வேலன்:-பிடிஎப் கட்டர் -PDF CUTTER

ஆடியோ கட்டர்.வீடியோ கட்டரைப்போல பிடிஎப் பைல்களை கட்  செய்திட இந்த பிடிஎப் கட்டர் பயன்படுகின்றது.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக் குதேவையான பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும். இதில் மூன்று விதமான கட்டிங் ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள்.முதலாவது ஓரு குறிப்பிட்ட பக்கங்கள் முதல் தேவையான பக்கங்கள் வரை தொடர்ச்சியாக கட் செய்திட இதில் முதலில் உள்ள ரேடியோ பட்டனை தேர்வு செய்து தேவையான பக்கங்களை தேர்வு செய்யவேண்டும்;மொத்தமுள்ள  பிடிஎப் பைலில் குறிப்பிட்ட தொகுப்பு (செப்டர்)மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம். அடுத்துள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்திடமொத்தமுள்ள பிடிஎப் பைலில் எந்த எந்த பக்கங்கள் மட்டும் தேவையோ அந்த பக்கங்களின் எண்களை மட்டும் தட்டச்சு செய்து கமா பொட்டு அடுத்து தேவைப்படும் பக்க எண்ணை குறிப்பிடலாம். இறுதியாக உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்திட நீங்கள் தேர்வு செய்திட்ட பிடிஎப் பைல்களில் உள்ள அனைத்து பக்கங்களும் தனிதனி பிடிஎப் பக்கங்களாக தேர்வாகி பிடிஎப் பைல்களாக சேமிப்பதை காணலாம். பயன்படுத்த எளிதாக உள்ளதால் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தேவைப்படும் மென்பொருள்... நன்றி தோழர்...

வேலன். said...

திண்டுக்கல் தனபாலன் said...
தேவைப்படும் மென்பொருள்... நன்றி தோழர்...

நன்றி0 தனபாலன் சார்...
வாழ்கவளமுடன்
வேலன்.

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

நல்ல பதிவு மற்றும் மென்பொருள் நன்றி அண்ணா

தொடரட்டும் உங்களின் இந்த மென்பொருள் சேவை

வேலன். said...

Blogger நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...
நல்ல பதிவு மற்றும் மென்பொருள் நன்றி அண்ணா

தொடரட்டும் உங்களின் இந்த மென்பொருள் சேவை

நன்றி காரத்திகேயன்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...