வேலன்:-வீடியோபைல்களை அனிமேஷன் படமாக மாற்ற

புகைப்படங்களிலிருந்து நாம் அனிமேஷன் தயாரித்து இருப்போம். ஆனால் வீடியோ பைல்களிலிருந்து அனிமேஷன் தயாரிக்க வீடியோவை ஓடவிட்டு பின்னர் அதில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து மீண்டும் அனிமேஷனாக மாற்றவேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் வீடியோ படத்தை ஓடவிட்டு நேரடியாக நாம் அனிமேஷன் கொண்டுவரலாம். 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உங்கள் கணிணியிலிருந்து வீடியோவை Load video என்பதில் கிளிக் செய்து தேர்வு செய்யவும். அடுத்து எவ்வளவு வினாடிக்கு ஒரு புகைப்படம் தேவை என்பதனை தேர்வு செய்யவும்.அவட்புட் நமக்கு தேவையான அளவிற்கோ அல்லது ஒரிஜினல் அளவிற்கோ தேர்வு செய்யவும்.
 இதிலேயே Effects கொடுத்துள்ளார்கள்.தேவையான Effect தேர்வு செய்துகொள்ளவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 சில வினாடிகளில் நமது வீடியோவானது அனிமேஷன் படமாக மாறிவிடும்.
சேமிக்கவிரும்பும் இடத்தை தேர்வு செய்துகொள்ளவும்.இறுதியாக மாற்றங்கள் தேவைபட்டால் செய்துகொண்டு இதில் உள்ள Run பட்டனை அழுத்ததவும். அவ்வளவுதான்.உங்களுக்கான வீடியோவில் தயாரான அனிமேஷன் ரெடி. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...