Showing posts with label நேரம்.டீ-டைம். Show all posts
Showing posts with label நேரம்.டீ-டைம். Show all posts

வேலன் -நேரத்தை நினைவு படுத்த

வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்களை ஞாபமாக மறந்துவிடுவோம்.தண்ணீர் மோட்டர் போட்டால் ஆப் செய்ய மறந்துவிடுவோம். பாலை அடுப்பில் வைத்து மறந்துவிடுவோம்.அரைமணிநேரம் கழித்து எனக்கு போன் செய் என்று யாராவது சொன்னால் அதனையும் மறந்துவிடுவோம்.இந்த எல்லா வேலைகளையும் இணையத்தில் - கம்யூட்டரில் பணிசெய்கையில் அடிக்கடி நடக்கும்.நேரம்காலம் போவது தெரியாமல் கம்யூட்டரிலே மூழ்கிவிடுவோம். இனி அந்த கவலைவேண்டாம். நமக்கு நமக்கு தேவையான நேரத்தை நினைவுபடுத்த இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படும்.1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை ரன் செய்ததும் உங்களுககு கீழ்கண்ட விண்டோ வரும்.
 இதில் தேவையான நேரத்தை செட் செய்து கடிகாரத்தை ஓட விடுங்கள். குறிப்பிட்ட நேரம் ஆகியதும் உங்களுக்கு அலாரத்துடன் இந்த செய்திகிடைக்கும்.
நேரத்திற்கு டீ சாப்பிட என்று இந்த சாப்ட்வேரை வடிவமைத்துள்ளார்கள். நாம் தண்ணீர் மோட்டர் ஆப் செய்ய - பாலை அடுப்பில் இருந்து இறக்க - போன்செய்ய- என எதற்கு வேண்டுமானாலும் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக்கொள்ளலாம்.நீங்களும் 
பயன்படுத்திப்பாருங்கள். கருததுக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...