இணையத்தில் புகைப்படங்களை பார்க்கும் சமயம் பதிவிறக்கம் செய்யவிரும்புவோம். ஒரே பொருளின் விதவிதமான புகைப்படங்கள் நமக்கு தேவைப்படும்.அதை ஒவ்வொன்றாக தேர்வு செய்து அதனை ஒவ்வொன்றாக பதிவிறக்கம் செய்யவேண்டும். அவ்வாறு சிரமப்படாமல் அனைத்து படங்களையும் ஒரே கிளிக்கில் பதிவிறக்கம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் விரும்பும் படத்தின் யூஆர்எல் முகவரியை தேர்வு செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.நீங்கள் தேர்வு செய்த முகவரியில் உள்ள அனைத்து படங்களும் உங்களுக்கு ப்ரிவியூவாக தெரியும். கோடைக்காலம் ஆனதால் இங்கு ஐஸ்கிரீம்களின் புகைப்படங்களை தேர்வு செய்துள்ளேன்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள Configuration கிளிக் செய்திட நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான செட்டிங்ஸ் நாம் விருப்பம்போல அமைத்துக்கொள்ளலாம்.நாம் யூஆர்எல் தேர்வு செய்ததும் உங்கள் புகைப்படங்கள் எண்ணிக்கை தெரியவரும்.இதில மொத்த புகைப்படங்கள் தெரியவரும். இதில் ஒவவொரு புகைபடங்களும் நமக்கு டவுண்லோடு ஆகஆரம்பிக்கும்.
நாம் இறுதியாக தேர்வு செய்த இடத்தில் சென்று பாரத்த்தால் நாம்தேர்வு செய்த யூஆர்எல் முகவரியில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் டவுண்லோடு ஆகிஉள்ளதை நாம் காணலாம். பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
9 comments:
அனைவருக்கும் தேவைப்படும்... நன்றி...
தங்களின் தகவலுக்கு :
http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/Speed-Wisdom-6.html
வேலன் சார் ,உங்கள் போட்டஷோப் பாடங்கள் மற்றும் பதிவுகள் வழியாக நானும் என் மகளும் போட்டஷோப் கற்றுவருகிறோம் மனமார்ந்த நன்றிகள் .
நாங்கள் Photoshop Portable-cs6 பயன்படுத்திக்கிறேன் அதில் தமிழில் (unicode ,இ கலப்பை,அழகி )பயன்படுத்தி தட்டச்சு செய்தால் தப்புதப்பாக வருகிறது என்ன செய்ய வேண்டும் இன்னமும் பல சந்தேகங்கள் உள்ளது பிறகு கேட்கிறேன் என் மகளின் விடுமுறையில் உங்கள் போட்டஷாப் பாடங்கள் மிகவும் பயன் உள்ளது நன்றி.
நல்ல தகவல்...
பகிர்வுக்கு நன்றி...
திண்டுக்கல் தனபாலன் said...
அனைவருக்கும் தேவைப்படும்... நன்றி...ஃஃ
நன்றி தனபாலன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
திண்டுக்கல் தனபாலன் said...
தங்களின் தகவலுக்கு :
http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/Speed-Wisdom-6.html
தகவலுக்கு நன்றி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
Thomas Ruban said...
வேலன் சார் ,உங்கள் போட்டஷோப் பாடங்கள் மற்றும் பதிவுகள் வழியாக நானும் என் மகளும் போட்டஷோப் கற்றுவருகிறோம் மனமார்ந்த நன்றிகள் .
நாங்கள் Photoshop Portable-cs6 பயன்படுத்திக்கிறேன் அதில் தமிழில் (unicode ,இ கலப்பை,அழகி )பயன்படுத்தி தட்டச்சு செய்தால் தப்புதப்பாக வருகிறது என்ன செய்ய வேண்டும் இன்னமும் பல சந்தேகங்கள் உள்ளது பிறகு கேட்கிறேன் என் மகளின் விடுமுறையில் உங்கள் போட்டஷாப் பாடங்கள் மிகவும் பயன் உள்ளது நன்றி.ஃஃ
தங்கள் வருகக்கு நன்றி சார்..இகலப்பையை நான் பயன்படுத்துகின்றேன்.அதற்கான பாண்ட்களை முதலில் இன்ஸ்டால் செய்து பின்னர் பயன்படுத்தினால் சரியாக வரும்.தங்கள் மகள் போட்டோஷாப்பில் நிபுணராக வர எனது மனபூர்வமான வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
வேலன்.
சே. குமார் said...
நல்ல தகவல்...
பகிர்வுக்கு நன்றி...ஃஃ
நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
//இகலப்பையை நான் பயன்படுத்துகின்றேன்.அதற்கான பாண்ட்களை முதலில் இன்ஸ்டால் செய்து பின்னர் பயன்படுத்தினால் சரியாக வரும்.தங்கள் மகள் போட்டோஷாப்பில் நிபுணராக வர எனது மனபூர்வமான வாழ்த்துக்கள்//
மிக்க நன்றி வேலன் சார்:)
Post a Comment