வேலன்:-வீடியோ படங்களை 3டி வீடியோவாக மாற்ற

சில வருடங்களுக்கு முன்னர் 3 டி எபெக்டில் மைடியர் குட்டி சாத்தான் என்று ஒரு படம் வந்து அட்டகாசமாக ஒடியது. அதுபோல நம்மிடம் உள்ள வீடியோ படங்களை 3 டி படமாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 33 எம்.பி. கொள்ளளவு கொணடஇதனை பதிவிறக்கம்  செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உ ங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் 2டி யிலிருந்து 3டி.3டியிலிருந்து 3 டி.3டியிலிருந்து 2டி என மூன்று விதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். நமக்குதேவையானதை தேர்வு செய்யவும். நான் 2டியிலிருந்து 3டியாக மாற்றும் ஆப்ஷனை தேர்வு செய்துள்ளேன்.இதில் நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும். பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் நான்குவிதமான மாடல்கள்கொடுத்துள்ளார்கள்.மேலும் 3டியின் அளவினையும் அதிகரி்த்துக்கொள்ள  இதில் உள்ள ஸ்லைடரை நகர்த்தி கொள்ள்லாம்.

இதில் உள்ள அவுட்புட் செட்டிங்ஸ் கிளிக் செய்து நமக்கு தேவையான பார்மெட்டினை தேர்வ செய்துகொள்ளலாம்.

 ஒ.கே.கொடுத்தபின்னர் நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.நமது வீடியோ கன்வர்ட்் ஆவதை காணலாம்.
 நமது வீடியோ கன்வர்ட் ஆகி முடிந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நாம் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் நமக்கான வீடியோவானது 3டி வீடியோ படமாக மாறிஉள்ளதை காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

Anonymous said...

எங்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாது, மிக அருமையான மென்பொருட்களை இணையத்தில் தேடி கண்டுபிடித்து பதிவிட்டு வருகின்றீர்கள். கூடவே நிறுவி செயல் படுத்தி அதனை உபயோகிப்பது எப்படி என்பதெல்லாம் பதிவு செய்கின்றீர்கள். மிக்க நன்றி.
ஒரு வேண்டுகோள், மென்பொருள் பற்றி பதிவிடும் போது அது இலவசமா அல்லது டிரையல் வெர்ஷனா என்பதனையும் குறிப்பிட்டால், தேவைக்கேற்ப பதிவிறக்கம் செய்ய முடியும்.

சிவம் said...

திரு.வேலன் அவர்களுக்கு உங்கள் தளத்தில் பயனுள்ள பல தகவல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். உங்கள் வலைப்பூவில் குறிப்பிடும் பல மென்பொருட்களை தரவிறக்கிப் பயன்படுத்தி பலனடைந்து வருகிறேன். அதற்கு என் மனப்பூர்வமான நன்றிகள். போட்டோக்களை கார்ட்டூனாக அல்லது கிளிப் ஆர்ட்டாக மாற்ற எதுவும் மென்பொருள் இருந்தால் சொல்லுங்கள் சார். எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி
ஆர்.எஸ்.எம். தேவதானப்பட்டி.

வேலன். said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...எனது முந்தைய பதிவுகளில் இவ்வாறு குறிப்பிட்டுவந்தேன் நடுவில் விட்டுவிட்டேன். இனி தொடர்ந்து குறிப்பிடுகின்றேன்.வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

sivam said...
திரு.வேலன் அவர்களுக்கு உங்கள் தளத்தில் பயனுள்ள பல தகவல்களைத் தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். உங்கள் வலைப்பூவில் குறிப்பிடும் பல மென்பொருட்களை தரவிறக்கிப் பயன்படுத்தி பலனடைந்து வருகிறேன். அதற்கு என் மனப்பூர்வமான நன்றிகள். போட்டோக்களை கார்ட்டூனாக அல்லது கிளிப் ஆர்ட்டாக மாற்ற எதுவும் மென்பொருள் இருந்தால் சொல்லுங்கள் சார். எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். நன்றி
ஆர்.எஸ்.எம். தேவதானப்பட்டி.

புகைப்படங்களை கார்டடுனாக மாற்றுவது குறித்து நான் ஏற்கனவே நிறைய பதிவிட்டுள்ளேன் நண்பரே..எனது முந்தைய பதிவுகளில் பார்க்கவும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...