said...
thanks for sharing, this is against the consumer rights, label should not be different from the contents
ஆமாம் சார்...இருந்தும் என்ன செய்வது?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்கவளமுடன்
வேலன்.
sakthi said...
அண்ணா ,வணக்கம் அது எப்படி உங்க கண்களுக்கு மட்டும் தப்பு தென்படுகிறது .கண்டிக்க வேண்டிய தவறு ! பகிர்வுக்கு நன்றி அண்ணா !
நன்றி சக்தி சார்...சிறிய நிறுவனங்கள் தவறு செய்யலாம்.பெரிய நிறுவனங்கள் செய்யலாமா?
வாழ்க வளமுடன்
வேலன்.
திண்டுக்கல் தனபாலன் said...
நன்றி...
1) http://translate.google.com/
2) http://www.google.com/transliterate/Tamil
இதே போதுமே...ஃஃ
இருக்கட்டுமெ...இதையும் அதனுடன் சேர்த்து பயன்படுத்துங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Post a Comment