ஆதார் அடையாள எண் இப்போது அனைத்து அரசு பணிகளுக்கும்அவசியமாகிவிட்டது.ஆதார் அடையாள அட்டையில் உங்களைப்பற்றிய விவரங்கள் சரியாக இல்லையென்றால் ஆன்லைன் மூலம் சரிசெய்து புதிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.ஆன்லைனில் உங்கள் ஆதார் அட்டையை சரிசெய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள் ஆதார் அடையாள அட்டையில் உள்ள பன்னிரண்டு இலக்க எண்ணை உள்ளீடு செய்யவும்.இதில் உள்ள OTP கிளிக் செய்யவும்
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். அதில் உங்கள் கைப்பேசியில் வந்துள்ள எண்ணை உள்ளீடு செய்யவும்..(OTP எண்ணானது உங்களது கைப்பேசிக்கு அனுப்பப்படும் எண்ணாகும்.) பின்னர் லாகின்செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பெயர்.பாலினம்.பிறந்த தேதி.முகவரி.கைப்பேசி எண்.இமெயில் முகவரி போன்றவற்றில் எதனை மாற்றிக்கொள்ள விரும்புகின்றீர்களோ அதற்கு எதிரே கிளிக் செய்யவும்.
பிறந்த தேதி மாற்றுவதாக இருந்தால் DOB என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள காலேண்டர் மூலம் உங்களது சரியான பிறந்த தேதியை தேர்வு செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோஓப்பன் ஆகும். இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக உங்களிடம் உள்ள உங்கள் பள்ளிச்சான்றிதழோ.பிறப்பு சான்றிதழோ.அல்லது ஒரிஜினல் சான்றிதழின் நகலை உங்கள் கணீணியின் மூலம் அப்லோடு செய்யுங்கள்.
உங்களுக்கான ஆதார்அடையாள அட்டையில் விவரம் மாற்றப்பட்டு 15 தினங்களுக்குள் உங்களுடைய கைப்பேசிக்கு தகவல் வரும். நேரில் சென்றோ அல்லது உரிய பணம் செலுத்து அஞ்சல் மூலமோ உங்களுடைய புதிய ஆதார் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
5 comments:
அருமையான பதிவு
what you have said is correct up to the level of uploading of our documents for correction. once you upload within a day you will gat an sms saying your application rejected as the documents mismatch. this i have received for several times and represented to them with email there to i get astreo type answer stating mentioned your details in order /
அவசியமான பகிர்வு....
Ennoda aadhar cardku my mobile number register panla so,how can I get otp for me.....
Ennoda aadhar cardku my mobile number register panla so,how can I get otp for me.....
Post a Comment