வேலன்:-புகைப்படங்களை வீடியோ பைல்களாக மாற்ற

நமது இல்லங்களில் நடைபெறும் பெரிய பெரிய விஷேஷங்களை நாம் வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுப்போம். அதற்கென உள்ள கடைகளில் கொடுத்து வேலைகளை செய்துகொள்வோம்.ஆனால் நமது இல்லங்களில நடைபெறும் சின்ன சின்ன விஷேஷங்களுக்கு நாம் கடைக்கு சென்று ஆர்டர் கொடுத்தால் கட்டுபடியாகாது. நாமே நமது புகைப்படங்களை வீடியோவாக மாற்றவதற்கும் சிலைட்ஷோ கொண்டுவருவதற்கும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நம்மிடம் உள்ள் புகைப்படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்யவும்.புகைப்படங்கள் தேர்வு ஆகிவிடும். நீங்கள் கிளிக் செய்யும் புகைப்படம் வலதுபுற விண்டோவில் பெரியதாக ப்ரிவியூ தெரியும்.
புகைப்படங்களை டிராப் அன்ட் டிராக் முறையில் இழுத்துவந்து கீழே உள்ள டைம்லைன் விண்டோவில் விடவும். உங்களுக்கு புகைப்படங்கள் வரிசையாக வரும். பிறகு இதில் உள்ள ப்ராஜெக்ட் ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Main.Audio.Templates ஆகிய மூன்று டேப்புகள் ஓப்பன் ஆகும். இதில் உள்ள மெயின் கிளிக் செய்திட உங்களுக்கு புகைப்படத்தின் அளவு மற்றும் ஸ்லைட் டியூரஷன் டைம் மற்றும் டிரான்ஸ்ஷக்ஷன் டைம் கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள ஆடியேர் தேர்வு செய்து நம்மிடம் உள்ள நமக்கு விருப்பமான பாடலினை தேர்வு செய்யவும்.இறுதியாக ஓ.கே.தரவும்.
உங்களுக்கான பணி நடைபெறுகையில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இறுதியாக இதில் உள்ள பப்ளிஷ் கிளிக் செய்திட நமக்கு யூடியூப் மற்றும் ஏவிஐ ஆப்ஷன் கிடைக்கும் நமக்கு தேவையானதை கிளிக் செய்திட நமக்கான வீடியோ புகைப்படம் கிடைக்கும. யூடியூப் பில் பதிவேற்றம் செய்திட நாம் யூடியூப் அக்கெவுண்ட்டில் நுழைந்து பதிவேற்றம் செய்யலாம். இது முற்றிலும் இலவச சாப்ட்வேர் ஆகும்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் 
வேலன்.

பின்குறிப்பு:- 

கல்வி.சமையல்.மருத்துவம்.ஆன்மீகம்.தத்துவம் என பல்வேறு தலைப்புகளில் பிடிஎப் வடிவில் நிறைய புத்தகங்கள் கைவசம் உள்ளன.நீங்கள் விரும்பினால் ஒவ்வொன்றாக பதிவிடுகின்றேன்.என்ன சொல்கின்றீர்கள்..?  

உங்கள் மேலான பதில்களை எதிர்பார்த்து...
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

9 comments:

பொன் மாலை பொழுது said...

நாங்க இன்னாத்த சொல்லுவோம் மாப்பு,
போட்டு வெச்சிகினா எடுத்துகினு போவோம் அக்காங்!


ஆனந்த் வராம நல்லாவே இல்ல மாப்ள,
அந்த குண்டு கிட்ட கொஞ்சம் சொல்லுங்க ஒய்.

indrayavanam.blogspot.com said...

உங்கள் பதிவு மூலமாக நிறைய சாப்ட்வேர் எடுத்து பயன்படுத்தி பயனடைந்துள்ளேன் ... இந்த பதிவு மிக பயன்ள்ளது மிக்க நன்றி.

dharumaidasan said...

SIR, KINDLY ARRANGE TO PUBLISH ALL YOUR VALUABLE COLLECTIONS WITH REGULAR AND PERIODICALLY SCHEDULE
BECAUSE ALL YOUR FRIENDS AND RELATIVES ARE SOME MORE BUSY.
WE EXPECT FROM YOU ONLY
THANK YOU
WITH WARM REGARDS
DHARUMAIDASDAN
CHENNAI -17

mdniyaz said...

திரு வேலன் சார்,
நல்ல முயற்சி பதிவு செய்யுங்கள் அவ்வபோது பழைய போட்டோ ஷாப் பாடத்தையும் மறந்து விடவேண்டாம்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

வேலன். said...

Blogger Manickam sattanathan said...
நாங்க இன்னாத்த சொல்லுவோம் மாப்பு,
போட்டு வெச்சிகினா எடுத்துகினு போவோம் அக்காங்!


ஆனந்த் வராம நல்லாவே இல்ல மாப்ள,
அந்த குண்டு கிட்ட கொஞ்சம் சொல்லுங்க ஒய்.ஃஃ

நன்றி மாம்ஸ்...உங்க குண்டு செங்கல்பட்டுக்கு வீடுமாற்றி சென்றுவிட்டார்...தங்கள் வருகையையும் விசாரிப்பையும் அவரிடம் ்தெரிவிக்கின்றேன். தங்கள் வருகைக்கு நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

indrayavanam.blogspot.com said...
உங்கள் பதிவு மூலமாக நிறைய சாப்ட்வேர் எடுத்து பயன்படுத்தி பயனடைந்துள்ளேன் ... இந்த பதிவு மிக பயன்ள்ளது மிக்க நன்றி.

நன்றி நண்பரே...வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Blogger dharumaidasan said...
SIR, KINDLY ARRANGE TO PUBLISH ALL YOUR VALUABLE COLLECTIONS WITH REGULAR AND PERIODICALLY SCHEDULE
BECAUSE ALL YOUR FRIENDS AND RELATIVES ARE SOME MORE BUSY.
WE EXPECT FROM YOU ONLY
THANK YOU
WITH WARM REGARDS
DHARUMAIDASDAN
CHENNAI -17ஃஃ··ஃஃ நேரம் கிடைக்கும் சமயம் பதிவிடுகின்றேன்.மின்சாரமும் சமயத்தில் கைவிட்டுவிடுகின்றது.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Blogger TEX WILLER said...
தமிழில் இருப்பின் நலம்ஃ தமிழில் அவ்வளவாக இல்லை. இருப்பினும் பதிவிடுகின்றேன்.தங்கள் வருகை்ககும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

mdniyaz said...
திரு வேலன் சார்,
நல்ல முயற்சி பதிவு செய்யுங்கள் அவ்வபோது பழைய போட்டோ ஷாப் பாடத்தையும் மறந்து விடவேண்டாம்.
அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்ஃ மற்க்கவில்லை முஹம்மது நியாஜ் சார்..தங்களுக்காகவே திங்கள் அன்று போட்டோஷாப் பற்றி பதிவிடுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...இனிய ரம்ஸாம் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுட்ன வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...