வேலன்:-டிஸ்பிளேவினை லாக் செய்திட

அலுவலகமாகட்டும் வீடாகட்டும் நாம் கணிணியில் வேலை செய்துகொண்டு இருக்கும் சமயம் அவசர வேலையாக டீ குடிக்கவோ பாத்ரூம் செல்லவோ அல்லது மேலதிகாரியை சந்திக்க செல்கையிலோ நாம் நமது கணிணியின் டிஸ்பிளேவினை லாக் செய்துவிடலாம் இதனால் மற்றவர்கள் நமது கணீணியை பயன்படுத்த முடியாது. 7 எம். பி.கொள்ளளவு கொண்ட இந்த சாபட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். 


இதனை இன்ஸ்டால் செய்கையில் உஙகளுக்கு பாஸ் வேர்ட் கேட்கும். பாஸ்வேர்டினை இரண்டு முறை தட்டச்சு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இப்போது உங்கள் கணிணியை இயக்கவும். நீங்கள் வெளியே செல்வதாக இருந்தால் இந்த சாப்ட்வேரினை இயக்கவும். இப்போது உங்களுக்கு டிஸ்பிளே லாக்கர் என்கின்ற ஸ்கிரீன் கிடைக்கும். நீங்கள் சரியான பாஸ்வேரட் தட்டச்சு செய்தவுடன் உங்களுக்கான டெக்ஸ்டாப் ஓப்பன் ஆகும. குழந்தைகளிடமிருந்தும் அலுவலகத்தில் மற்றவர்களிடம் இருந்தும் உங்கள் கணிணியை சுலபமாக காப்பாற்றலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

1 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்லது.
முயன்று பார்க்கலாம்...
பகிர்வு நன்றி வேலன் சார்.

Related Posts Plugin for WordPress, Blogger...