புகைப்படங்களை பென்சில் புகைப்படங்களாக மாற்ற இந்த சாப்ட்வேர பயன்படுகின்றது. 13 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add Files மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யவும். இதன் வலதுபுறம் கீழ்கண்ட விண்டோ உள்ளது.
இதில் உள்ள Texture கிளிக் செய்திட கீழ்கண்ட பாப்அப் மெனு கிடைக்கும். இதில் ஸ்கெட்ச் எந்த அளவு வேண்டுமொ அதனை தேர்வு செய்யவும்.
வேண்டிய மாற்றங்கள் செய்தபின்னர் இதில் உள்ள ரன் கிளிக் செய்திட சில நொடிகளில் நமது புகைப்படம் நாம் விரும்பியவாறு பென்சில் புகைப்படமமாக மாறி உள்ளதை காணலாம். கீழே உள்ள புகைப்படத்தினை பாருங்கள்.
இந்த சாப்ட்வேர் மூலம் குறைந்த நேரத்த்தில் அதிகப்படியான புகைப்படங்களை பென்சில் புகைப்படமாக மாற்றிக்கொள்ளளலாம். பயன்படுத்துிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment