Showing posts with label புகைப்படம்.வேலன்.இலவச சாப்ட்வேர்.velan.photo.downloading. Show all posts
Showing posts with label புகைப்படம்.வேலன்.இலவச சாப்ட்வேர்.velan.photo.downloading. Show all posts

வேலன்:-ஒரே சமயத்தில் அதிகமான புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய

இணைய பக்கங்களில் நாம் விதவிதமான -வெவ்வேறு பார்மெட்டுக்களில் புகைப்படங்களை பார்க்கின்றோம். சில இணைய பக்கங்களில் உள்ள அனைத்து புகைப்படங்களும் மிக அருமையாக இருக்கும். அதை ஒவ்வொன்றாக நாம் பதிவிறக்கம் செய்யவேண்டும். அதை விட அந்த பக்கங்களில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் நாம் மொத்தமாக பதிவிறக்கம் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.1.25 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 
 இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள URL  முகவரியில் உங்களுக்கு விருப்பமான இணைய முகவரியை தட்டச்சு செய்யவும். நீங்கள் தட்டச்சு செய்த முகவரி சரியானதுதான என பார்க்க இதில் உள்ள Open URL in Browser கிளிக் செய்தும் இணைய முகவரி நேரடியாக செல்லலாம்.பின்னர் இதில் உள்ள அம்புகுறியை கிளிக் செய்ய நீங்கள் புகைப்படங்களை சேமிக்க விரும்பும் இடத்தை குறிப்பிடவும்.
 இப்போழுது நீங்கள் இதில் உள்ள View Images கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் வலதுபுறம் உள்ள அம்புகுறி புகைப்படத்தின் ஒரிஜினல் பார்மெட்டுக்கு பதிவிறக்கம் ஆகும். இடது புறம் உள்ள மூன்று அம்புகுறியை தேர்வு செய்வது மூலம் புகைப்படத்தை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.
அனைத்து புகைப்படங்களும் பதிவிறக்கம் ஆனதும் உங்களுக்கு Done என தகவல் வரும். அதிகமான புகைப்படங்களை நீங்கள் விரைவில் பதிவிறக்கம் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் உங்களுக்கு பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...