வேலன்:-ePub பைல்களை PDF-ஆக கன்வர்ட் செய்ய

e-Pub வகை பைல்களை நாம் அதற்காக உள்ள e-Pub ரீடரில்தான் படிக்க முடியும். ஆனால் எல்லோரிடமும் அந்த ரீடர் இருக்காது அல்லவா..அதனால் நம்மிடம் உள்ள e-Pub புத்தககங்களை பிடிஎப் ஆக மாற்றிக்கொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 4 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக் குகீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும. 
இதில் இரண்டு விதமான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்களிடம் உள்ள e-Pub பைல்களை பிடிஎப்பாக மாற்றுவதற்கும் உங்கள் எச்டிஎம.எல் பைல்களை பிடிஎப்பாக மாற்றுவதற்கும் இரண்டு டேப்புகள் கொடுத்திருப்பார்கள்.நாம் முதலில் e-Pub பைலினை பிடிஎப்பாக மாற்றுவதை காணலாம்.இதில் உள்ள ஆட் பைலில் உங்களிடம் உள்ள e-Pub தேர்வு செய்யவும்.
இதில் உள்ள நெக்ஸ் அழுத்தவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.உங்களது பைல் எங்கு சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தை தேர்வு செய்யவும். அடுத்து இதில் பேஜ் அளவு - பாண்ட்களின்அளவு -பேஜ் உயரம்,செட் செய்துகொள்ளவும்.
உங்கள் ரீடரின் அளவினை இதில் உள்ள ஸ்கோரலை கிளிக் செய்து தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்.



இறுதியாக மீண்டும் நெக்ஸ் கிளிக் செய்யவும.உங்களுக்கான e-Pub பைலானது பிடிஎப் பைலாக மாறிவிட்டிருக்கும.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
இதனைப்போலவே எச்டிஎம்எல் பைலினையும் நாம் பிடிஎப் பைலாக மாற்றிவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.                   வாழ்க வளமுடன்                                                                                                                             வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள பகிர்வு... நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...